Quantcast

காலை நான்கு மணி - கைபேசியில் ஒரு குறுஞ்செய்தி - இன்னும் பதினோரு மணிநேரத்தில் சிலைகள் தாய் மண்ணில் இறங்கும் !! ஆனால் இன்னும் உறுதிபடுத்தபடவில்லை!! நீங்கள் உங்கள் பக்கம் முயற்சி செய்யுங்கள் உறுதி படுத்த !! - அடுத்த பல மணிகள் எப்படி ஓடின என்று எங்களுக்குத் தான் தெரியும் - இரவு பத்து மணி - வெற்றி - டெல்லி வந்து இறங்கிவிட்டன - ஸ்ரிபுரந்தன் நடராஜர் மற்றும் விருத்தாசலம் அர்தனாரி சிலைகள் !! உடனே நண்பர்கள் ஜெசன் அமெரிக்கா மற்றும் மைக்கேல ஆஸ்திரேலியா - இதுவரை நேரில் பார்த்தது கிடையாது - எல்லாமே மின்னஞ்சல் தான் - முதல் முறை கான்பரன்சு கால் போட்டு - ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொண்டோம். கடல் கடந்து எங்களது முயற்சி கண்ட முதல் வெற்றி !!

அடுத்த நாள் பத்திரிகைகளை படிக்கும் பொது தான் தெரிந்தது - வெற்றிக்கு பல தகப்பன்கள் என்று !! இந்த சிலைகளை அடையாளம் காண படங்கள் பெறுவது முதல் - கண்டு பிடித்தவுடன் நடவடிக்கை எடுங்கள் என்று தட்டிய கதவுகள் பல !! அப்போதெல்லாம் பதில் கொடுக்க கூட முடியாத அதிகாரிகள் - இன்று நாங்கள் சாதித்துவிட்டோம் என்று மார் தட்டிக்கொண்டனர். இன்னும் பல ஆயிரம் சிலைகள் களவுபோய் உள்ளன - அவை பற்றியும் நாங்களும் பல தகவல்கள் கொடுத்த வண்ணம் இருக்கிறோம் - இந்த ஊர் கூடி தேர் இழுக்கும் முயற்சி இனிமேலாவது உண்மையான உழைப்பாக வேண்டும் !!

10612956_10201655290263148_8867630180603903533_n

இந்த இரு சிலைகள் வீடு திரும்பிய நிகழ்வு கொண்டாடப்பட்ட வேண்டும் - எதற்க்காக ? இதனை போன்று உலகெங்கிலும் பகிரங்கமாக ஏலம் விடப்படும் நமது சாமி சிலைகளின் அவல நிலை இன்று முதல் மாற வேண்டும். திருடினால் முதுகெலும்பு இல்லாத இந்தியர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்று இருந்த எண்ணம் மாற வேண்டும். இந்தியா ஒரு வல்லரசு - அதன் உடைமைகளை திருடினால் எங்களை போன்ற போராளிகள் விட மாட்டார்கள் என்று அவர்களுக்கு தெரியவேண்டும். பல கோடி ருபாய் கொடுத்தாலும் எங்கள் கடவுள்களை விற்க விட மாட்டோம், இதுவரை கடத்திய சிலைகளை மீட்க்க ஒரு படை உருவாகிறது என்னும் உண்மை அவர்களை தூங்க விடக் கூடாது. முன்பு சிவபுரம் சிலைகளை போல ஒரு சிலையை மட்டும் மீட்டு விட்டு மற்றவைகளை மறந்துவிடும் அவலம் இனி நடக்காது என்று அவர்களுக்கு தெரிய வேண்டும். முறையற்ற வழுக்கு / வாகு வாதங்களால் திருடர்களை தப்பிக்க இனியும் இந்தியா விடாது என்பது உலகுக்கு தெரிய படுத்த வேண்டும்.

அதற்கு ஒரு பெரும் புரட்சி தேவை இல்லை - நமது புலன் விசாரணை பிரிவுகள் தங்கள் வேலையை செவ்வனே செய்தால் போதும். ஒரே ஒரு சிறு உதாரணம் - பாரத பிரதமருக்கு எங்கள் பிறந்த நாள் பரிசு. இன்னும் ஒரு திருடப்பட்ட சிலை பற்றிய குறிப்பு - 2001 அவரது சொந்த மாநிலம் குஜராதில் இருந்து திருடப்பட்ட சிலை. இதில் எங்களுக்கு உதவியது அரசின் முயற்சி அல்ல - எங்களை போன்று இன்னும் ஒரு தனி நபர் - திரு கிரிட் மான்கோடி அவர்களது இணைய தளம் வெளியிட்ட திருட்டு பற்றிய குறிப்பு. இதோ …

Hindu god Brahma with his consort Brahmani stolen from the open air museum at the Ranki Vav or the Queen’s stepped well (underground reservoir) at Patan, Gujarat, in 2001.

It will be seen in the attached photograph received from the Vadodara Circle of the Archaeological Survey of India that Brahma carries his usual attributes such as a sacrificial ladle and a manuscript. The panel measures about one metre in height, width 57-58 cm. and depth 45 cm (3′ x 2′ x 1.5′), and is datable to the twelfth century.

brahma-brahmani

The Queen’s stepped well is a monument of national importance as declared by the Archaeological Survey of India. (இந்த ஆண்டு இது யுநெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிட தக்கது !!)

First Information Report (FIR) of the theft was lodged at the Patan City police station immediately after the theft, No. 230/2001 dated 10 November 2001. The sculpture has still not been recovered. Since the theft occurred ten years ago it may have already appeared in the art market.

இதோ - அதே களவு போன சிலை - 2006 லண்டன் கலை விழாவில் விலைக்கு இருப்பதை பாருங்கள்.

01

மீண்டும் அதே நிறுவனம் 2011 இல் மீண்டும் அதனை விற்க முயற்சி செய்துள்ளது - இணைப்பில் இரெண்டாவது படம்.
It further looks like it was unsold and was exhibited again in London in 2011 second photo.

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பல சிலைகள் லண்டன் சென்று அங்கே விலைபோவது பற்றி பரபரப்பு தகவல்களை - திரு பீட்டர் வாட்சன் அவர்களது நூலில் தெளிவாக வெளியிட்டார். அந்நாளில் இது பல பத்திரிகைகளிலும் வெளிவந்தது - இவற்றை பார்த்துவிட்டாவது நமது ஆட்கள் அங்கே தங்கள் பார்வையை செலுத்தி இருந்தால் இந்த திருட்டை பல ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்து சிலையை மீட்டு வந்திருக்கலாம் !! அப்போது கோட்டை விட்டு விட்டோம்.

உடனே பிரதமர் இந்த பிறந்த நாள் பரிசை லண்டனில் இருந்து இந்திய மீட்டு வர முயற்சி எடுக்கஇ ன்றைய நன்னாளில் எங்கள் வேண்டுகோள் ஒன்றினை விடுக்கின்றோம். வெற்றி நமதே!!

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: 

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை செவ்வாய்க் கிழமை, செப்டம்பர் 16th, 2014 அன்று 8:07 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 11 மறுமொழிகள்

  1  

Really Modi Rocks, All Shocked..!! Proud to be an indian, Great men really..Thanks for sharing this.

செப்டம்பர் 21st, 2014 at 0:06
  2  

Well said P.I.S Vijay! True, we have to honour those unsung heroes too. Kindly profile such people more so that the world knows them. Thanks for the relevation.

நவம்பர் 11th, 2014 at 22:51
lakshmi
  3  

விஜய் சார் ,இரண்டு மாதங்களாக பதிவிடவில்லையே ஏன் ? தங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம.

டிசம்பர் 2nd, 2014 at 16:45
Amit
  4  

I am deeply saddened by the state of ASI and History studies in India. History is taught like robots with just dates to remember. There is absolutely no sense of history amongst the general populace. What some of you are doing is worth a Bharat Ratna but then who cares…

பெப்ரவரி 12th, 2015 at 11:50
  5  

lsi-goa hotel…

Poetry In Stone « Blog Archive » A Gift to the Indian Prime Minister - a theft from Gujarat in 2001 solved…

ஜூலை 27th, 2015 at 15:13
  6  

poppit online…

Poetry In Stone « Blog Archive » A Gift to the Indian Prime Minister - a theft from Gujarat in 2001 solved…

ஜூலை 29th, 2015 at 13:20
  7  

lsi-kerala tour…

Poetry In Stone « Blog Archive » A Gift to the Indian Prime Minister - a theft from Gujarat in 2001 solved…

ஆகஸ்ட் 7th, 2015 at 13:12
  8  

Boland and Felch are absolutely outstanding. A success often claims as victims the true workers when those with political machines to work for them claim the success hard earned by others.

செப்டம்பர் 17th, 2015 at 8:56
Krishna
  9  

We need a website where we can provide links to statues etc that come up for auction/dealers and people can start sending emails to auction houses and consulates/embassies asking for legitimacy. A concerted effort can prevent auction houses/dealers freely listing the statues with no regard. We should work to stop the Asian week that in my opinion is really a disguised black market for Asian antiques.

மார்ச் 20th, 2016 at 23:18
  10  

It seems to me that the theft of Indian artifacts must cease. After all, this can lead to the impoverishment of the country’s culture.

ஜூன் 28th, 2016 at 14:56
  11  

Asian week that in my opinion is really a disguised black market for Asian

ஜூலை 5th, 2016 at 19:32

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி