காலை நான்கு மணி – கைபேசியில் ஒரு குறுஞ்செய்தி – இன்னும் பதினோரு மணிநேரத்தில் சிலைகள் தாய் மண்ணில் இறங்கும் !! ஆனால் இன்னும் உறுதிபடுத்தபடவில்லை!! நீங்கள் உங்கள் பக்கம் முயற்சி செய்யுங்கள் உறுதி படுத்த !! – அடுத்த பல மணிகள் எப்படி ஓடின என்று எங்களுக்குத் தான் தெரியும் – இரவு பத்து மணி – வெற்றி – டெல்லி வந்து இறங்கிவிட்டன – ஸ்ரிபுரந்தன் நடராஜர் மற்றும் விருத்தாசலம் அர்தனாரி சிலைகள் !! உடனே நண்பர்கள் ஜெசன் அமெரிக்கா மற்றும் மைக்கேல ஆஸ்திரேலியா – இதுவரை நேரில் பார்த்தது கிடையாது – எல்லாமே மின்னஞ்சல் தான் – முதல் முறை கான்பரன்சு கால் போட்டு – ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொண்டோம். கடல் கடந்து எங்களது முயற்சி கண்ட முதல் வெற்றி !!
அடுத்த நாள் பத்திரிகைகளை படிக்கும் பொது தான் தெரிந்தது – வெற்றிக்கு பல தகப்பன்கள் என்று !! இந்த சிலைகளை அடையாளம் காண படங்கள் பெறுவது முதல் – கண்டு பிடித்தவுடன் நடவடிக்கை எடுங்கள் என்று தட்டிய கதவுகள் பல !! அப்போதெல்லாம் பதில் கொடுக்க கூட முடியாத அதிகாரிகள் – இன்று நாங்கள் சாதித்துவிட்டோம் என்று மார் தட்டிக்கொண்டனர். இன்னும் பல ஆயிரம் சிலைகள் களவுபோய் உள்ளன – அவை பற்றியும் நாங்களும் பல தகவல்கள் கொடுத்த வண்ணம் இருக்கிறோம் – இந்த ஊர் கூடி தேர் இழுக்கும் முயற்சி இனிமேலாவது உண்மையான உழைப்பாக வேண்டும் !!
இந்த இரு சிலைகள் வீடு திரும்பிய நிகழ்வு கொண்டாடப்பட்ட வேண்டும் – எதற்க்காக ? இதனை போன்று உலகெங்கிலும் பகிரங்கமாக ஏலம் விடப்படும் நமது சாமி சிலைகளின் அவல நிலை இன்று முதல் மாற வேண்டும். திருடினால் முதுகெலும்பு இல்லாத இந்தியர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்று இருந்த எண்ணம் மாற வேண்டும். இந்தியா ஒரு வல்லரசு – அதன் உடைமைகளை திருடினால் எங்களை போன்ற போராளிகள் விட மாட்டார்கள் என்று அவர்களுக்கு தெரியவேண்டும். பல கோடி ருபாய் கொடுத்தாலும் எங்கள் கடவுள்களை விற்க விட மாட்டோம், இதுவரை கடத்திய சிலைகளை மீட்க்க ஒரு படை உருவாகிறது என்னும் உண்மை அவர்களை தூங்க விடக் கூடாது. முன்பு சிவபுரம் சிலைகளை போல ஒரு சிலையை மட்டும் மீட்டு விட்டு மற்றவைகளை மறந்துவிடும் அவலம் இனி நடக்காது என்று அவர்களுக்கு தெரிய வேண்டும். முறையற்ற வழுக்கு / வாகு வாதங்களால் திருடர்களை தப்பிக்க இனியும் இந்தியா விடாது என்பது உலகுக்கு தெரிய படுத்த வேண்டும்.
அதற்கு ஒரு பெரும் புரட்சி தேவை இல்லை – நமது புலன் விசாரணை பிரிவுகள் தங்கள் வேலையை செவ்வனே செய்தால் போதும். ஒரே ஒரு சிறு உதாரணம் – பாரத பிரதமருக்கு எங்கள் பிறந்த நாள் பரிசு. இன்னும் ஒரு திருடப்பட்ட சிலை பற்றிய குறிப்பு – 2001 அவரது சொந்த மாநிலம் குஜராதில் இருந்து திருடப்பட்ட சிலை. இதில் எங்களுக்கு உதவியது அரசின் முயற்சி அல்ல – எங்களை போன்று இன்னும் ஒரு தனி நபர் – திரு கிரிட் மான்கோடி அவர்களது இணைய தளம் வெளியிட்ட திருட்டு பற்றிய குறிப்பு. இதோ …
Hindu god Brahma with his consort Brahmani stolen from the open air museum at the Ranki Vav or the Queen’s stepped well (underground reservoir) at Patan, Gujarat, in 2001.
It will be seen in the attached photograph received from the Vadodara Circle of the Archaeological Survey of India that Brahma carries his usual attributes such as a sacrificial ladle and a manuscript. The panel measures about one metre in height, width 57-58 cm. and depth 45 cm (3′ x 2′ x 1.5′), and is datable to the twelfth century.
The Queen’s stepped well is a monument of national importance as declared by the Archaeological Survey of India. (இந்த ஆண்டு இது யுநெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிட தக்கது !!)
First Information Report (FIR) of the theft was lodged at the Patan City police station immediately after the theft, No. 230/2001 dated 10 November 2001. The sculpture has still not been recovered. Since the theft occurred ten years ago it may have already appeared in the art market.
இதோ – அதே களவு போன சிலை – 2006 லண்டன் கலை விழாவில் விலைக்கு இருப்பதை பாருங்கள்.
மீண்டும் அதே நிறுவனம் 2011 இல் மீண்டும் அதனை விற்க முயற்சி செய்துள்ளது – இணைப்பில் இரெண்டாவது படம்.
It further looks like it was unsold and was exhibited again in London in 2011 second photo.
இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பல சிலைகள் லண்டன் சென்று அங்கே விலைபோவது பற்றி பரபரப்பு தகவல்களை – திரு பீட்டர் வாட்சன் அவர்களது நூலில் தெளிவாக வெளியிட்டார். அந்நாளில் இது பல பத்திரிகைகளிலும் வெளிவந்தது – இவற்றை பார்த்துவிட்டாவது நமது ஆட்கள் அங்கே தங்கள் பார்வையை செலுத்தி இருந்தால் இந்த திருட்டை பல ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்து சிலையை மீட்டு வந்திருக்கலாம் !! அப்போது கோட்டை விட்டு விட்டோம்.
உடனே பிரதமர் இந்த பிறந்த நாள் பரிசை லண்டனில் இருந்து இந்திய மீட்டு வர முயற்சி எடுக்கஇ ன்றைய நன்னாளில் எங்கள் வேண்டுகோள் ஒன்றினை விடுக்கின்றோம். வெற்றி நமதே!!