கையளவு கல்லில் சோழ சிற்பியின் காவியம் – புஞ்சை

புரனமைப்பு என்ற பெயரில் பல அருமையான சோழர் கோயில்களை சிதைந்த நிலையில் பார்த்த எங்களுக்கு – புதிதாக எந்த கோயிலுக்கு சென்றாலும் முதல் வேலை கோபுர வாயிலை தாண்டியதும் வெளியில் சென்று பழைய வேலைபாடு ஏதாவது மிஞ்சி இருக்கிறாதா என்று பார்ப்பதே ! அப்படி ஏதாவது தென்பட்டால் குச்சி ஐஸ் கிடைத்த மாணவனைப்போல ஒரு ஆனந்தம் ! அதுவும் அங்கே சோழர் கால சிறு / நுண்ணிய சிற்பம் இருந்துவிட்டால் தேன்மிட்டாய் கிடைத்த மாதிரி தான். அப்படி ஒரு அனுபவம் புஞ்சை நல்துணை ஈஸ்வரம் சென்ற பொது கிடைத்தது.

பொதுவாக அடியில் இருக்கும் சிறு சிற்ப்பங்களை கண்டு கொள்வது எளிது – அவை புராண கதைகளை சொல்லும். இருந்தும் ஒரு சில இடங்களில் மேலே இருக்கும் சிறு தூண்களிலும் நுனின்ய சிற்ப்பங்கள் இருக்கும். கண்ணில் விளக்கெண்ணை விட்டு அவற்றை தேட வேண்டும்.

ஓவியம் தீட்டும் கலைஞர்களிடம் இருப்பதிலேயே எது மிகவும் கடினமான பனி என்று கேட்டால் – மனித உணர்சிகளின் பாவனை – அவற்றை வெளிகொனர்வதே மிகவும் மிகவும் கடினமான காரியம் என்பார்கள்.

நாட்டியம், இசை இவற்றை கல்லில் வடிப்பது ?

இந்த தூணின் ஒவ்வொரு அங்குலமும் அழகு பட செதுக்கிஉலான் அந்த சிற்பி. அந்த சிறு சிறு நகம் அளவு பூத கணங்களின் அசைவுகளில் கூட பாவனை தெரிகிறது.

இந்த வடிவங்களின் அழகு இந்த அளவில், இத்துணை கடினமான ஒரு பாவனையை இவ்வளவு லயத்துடன்
வெளிக்கொணர்ந்ததுதான்.

நண்பர் ஓவியர் முரளிதரன் அழகர் அருமையாக இந்த சிற்ப்பத்தை நமக்கு ஓவியம் மூலம் மேலும் ரசிக்க உதவுகிறார்.

மேளம் வசிக்கும் பெண், அந்த மேளத்தின் கனத்தால் கழ்துப் பட்டை தலையை சற்றே கீழே இழுக்க அதனை ஈடு கொடுக்க தந்து துடையில் அவள் வாத்தியத்தை முட்டு கொடுக்கும் இயல்பான சித்தரிப்பு மிகவும் அருமை.

ஆடல் மங்கை – புடைப்புச் சிற்பம் , அதுவும் அரை அங்குலம் தான் அளவு – அதிலும் டிரும்ப்ஹி பின்புறம் ஆடும் கோலம் ! அந்த அளவிலும் கனக்கச்சிதமான வடிவம், இடுப்பு துணியின் மடிப்பு என்று கலக்குகிறான் கலைஞன்.

பத்தாம் நூற்றாண்டின் முதல் பாதியில் வைத்த சிலை இன்றும் ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் நம்மை நெகிழ்விக்கிறது. இதை பார்த்தாவது இதனை போன்ற மற்ற இடங்களிலும் இருக்கும் சிற்ப அதிசயங்களை நாம் ரசித்து போற்றி பாதுகாக்க குரல் எழுப்ப வேண்டும்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் தூண்களில் உள்ள உன்னத வேலைப்பாடு – இரண்டாம் பாகம்

நாம் முன்பு பார்த்த இரண்டாம் ஸ்ரீரங்கம் தூண் சிற்பம்…அதில் உள்ள காட்சி என்ன வென்று ஆராயலாம். முதுகில் (சரி) பின்னால் இருந்து தாக்கும் பழக்கம் தமிழனுக்கு இல்லை … படங்களை பாருங்கள்….

 

 

முன்னால் இருப்பவன் தமிழ் வீரன் – குடுமி, இடுப்பில் வேட்டி, நெற்றியில் திலகம், கழுத்தில் சங்கிலி, ஆரம் – காதில் குண்டலம், இரு கால்களிலும் சிலம்பு – எல்லாவற்றையும் விட தமிழனுக்கே உரிய முறுக்கிய மீசை ….அந்த முகத்தில் தான் என்ன ஒரு கம்பீரம் மேலிருக்கும் பெண்மணியோ அதைவிட அழகு.. கட்டை விரலில் கூட மோதிரம் அணிந்து, கழுத்தில் ரெட்டை வட சங்கிலி, மாலை, ஆரம் -கையில் வளையல், காலில் முறுக்கிய சிலம்பு, தலையில் ராக்கடி ….. அப்பப்ப்பா ஒரு நடமாடும் நகை கடை – அதைவிட முகத்தில் மயக்கும் மந்தகாச புன்னகை.. பின்னால் இருப்பவர்கள் அன்னியர்கள் – அவர்கள் உடையை சற்று பாருங்கள் – மேல் சட்டை, முழு கால் குழாய் …..தலையில் குல்லா மற்றும் மீசையை பார்த்தல் – இது ஒருவேளை மாலிக் கபூர் அரங்கத்தை சூறை ஆடிய கதை போல உள்ளது.

எனினும் அந்த அம்மணி குடையாய் பிடித்திருப்பது என்னவென்று விளங்கவில்லை – அதே கோவிலின் இன்னொரு தூணில் இதே போல் ( அதே அம்மணி ) தலைக்கு மேல் தூக்கி பிடித்து இருக்கும் சிற்பம் பாருங்கள்….முதல் சிற்பத்தில் இரு புறத்திலும் அழகிய கிளிகள் உள்ளன… அவற்றை வைத்து அவள் ஒரு குறத்தி என்று பல இடங்களில் அடையாளம் கொள்கின்றனர்…


குறத்தி … ஊசி பாசி மணி என்று இருப்பால் – அப்போது இந்த சிலையில் இருக்கும் ஆபரங்கள அனைத்தும் …. !!!! இல்லையேல் அந்த நாளில் குறத்தி ஆட்டத்திற்கு வசூல் அதிகமோ ??


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பெண்களின் கூந்தல்

ஒரு நகைச்சுவையான செய்தி இந்த படத்தை பார்த்தவுடன் நினைவுக்கு வந்தது

( modern!!!!) பெண்களின் கூந்தல் பற்றி எனது ஆசிரியர் சொல்வார் – இந்த காலத்தில் பெண்களின் கூந்தல் நீண்டு வளர்ந்து கழுத்து வரையிலும் வரும் என்று….அந்த நாளில் கூந்தல் என்றால் எது வரை என்று இந்த படத்தில் பாருங்கள் – திரு முல்லைவையில் கோவில் தூண் – நாட்டிய மங்கை….. என்ன ஒய்யாரமாய் நாட்டியம் பயிலும் அழகி….இப்போதெல்லாம் உடையே இடை வரை தான் என்னும் பொது இது போல கற்பனையில் தான் பார்க்க முடியும்…இல்லை இது போல் பழைய சிற்பங்களில் தான் கண்டு களிக்க முடியும்…


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment