பாரத பிரதமருக்கு பிறந்த நாள் பரிசு – 2001 குஜராத்தில் இருந்து திருடு போன சிலை கண்டுபிடிப்பு

காலை நான்கு மணி – கைபேசியில் ஒரு குறுஞ்செய்தி – இன்னும் பதினோரு மணிநேரத்தில் சிலைகள் தாய் மண்ணில் இறங்கும் !! ஆனால் இன்னும் உறுதிபடுத்தபடவில்லை!! நீங்கள் உங்கள் பக்கம் முயற்சி செய்யுங்கள் உறுதி படுத்த !! – அடுத்த பல மணிகள் எப்படி ஓடின என்று எங்களுக்குத் தான் தெரியும் – இரவு பத்து மணி – வெற்றி – டெல்லி வந்து இறங்கிவிட்டன – ஸ்ரிபுரந்தன் நடராஜர் மற்றும் விருத்தாசலம் அர்தனாரி சிலைகள் !! உடனே நண்பர்கள் ஜெசன் அமெரிக்கா மற்றும் மைக்கேல ஆஸ்திரேலியா – இதுவரை நேரில் பார்த்தது கிடையாது – எல்லாமே மின்னஞ்சல் தான் – முதல் முறை கான்பரன்சு கால் போட்டு – ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொண்டோம். கடல் கடந்து எங்களது முயற்சி கண்ட முதல் வெற்றி !!

அடுத்த நாள் பத்திரிகைகளை படிக்கும் பொது தான் தெரிந்தது – வெற்றிக்கு பல தகப்பன்கள் என்று !! இந்த சிலைகளை அடையாளம் காண படங்கள் பெறுவது முதல் – கண்டு பிடித்தவுடன் நடவடிக்கை எடுங்கள் என்று தட்டிய கதவுகள் பல !! அப்போதெல்லாம் பதில் கொடுக்க கூட முடியாத அதிகாரிகள் – இன்று நாங்கள் சாதித்துவிட்டோம் என்று மார் தட்டிக்கொண்டனர். இன்னும் பல ஆயிரம் சிலைகள் களவுபோய் உள்ளன – அவை பற்றியும் நாங்களும் பல தகவல்கள் கொடுத்த வண்ணம் இருக்கிறோம் – இந்த ஊர் கூடி தேர் இழுக்கும் முயற்சி இனிமேலாவது உண்மையான உழைப்பாக வேண்டும் !!

இந்த இரு சிலைகள் வீடு திரும்பிய நிகழ்வு கொண்டாடப்பட்ட வேண்டும் – எதற்க்காக ? இதனை போன்று உலகெங்கிலும் பகிரங்கமாக ஏலம் விடப்படும் நமது சாமி சிலைகளின் அவல நிலை இன்று முதல் மாற வேண்டும். திருடினால் முதுகெலும்பு இல்லாத இந்தியர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்று இருந்த எண்ணம் மாற வேண்டும். இந்தியா ஒரு வல்லரசு – அதன் உடைமைகளை திருடினால் எங்களை போன்ற போராளிகள் விட மாட்டார்கள் என்று அவர்களுக்கு தெரியவேண்டும். பல கோடி ருபாய் கொடுத்தாலும் எங்கள் கடவுள்களை விற்க விட மாட்டோம், இதுவரை கடத்திய சிலைகளை மீட்க்க ஒரு படை உருவாகிறது என்னும் உண்மை அவர்களை தூங்க விடக் கூடாது. முன்பு சிவபுரம் சிலைகளை போல ஒரு சிலையை மட்டும் மீட்டு விட்டு மற்றவைகளை மறந்துவிடும் அவலம் இனி நடக்காது என்று அவர்களுக்கு தெரிய வேண்டும். முறையற்ற வழுக்கு / வாகு வாதங்களால் திருடர்களை தப்பிக்க இனியும் இந்தியா விடாது என்பது உலகுக்கு தெரிய படுத்த வேண்டும்.

அதற்கு ஒரு பெரும் புரட்சி தேவை இல்லை – நமது புலன் விசாரணை பிரிவுகள் தங்கள் வேலையை செவ்வனே செய்தால் போதும். ஒரே ஒரு சிறு உதாரணம் – பாரத பிரதமருக்கு எங்கள் பிறந்த நாள் பரிசு. இன்னும் ஒரு திருடப்பட்ட சிலை பற்றிய குறிப்பு – 2001 அவரது சொந்த மாநிலம் குஜராதில் இருந்து திருடப்பட்ட சிலை. இதில் எங்களுக்கு உதவியது அரசின் முயற்சி அல்ல – எங்களை போன்று இன்னும் ஒரு தனி நபர் – திரு கிரிட் மான்கோடி அவர்களது இணைய தளம் வெளியிட்ட திருட்டு பற்றிய குறிப்பு. இதோ …

Hindu god Brahma with his consort Brahmani stolen from the open air museum at the Ranki Vav or the Queen’s stepped well (underground reservoir) at Patan, Gujarat, in 2001.

It will be seen in the attached photograph received from the Vadodara Circle of the Archaeological Survey of India that Brahma carries his usual attributes such as a sacrificial ladle and a manuscript. The panel measures about one metre in height, width 57-58 cm. and depth 45 cm (3′ x 2′ x 1.5′), and is datable to the twelfth century.

The Queen’s stepped well is a monument of national importance as declared by the Archaeological Survey of India. (இந்த ஆண்டு இது யுநெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிட தக்கது !!)

First Information Report (FIR) of the theft was lodged at the Patan City police station immediately after the theft, No. 230/2001 dated 10 November 2001. The sculpture has still not been recovered. Since the theft occurred ten years ago it may have already appeared in the art market.

இதோ – அதே களவு போன சிலை – 2006 லண்டன் கலை விழாவில் விலைக்கு இருப்பதை பாருங்கள்.

மீண்டும் அதே நிறுவனம் 2011 இல் மீண்டும் அதனை விற்க முயற்சி செய்துள்ளது – இணைப்பில் இரெண்டாவது படம்.
It further looks like it was unsold and was exhibited again in London in 2011 second photo.

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பல சிலைகள் லண்டன் சென்று அங்கே விலைபோவது பற்றி பரபரப்பு தகவல்களை – திரு பீட்டர் வாட்சன் அவர்களது நூலில் தெளிவாக வெளியிட்டார். அந்நாளில் இது பல பத்திரிகைகளிலும் வெளிவந்தது – இவற்றை பார்த்துவிட்டாவது நமது ஆட்கள் அங்கே தங்கள் பார்வையை செலுத்தி இருந்தால் இந்த திருட்டை பல ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்து சிலையை மீட்டு வந்திருக்கலாம் !! அப்போது கோட்டை விட்டு விட்டோம்.

உடனே பிரதமர் இந்த பிறந்த நாள் பரிசை லண்டனில் இருந்து இந்திய மீட்டு வர முயற்சி எடுக்கஇ ன்றைய நன்னாளில் எங்கள் வேண்டுகோள் ஒன்றினை விடுக்கின்றோம். வெற்றி நமதே!!

சிலைத் திருட்டு – பாகம் பத்தொன்பது – சிங்கப்பூர் உமை

சென்ற வாரம் ஆஸ்திரேலியா நமது இரண்டு கலைப்பொக்கிஷங்களை திரும்பக் கொடுத்தது. எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி இது. எனினும் இன்னும் ஆயிரம் ஆயிரம் பொக்கிஷங்கள் திருடுபோய் உள்ளன – இவை அனைத்தையும் திரும்பப் பெற ஒரு மாபெரும் முயற்சி தேவை.

திரும்ப வந்த சிலைகள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதமே நம் நாட்டிற்கு வந்திருக்க வேண்டும். இன்னும் பல பொக்கிஷங்கள் அதே அருங்காட்சியகத்தில் சரியான ஆவணங்கள் இல்லாதாதால் மாட்டிக் கொண்டு இருக்கின்றன. இவை அனைத்தும் பொய்யான தஸ்தாவேஜுகள் கொண்டு விற்கப்பட்டுள்ளன.

அர்தனாரி சிலை – விருத்தாசலம் கோயிலில் இருத்தும் நடராஜர் திருமேனி முழு ஆதரங்களுடன் எங்களால் நிருபணன் செய்ய பட்டதனால் மட்டுமே திரும்ப வந்துள்ளன. அருங்காட்சியகங்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி – உலகம் சுருங்கி வருகிறது – பல ஆர்வலர்கள் இணையம் மூலம் இணைத்து செயல் பட்டு இந்த திருட்டுகளை வெளி கொண்டு வருகிறோம். இணயும் அவை உண்மையை மூடி மறைக்க முடியாது.

நண்பர்கள் பலரும் இந்த முயற்சியில் நாங்கள் எப்படி இணையலாம் – எப்படி உதவ முடியும் என்று கேட்ட வண்ணம் இருக்கிறார்கள். அவர்களுக்கு இன்று ஒரு எடுத்துக்காட்டு..

அர்தனாரி சிலை பற்றிய தகவல்களை முதல் முதலில் பகிரங்கமாக நாங்கள் வெளி இட்டவுடன் பல பத்திரிகைகள் பின்ன்தொடர்ந்தன – ஆஸ்திரேலியா வானொலி , தி ஆஸ்திரேலியன் , The தி ஹிந்து , தி ஹிந்து

இதனைக் கண்ட அமெரிக்க தோழி ஒருவர் – நம் நாட்டின் கலை பற்றி அலாதி பிரியமும் தேர்ச்சியும் பெற்ற ஆர்வலர் தானே உதவ முன்வந்தார் . ஜூன் 2013 மாதம் அவர்களிடத்தில் இருந்து ஒரு குரியர் வந்தது. சென்ற பத்து ஆண்டுகளில் சுபாஷ் கபூர் ஆர்ட் ஒப் பாஸ்ட் பத்திரிகைகளில் வெளியிட்ட விளம்பரங்களை எல்லாம் தேடி பிடித்து வெட்டி செய்த சேகரம் அது.

அதை பிரித்து பார்த்தவுடனே ஒரு அதிர்ச்சி…

மறக்க முடியாத சோழர் திருமேனி ஆயிற்றே. முதல் முறை பார்த்தவுடனே மயங்கியவன் ஆயிற்றே. அதுவும் ஓவியமாக தீட்டி எனது அறையில் தினமும் கண்விழிக்கும் பொது பார்க்கும் சிற்பம் ஆயிற்றே.

உடனே தமிழக காவல் துறை இணையதளத்தில் சென்று பார்த்தேன் . மூன்றாவது உள்ள சிலை நெருடியது.

கோப்பை இணையத்தில் ஏற்றும் பொது படந்தின் அளவில் யாரோ தவறு செய்து விட்டனர். சரி செய்து கிடைத்த படம் இதோ.

ஆம் அதே சிலை தான். ஸ்ரிபுராந்தன் உமை

அதே நிறத்தில் இன்னும் ஒரு தோழி 2006 ஆம் ஆண்டு ஆர்ட் ஒப் பாஸ்ட் விற்பனை பட்டியல் தேடி அனுப்பினார்கள்.



சிங்கை ACM அருங்காட்சியகம் இந்த திருமேனியை 2007 ஆம் ஆண்டு வாங்கியது தெரிய வெந்தது.

உடனே இந்திய காவல் துறை மற்றும் அருங்காட்சியகத்திற்கு தகவல் தெரிவித்தோம். அனைத்து ஆதாரங்களையும் உடன் அனுப்பினோம். பதில் வரும் என்று நம்பிய எங்களுக்கு ஏமாற்றம் தான்.

அதிஷ்டவசமாக அமெரிக்க நீதிமன்றத்தில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் கபூரின் மேனேஜர் கொடுத்த வாக்குமூலம் திருட்டை பகிரங்கமாக்கியது.


“During the period from on or about January 2005 to November 2006, one Uma Parameshvari (known at the “$650,000 Uma for Singapore”), owned by the Central Government of India, was stolen from the Sivan Temple in India’s Ariyalur District. During the period January 2006 to on or about January 2007, defendant and other co-conspirators shipped the $650,000 Uma for Singapore, from India to the United States. On or about February 2007, defendant and other co-conspirators arranged for the sale and transport of the $650,000 Uma to the Asian Civilisations Museum in Singapore.”

உடனே சிங்கை அருங்காட்சியகம் சிலையை காட்சியில் இருந்து நீக்கியது. மேலும் அது கபூரிடத்தில் இருந்த மேலும் பல கலைப்போருல்களை வாங்கிய தகவலும் வெளிவந்தது.

இந்த இழுவை தந்திரம் திருட்டு பொருளை வாங்கி விட்டு திணறும் உலகில் உள்ள பல பிரபலமான அருங்காட்சியகங்கள் பழக்கம் போல உள்ளது. இதில் இந்த கலை கோமான் சொல்வதை கேளுங்கள்


” Art consultant ————– suggests that there may also be alternatives to repatriation, even if an artefact is found to have been illegally removed.

She says: “Sometimes, the lawful owners of the artefacts do not have the resources to build climate-controlled environments, to conserve and restore old artefacts, to present exhibitions that attract large visitorships, or to fund scholarship on these artefacts.

“In this context, I would say that it should be an option for the museum to discuss having the artefacts stay on in a loan arrangement and perhaps to present these works jointly in public exhibitions or publications.”
– See more at: http://www.straitstimes.com/the-big-story/case-you-missed-it/story/sniffing-out-booty-20140214#2″

இந்தியா ஒரு வல்லரசு – அதற்கு தனது குல தனங்களை பாதுகாக்க வாக்கு இல்லாமல் இல்லை – இவை எங்கள் தெய்வங்கள் – ஆயிரம் ஆண்டுகள் தங்கள் ஆலயங்களில் அழகாக இருந்த இவர்களை – சரியான படி ஆய்வுகள் மேற்கொள்ளாமல் – பல கோடி ரூபாய் பணம் வாரிக் கொடுத்து – அப்புறப்படுத்தி – திருட்டை ஆதரித்து – இன்று அவற்றுக்கு குளிர் சாதனம் எங்களால் மட்டுமே கொடுக்க முடியும் என்று சொல்வது மிகவும் கேவலமாக உள்ளது. இவை திருமேனிகள் – கருவறைக்குள் இருந்த தெய்வங்கள் – இவற்றுக்கு உங்கள் குளிர் சாதன பெட்டி தேவை இல்லை. எங்கள் அன்பு இதயங்கள் போதும்

ஆஸ்திரேலியாவை போல சிங்கையும் கூடிய விரைவில் அணைத்து களவு பொருட்களையும் திரும்ப கொடுக்கும் என்று நம்புவோம். மேலும் முன்னர் நாம் பார்த்த சோமஸ்கந்தர் சிலையை பற்றிய விவரங்களையும் சிங்கை ACM வெளியிட வேண்டும். இதுவரை இந்த சிலை அவர்கள் கபூரிடத்தில் வாங்க வில்லை என்று மட்டுமே சொல்லி வருகின்றனர். சரியான விவரங்கள் தராமல் இருப்பது மேலும் ஒரு கொள்ளை கூட்டத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதை தடுக்கிறது.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சிலைத் திருட்டு – பாகம் பதினெட்டு – லண்டன் ஏலம் 2011

சென்ற ஆண்டு இந்த CAG அறிவுப்பு வெளிவந்த சில நாட்கள் பல பத்திரிகைகள் தாட் பூட் என்று சத்தம் போட்டுவிட்டு வழக்கம் போலவே மீண்டும் தங்கள் சினிமா / அரசியல் என்று யதார்த்தங்களுக்கு திரும்பிவிட்டன !! அந்த அறிவிப்பின் ஆழமான கருத்து – நமது கலை பொக்கிஷங்களை பாதுகாக்க வேண்டிய ஆசி எப்படி தனது வேலையை சரியாக செய்ய தவறுகிறது என்பதை இந்த பதிவின் மூலம் வெளிப்படுத்துகிறோம்.

“From 3rd – 12th November, London’s leading Asian art dealers, auction houses and academic and cultural institutions will unite to present an exciting programme of gallery receptions, auctions, lectures, symposia and museum exhibitions. Sample of the magnificent selection of Asian antiques from: India; Islam; China; Japan; the Himalayas and Korea, spanning some 5000 years of culture – including ceramics, furniture, glass, jade, jewellery, manuscripts, metalwork, paintings, screens, stone carvings and textiles. Below please find a selection of offerings from some of London’s leading galleries, including Asianart.com galleries and other members of Asian Art in London. ” ….இந்த ஏலத்தை பற்றி தனது இணையத்தளத்தில் விளம்பரம் செய்துள்ளதை பார்க்கலாம்.

முதல் காட்சியாளர் யார் ? ஆர்ட் ஒப் தி பாஸ்ட் – Art of the Past, 1242 Madison Avenue,New York, NY 10128, USA

இதன் உரிமையாளர் தான் சுபாஷ் கபூர் – இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று இன்டர்போல் உதவியுடன் அதே ஆண்டு – அதாவது 2011 பிரான்க்புர்ட் விமானநிலையத்தில் அக்டோபர் மாதம் இவர் கைது செய்யப்பட்டார். மேலே நாம் பார்க்கும் ஏலம் குறித்த அறிவிப்பின் காட்சி நாட்கள் நவம்பர் மாதம் !!

குறிப்பாக இரண்டாவதாக இருக்கும் சிலை பற்றி தான் நமது இன்றைய பதிவு !!

இதே சிற்பம் திரு கிரிட் மன்கொடி அவர்கள் இணையத்தில் வெளியிடும் திருடு போன சிலைகள் பற்றிய வலைத்தளத்தில் பார்த்த நினைவு …கரி தலை மூன்றாம் வெளியீடு என்ற தலைப்பில் பார்க்கவும்.

ஆம் அதே சிலைதான் – ஆசி பாதுகாக்கப்பட்ட இடம் !!


” The temple of Vishnu’s Boar incarnation at Kari Talai is a large complex of the eleventh century, under the protection of the Archaeological Survey of India.

Nine sculptures were stolen from this remote site during the night of 16/17 August 2006. They are a Vishnu Torso, a Divine Couple, Ganesha, Amorous Princely Couples and Apsaras………………The sculptures were stolen from a centrally protected site. ASI has records of all these sculptures……….”

இந்த சிலைத் திருடுவது தமிழகம் மட்டுமே சார்ந்த ஒன்றில்லை – இந்திய எல்லைகளையும் தாண்டி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கம்போடியா என்று பல நாடுகள் தங்கள் கலை பொக்கிஷங்களை இழந்துள்ளன. முப்பது ஆண்டு காலம் தொடர்ந்து நடை பெற்றுவரும் திருட்டு ! அரசாங்கம் இதற்கென சரியான குழு அமைத்து அதில் கை தேர்ந்த வல்லுனர்களை அமர்த்தி விரைவில் செயல்பட வேண்டும் – இல்லை என்றால் இப்படி ஏதோ ஒன்றிரண்டு அப்படி இப்படி கண்ணில் பட்டால்தான் ! எனினும் திரு கிரிட் போன்ற சான்றோர் தங்கள் பணியை மனம் தளராமல் செய்து வருவது கொஞ்சம் நம்பிக்கை தருகிறது.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

ஆறு கோடிக்கு விற்கப்பட்ட காஞ்சிபுரம் கைலாசநாதர் கௌரி !பாகம் 2

இந்த சிலையின் வரலாறை 1944 வரை தேடி கிடைத்த தகவல்களை கொண்டு படைத்த முந்தைய பதிவை பார்த்திருப்பீர்கள். “பெரிய, முக்கியமான பார்வதி செப்புச் சிலை, தென்னிந்திய சோழர் காலம், பதினோராம் நூற்றாண்டு”. இப்படித்தான் அந்த பிரபலாமான ஏல நிறுவனம் ஏலம் விடும் சிலைக்கு தலைப்பு கொடுக்கிறது. விலை பட்டியல் இந்த சிலைக்கு ஐந்து கோடி முதல் ஏழு கோடி என்று விலை நிர்ணயம் செய்து ஏலத்தில் ஆறு கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.


அதே போல் இந்த சிலை பற்றி தேடியபோது 1944 ஆண்டு வெளிவந்த இந்த குறிப்பை பார்த்தோம்

Gauri
A Southern Bronze
By K. B. IYER
We had seen the reference in the 1944 article Gauri, A Southern Bronze, By K. B. IYER – where he specifically mentions “One of such pieces is Gauri from the Kailasanath temple, Conjeeveram, now in the collection of Ramgopal, the well-known dancer.”

இன்று இன்னும் தேடி 1915 ஆம் ஆண்டு வெளிவந்த நூலில் இருக்கும் தகவல்களை கொண்டு இந்த சிலை காஞ்சி கைலாசநாதர் கோயில் சிலைதான் என்பதை நிரூபணம் செய்கிறோம். இந்த நூல் திரு O.C. Ganguly’s எழுதிய South Indian Bronzes. அவர் அந்நாளில் மிகவும் பிரபலமானவர் – நம் நாட்டு கலைச்செல்வங்களை பற்றி பல நூல்களை எழுதியும் தொகுத்தும் உள்ளார்.

அவர் இந்த சிலையை பற்றி அந்த நூலில் கொடுக்கும் தகவல்கள் இவ்வாறு



இதில் இருந்து நமக்கு தெளிவாக தெரிவது – 1915 வரை இந்த சிலை காஞ்சி கைலாசநாதர் கோயிலில் தான் இருந்துள்ளது. இடையில் 1915 – 1944 எப்படியோ புகழ் பெற்ற நடன கலைஞர் ராம் கோபால் இடத்தில சென்று விட்டது.

இந்த பதிவை கொண்டு சிலையை மீட்டு வர முடியாது என்றாலும் – எதோ ஊரு பேரு தெரியாத அனாதையை போல ஏலம் விடாமல் – காஞ்சி கைலாசநாதர் கோயில் கௌரி என்ற பெருமையுடன் விலை போவாளே !


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சிவபுரம் – ​​சொல்லப்படாத கதை, பாகம் 3

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் – அப்படி பல வருடங்களுக்குப்பின் சிவபுரம் சிலைகளை திருடிய ஸ்தபதி செய்த நகலே நமக்கு ஒரு முக்கிய துப்பு தந்துள்ளது.

இந்த சிவபுரம் சிலை திருட்டு பற்றிய முதல் பாகத்திலும் மற்றும் இரண்டாம் பாகத்திலும் களவு போன ஆறு சிலைகளில் இரண்டு சிலைகளுக்கும் அமெரிக்காவில் உள்ள நோர்டன் சைமன் அருங்காட்சியகத்துக்கும் உள்ள தொடர்பை நிரூபித்தோம். நடராஜர் பெரும் போராட்டத்திற்குப் பிறகு தமிழகம் திரும்பினார் எனபது மட்டுமே அனைவருக்கும் தெரியும். இன்றும் மற்ற ஐந்து சிலைகள் காணவில்லை என்று தான் காவல் துறை தஸ்தாவேஜுகள் சொல்கின்றன. சென்ற இரு பதிவுகள் மூலம் சிவபுரம் சோமஸ்கந்தர் திருமேனி இன்றும் அமெரிக்காவில் உள்ளது என்பதை முக்கிய குறிப்புகளுடன் நிரூபணம் செய்தோம்.

மற்ற நான்கு சிலைகள் என்னவாயின ? தொலைத்த இடத்தில தானே தேட வேண்டும் – காவல் துறை பதிவு செய்த குற்றப் பத்திரிகையின் படி சோமஸ்கந்தர் உடன் இன்னும்“Thirugnanasambandar, Pillaiar and two Amman” கண்டுபிடிக்க முடியவில்லை.

மேலும் இந்த சிலைகள் 1954 – 1956 இடைப்பட்ட தருவாயில் திருடப்பட்டன. ஸ்தபதி உதவியுடன் நகலை கோயிலுக்கு கொடுத்துவிட்டார்கள். . “The trustees of the temple wanted to repair the idols and this work was entrusted to Ramasamy Sthapathy of Kumbakonam in the year June 1954. In the year 1956 Thilakar of Kuttalam and his brother Doss induced Ramasamy Sthapathy to part with the original Natarajar and 5 other idols and to substitute the same with fake idols. “

துரதிஷ்ட வசமாக திரு ஸ்ரீனிவாசன் அவர்களது நூலில் நடராஜர் / சோமஸ்கந்தர் படங்களை போல ஒரிஜினல் அம்மன் சிலைகளின் படங்கள் இல்லை. இவை இல்லாத பட்சத்தில் எதை கொண்டு தேட முடியும் ?

அதற்க்கு விடை – பாண்டி பிரெஞ்சு இன்ஸ்டிடுட் 15th June 1956 மற்றும் 16th Nov 1957 எடுத்த படங்கள். சென்ற பதிவில் திருட்டு ஸ்தபதி ஒரிஜினல் போலவே சோமஸ்கந்தர் சிலை மற்றும் நடராஜர் சிலைகளை செய்தான் என்பது தெரிய வந்தது.

அதே போல பிரெஞ்சு இன்ஸ்டிடுட் எடுத்த மற்ற சிலைகளின் படங்களை தேடிய பொது இந்த தனி அம்மன் சிலை கிடைத்தது.

நோர்டன் சைமன் அருங்காட்சியக பிற சிலைகளுடன் ஒப்பிட்டு பார்த்த பொது இந்த சிலை கிடைத்தது

Parvati, c. 1000
India: Tamil Nadu, 975-1025
Bronze
32-1/2 in. (82.6 cm)
The Norton Simon Foundation
F.1972.10.S
© 2012 The Norton Simon Foundation

இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று – இந்த சிலையை அவர்கள் சேர்த்த ஆண்டு – 1972, அதே ஆண்டில் தான் சிவபுரம் நடராஜர் மற்றும் சோமஸ்கந்தர் சிலைகளும் சேர்க்கப்பட்டன.

இரு சிலைகளையும் ஒன்றாக வைத்து பார்க்கும்போது கண்டிப்பாக ஒன்றை ஒத்தே மற்றொன்று செய்யப் பட்டுள்ளது என்று தெரிகிறது.

எதோ ஒரு அலட்சியத்தாலோ என்னவோ – நடராஜர் வடிவத்தை நகல் செய்த பொது காட்டிய ஆர்வத்தை சோமஸ்கந்தர் மற்றும் அம்மன் சிலைகளை செய்த பொது ஸ்தபதி காட்ட வில்லை என்று தோன்றுகிறது. பல இடங்களில் வித்தியாசம் தெளிவாகவே தெரிகிறது – எனினும் இரு சிலைகளையும் ஒன்று சேர வைத்து பார்த்தால் தானே குட்டு வெளிப்படும் என்று அவன் நினைத்திருக்கலாம். மேலும் செப்பு சிலை வார்ப்பது என்பது எவ்வளவு கடினம் – ஆயிரம் ஆண்டு சோழர் கலை செல்வத்தை நகல் எடுப்பது கடினம் தானே.


சோமாஸ்கந்தர் சிலை போல இந்த அம்மன் சிலைக்கு நம்மிடத்தில் நேரடி ஆவன படங்கள் இல்லை என்றாலும் நடராஜர் மற்றும் சோமஸ்கந்தர் சிலைகள் திருடிய முறை, சென்றடைந்த இடம் என்று அனைத்தையும் வைத்து பார்த்தால் – கண்டிப்பாக இந்திய அரசு இந்த வழக்கை மீண்டும் திறக்க வேண்டும். யாருக்கு தெரியுமோ இல்லையோ திருட்டு பொருளை வாங்கி இன்றும் காட்சிக்கு வைத்திருக்கும் அந்த அருங்காட்சியகத்தின் அதிகாரிகளுக்கு உண்மை தெரியும் !!


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சிவபுரம் ​சோமாஸ்கந்தர் – ​சொல்லப்படாத கதை, பாகம் 2

மனித வாழ்வில் ஒரு விஷயம் 70 ஆண்டுகள் கால தாமதம் ஆவது என்பது பெரிய குற்றம், அதுதே சமயத்தில் ஆயிரம் ஆண்டுகள் புகழ்பெற்று நின்ற ஒரு சிலை களவு போனதை பற்றிய தகவல் என்றால் இந்த 70 ஆண்டுகள் சொற்ப காலம் தான். முன்னர் நாம் பார்த்த சிவபுரம் சிலை திருட்டின் தொடர்ச்சி இந்தப் பதிவு. – ஒரு திடுக்கிடும் தகவல் – சிவபுரம் நடராஜர் சிலை திருடு போய்விட்டது – அதற்கு பதில் ஆலயத்தில் இருப்பது ஒரு நகல் என்று நமக்கு சொன்னது ஒரு பிரிட்டிஷ் காரர் – கலை உலகையே அவரது இந்த செயல் உலுக்கியது.

அவர் கொடுத்த குறிப்பு தான் சிவபுரம் நடராஜர் சிலை தாயகம் திரும்ப காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் 1965 ஆம் ஆண்டு Early Cola Bronzes என்ற நூலில் சிவபுரம் நடராஜர் சிலை திருட்டை பற்றிய தகவலை வெளியிட்டார்.

ஆனால் இப்போது முதல் முறையாக – அவரே எழுதிய இன்னும் ஒரு குறிப்பு – இந்த சிலை திருட்டு நடராஜர் சிலையுடன் முடியவில்லை – அதன் கூடவே களவு போன சோமஸ்கந்தர் சிலையும் அதே அருங்காட்சியகத்தில் இருக்கின்றது என்று அவரே ஒப்புக்கொள்ளும் சாசனம் இதோ !!

Marg Vol 48. No.4 June 1997 – EARLY CHOLA BRONZES IN THE NORTON SIMON MUSEUM – Douglas Barrett.

It is interesting to read the General Editor’s Note: “ The late Douglas Barrett wrote this article for the late Norton Simon soon after his visit to the museum in Pasadena, California, in 1978. However, the article was never published. Marg is pleased to publish it now through the generosity of the Norton Simon Museum and Mrs. Mary Barrett. Mr. Barrett was an authority on Cola Bronzes and we feel that his comments on the selected masterpieces will be much appreciated by Indian Art historians. One of the Bronzes ( figure 9) is no longer in the collection and now belongs to a European Collector. Some faithful readers of Marg may recognize a few of the others as they were published in the fifties in the magazines. “

1978 நோர்டன் சைமன் சென்று சிலைகளை பார்த்து அவர் எழுதிய குறிப்பு – யார் கண்ணிலும் இருபது ஆண்டுகள் படாமல் – பின்னர் மார்க் பத்திரிகையில் வெளியாகிறது

முழு குறிப்பைக் கீழே காணலாம் – நமக்கு வேண்டியது 85 ஆம் பக்கம் – அவர் கூறுவது “ Hence, the importance of the remarkable Somaskanda in the Museum ( figures 3 and 4). The Somaskanda, together with a standing Ganesa and the famous Nataraja , formed part of a hoard discovered at Sivapuram ( Tanjavur district). It was published in its uncleaned state by P. R. Srinivasan and with the Ganesa and Nataraja, dated to the middle of tenth century AD.”

மேலும் இந்த திருட்டில் இதுவரை வெளிவராத ஒரு கோணம். பாண்டி பிரெஞ்சு இன்ஸ்டிடுட் சிவபுரம் ஆலயத்தில் உள்ள சிலைகளை 15th June 1956 மற்றும் 16th Nov 1957 படம் பிடித்துள்ளனர். அவர்களுக்கு அப்போது சிலைகள் களவு போய்விட்டன என்பதும் அவர்கள் படம் பிடிப்பது ஸ்தபதி செய்த நகல் என்று தெரியாது. இது வரை யாருமே பார்க்காத அந்த படங்கள் இதோ – இந்த படங்கள் இந்த சிலை கடத்தல் வழக்கில் முக்கிய சாட்சியங்கள் ஆகப்போகின்றன.

டௌக்லஸ் பர்ரெட் 1965 இல் சிவபுரம் சென்றபோது இவற்றை தான் பார்த்திருக்க வேண்டும்.


ஸ்தபதி 1954 ஜூன் மாதத்திலேயே தன கைவரிசையை காட்டிவிட்டார் !! எனவே ஒரு பார்வையிலேயே டௌக்லஸ் பர்ரெட் தன் இடத்தில இருந்த திரு . P.R. ஸ்ரீனிவாசன் அவர்களது நூலில் உள்ள படங்களுடன் ஒப்பிட்டு இவை நகல் என்று சொல்லிவிட்டார்.


திருட்டு ஸ்தபதி நடராஜர் சிலையை ஒரிஜினல் சிலை போல வடிக்க மிகவும் முயற்சி செய்துள்ளான். எனினும் சோமஸ்கந்தர் மிகவும் மோசமான நகல். நடராஜர் மேல் தான் அனைவர் கவனமும் இருக்கும் என்ற நம்பிக்கையோ என்னமா.

சோமஸ்கந்தர் சிலைகளை பார்த்தவுடனே வித்தியாசம் தெரிகிறது.


எனினும் நகல் பார்ப்பதற்க்கு ஒரிஜினல் போல இருக்க அவன் எடுத்த முயற்சி தான் நமக்கு மேலும் இந்த வழக்கில் உதவி செய்ய போகிறது……. அதை அடுத்த பதிவில் தொடருவோம்…

இதுவரை நாம் பார்த்தவற்றை கொண்டு ஒன்று தெளிவாக தெரிகிறது – இந்திய அரசு நோர்டன் சைமன் அருங்காட்சியகத்துடன் 1976 இல் நடராஜர் சிலை பற்றி ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன் படி பத்து ஆண்டுகள் அமெரிக்காவில் அந்த சிலை இருந்து விட்டு மீண்டும் இந்தியாவுக்கும் திரும்பி விட்டது. ஆனால் கூடவே களவு போன இந்த சிலை இன்னமும் அங்கேயே சிக்கி உள்ளது. நமது காவல் துறை இந்த வழக்கை இவ்வாறு முற்றுப்புள்ளி வைத்து முடித்துள்ளது “All accused arrested and convicted. There is no information about the remaining idols “. இப்போது இந்த தகவல் கண்டிப்பாக அந்த அருங்காட்சியகத்தில் 1978 முதல் இருந்திருக்க வேண்டும். தெரிந்தே திருட்டு பொருளை ….

முழு மார்க் குறிப்பு :










Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சிலைத் திருட்டு – பாகம் பதினேழு – சண்டிகேஸ்வரர் சிலை கொடுக்கும் தகவல்

இன்றைக்கு ஒரு மிக முக்கிய தடயம் தருகிறோம். இந்த சிலை திருட்டு வழக்கில் இது மேலும் ஒரு பரிமாணத்தை திறக்கும் பதிவு. சென்ற ஆண்டு அமெரிக்க சுங்கத்துறை கைப்பற்றிய சில சிலைகளில் ஒரு சண்டிகேஸ்வரர் சிலை இருந்தது. அது சுத்தமல்லி கோவிலில் காணாமல் போன சிலை என்று நம்பப்பட்டது.

சிக்கிய சிலையின் இரு படங்கள் வெளியிடப்பட்டன.



ஆனால் இப்போது பிரெஞ்சு இன்ஸ்டியூட் இடத்தில இருக்கும் சுத்தமல்லியில் காணாமல் போன சண்டிகேஷ்வர் சிலையுடன் இந்த சிலையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது – இவை இரண்டும் ஒரு சிலை இல்லை என்றும் கண்டிப்பாக வெவ்வேறு சிலைகள் என்றும் கீழே உள்ள படங்களை கொண்டு நாம் அறியலாம்.

காது, கை, கால் அணிகலன்கள் என்று அனைத்தும் வேறு வேறு



இப்போது வேறு கேள்விகள் எழுகின்றன

திருடு போன சுத்தமல்லி சண்டிகேஸ்வரர் சிலை எங்கே ?

மேலும் முக்கியமாக – சிக்கிய இந்த புது சண்டிகேஸ்வரர் சிலை எந்த கோயிலில் இருந்து திருடப்பட்டது – அங்கே இன்னும் வேறு என்ன என்ன சிலைகள் திருடப்பட்டன?

மேலும் மேலும் கேள்விகள்….


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சிலைத் திருட்டு – பாகம் பதினாறு – சிலைகள் பதுக்கி இருந்த கிடங்கியில் இருந்து ….

இந்தியாவின் தேர்தல் முடிவுகள் வெளி வந்துவிட்டன – சமீப காலத்து தேர்தல் சரித்திரத்தில் முதல் முறையாக பெரும் பலத்துடன் ஒரு கட்சி, கூட்டணி அரசியல் என்ற சங்கிலியை உடைத்து தனி பெரும்பான்மை பெற்றுள்ளது. நாட்டை வல்லரசாக மாற்றும் நோக்கம் முதலிடம் பெற வேண்டும் என்றாலும் நமது கலைச்செல்வங்களைப் பாதுகாப்பதிலும் களவு போனவற்றை முறையே விரைவில் திரும்பப் பெறுவதிலும் ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும். இது ஒரு மதவாத நோக்கம் அல்ல — நாகப்பட்டினம் புத்தர், ராஜஸ்தான் பளிங்கு ஜினர் சிலை போன்றவை சோழ நடராஜருடன் நாடு திரும்ப வேண்டும். பல அருங்காட்சியங்கள் தங்களிடம் இருப்பது திருடப்பட்ட பொருள் என்று தெரிந்தும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கின்றன. – நமது பாரம்பரிய செல்வங்களை முறைப்படி பட்டியல் இடப்படவில்லை – கட்டிக்காக்க வேண்டிய அதிகாரிகள் எந்த துரித நடவடிக்கை எடுப்பதாகவும் தெரியவில்லை.

சென்ற வாரம் CBS News இந்த செய்தியை ஒளிபரப்பியது – அமெரிக்காவில் கபூர் தொடர்பான புலனாய்வில் கிடைத்த துப்பு கொண்டு அவர்களை குயீன்ஸ் என்ற ஒரு வைப்பு கிடங்கியை சோதனை செய்தபோது…

“A CBS News crew was with HIS agents in March when they followed an informant’s tip and searched a storage facility in the New York City borough of Queens. They found hundreds of items worth an estimated $8 million.

The items were allegedly stolen by Indian dealer Subhash Kapoor, a man international authorities say has been smuggling artifacts for decades. He is currently on trial after pleading not guilty to looting and smuggling charges.”

அப்போது வெளியான படங்களில் ஒரு சிற்பம் கண்ணில் எங்கோ பார்த்த மாதிரி இருந்தது.



இதே சிற்பம் திரு கிரிட் மன்கொடி அவர்கள் இணையத்தில் வெளியிடும் திருடு போன சிலைகள் பற்றிய வலைத்தளத்தில் பார்த்த நினைவு …

ஆம் அதே சிலைதான் – ஆசி பாதுகாக்கப்பட்ட இடம் !!


” The temple of Vishnu’s Boar incarnation at Kari Talai is a large complex of the eleventh century, under the protection of the Archaeological Survey of India.

Nine sculptures were stolen from this remote site during the night of 16/17 August 2006. They are a Vishnu Torso, a Divine Couple, Ganesha, Amorous Princely Couples and Apsaras………………The sculptures were stolen from a centrally protected site. ASI has records of all these sculptures……….”

இந்த சிலைத் திருடுவது தமிழகம் மட்டுமே சார்ந்த ஒன்றில்லை – இந்திய எல்லைகளையும் தாண்டி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கம்போடியா என்று பல நாடுகள் தங்கள் கலை பொக்கிஷங்களை இழந்துள்ளன. முப்பது ஆண்டு காலம் தொடர்ந்து நடை பெற்றுவரும் திருட்டு ! அரசாங்கம் இதற்கென சரியான குழு அமைத்து அதில் கை தேர்ந்த வல்லுனர்களை அமர்த்தி விரைவில் செயல்பட வேண்டும் – இல்லை என்றால் இப்படி ஏதோ ஒன்றிரண்டு அப்படி இப்படி கண்ணில் பட்டால்தான் ! எனினும் திரு கிரிட் போன்ற சான்றோர் தங்கள் பணியை மனம் தளராமல் செய்து வருவது கொஞ்சம் நம்பிக்கை தருகிறது.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சிலைத் திருட்டு – பாகம் பதினைந்து – 1916 புத்தகம் கொடுக்குத துப்பு ..

தமிழக கோயில்களில் உள்ள சிலைகளை முறைப்படி படம் எடுத்து வைப்பதன் முக்கியத்துவத்தை நிரூபிக்க இதனை விட ஒரு பெரிய உதாரணம் தேவை இல்லை.

1916 ஆண்டு வெளிவந்த நூல் என்றவுடன் ஏனோ தானோ என்று தான் இருக்கும் என்று எண்ணி வேக வேகமாகப் பக்கங்களை புரட்டினேன் – செப்புத் திருமேனிகள் படம் கண்ணில் பட்டது. எங்கேயோ பார்த்த நினைவு.

South-indian images of gods and goddesses (1916)

இலவசமாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

பக்கம் 109 (129 in the pdf) உள்ள படம் தான் எனது ஆர்வத்தை தூண்டியது.

சோமஸ்கந்தர் சிலை – உலோகம் – சிவன்கூடல் என்ற குறிப்பு மட்டுமே இருக்கிறது.

பொதுவாக சோமஸ்கந்தர் வடிவம் ஒரே பீடத்தில் அமர்ந்திருப்பது போலவே இருக்கும் – இந்த சிலையில் வெவ்வேறாக வார்த்து இருப்பது கவனிக்கத்தக்க அரிய விஷயம். இப்படி உலோகத்தில் செய்வது கடினம் – இரண்டு பீடங்களை ஒரே அளவில் வார்க்க வேண்டும் – அதில் உள்ள கோடுகள் உட்பட அனைத்தும் ஒரே சீராக இருக்கவேண்டும்.

இதுவே நமக்கு தரும் முக்கிய துப்பு/குறிப்பு. தற்போது சிங்கை அருங்காட்சியகத்தில் இருக்கும் சிலை மட்டுமே இது போல இருக்கிறது. இந்த சிலையை அருங்காட்சியகம் 2000 ஆம் ஆண்டு வாங்கியது. யாரிடம் இருந்து வாங்கினார்கள் என்ற விவரங்கள் இல்லை.

இரு சிலைகளையும் ஒப்பிட்டு பார்ப்போமா?









இரண்டு சிலைகளும் ஒன்றே என்பது தெளிவாக தெரிகிறது. அக்கம் பக்கம் கேட்டு பார்த்தால் இந்தக் கோயிலில் இப்போது ஒரு சிலை கூட இல்லை. இந்தக் கோயில் பற்றி வேறு எந்த நூலிலும் தகவல்கள் இல்லை. இந்த நூலிலும் வேறு எந்த சிலை படமும் இல்லை.

இவற்றைக் கொண்டு அதிகாரிகள் மேலே துப்பு துலக்கினால் பல உண்மைகள் வெளி வரும்!! இந்த திருட்டு உறுதி செய்யப்பட்டால் இந்த சிலை திருட்டு கும்பல் 2000 ஆண்டுக்கு முன்னரே இந்த செயல்களை செய்தார்கள் என்பதும், இன்னும் பல கோயில் சிலைகளை திருடி விற்ற செயல்கள் அம்பலம் ஆகும்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பளிங்கு ஜினர் சிலை வாங்கிய விதம் வெளிபடுத்தும் அருங்காட்சியகத்தின் கண்துடைப்பு நடவடிக்கை

நமது முயற்சிகள் பயனளிக்க துவங்கிவிட்டன. நமது அரசாங்கம் நமது சிலைகளை மீட்க கோரிக்கை விடுத்துள்ளது – விருதாச்சலம் அர்தனாரிதிரும்ப தரவும். ஸ்ரிபுரந்தன் நடராஜர் திரும்ப தரவும் மேலும் ABC மூலம் ஆஸ்திரேலியா அருங்காட்சியகம் கபூர் இடத்தில இருந்து வாங்கிய மற்ற பொருட்கள் பட்டிய பல முக்கய தகவல்கள் /தடயங்கள் நமக்கு கிடைத்துள்ளன.

குறிப்பாக இந்த ஜின பளிங்கு சிலை மவுண்ட் அபு , ராஜஸ்தான் மாநிலம்.

Seated Jina 1163 Sculpture, marble
55.8 h x 45.2 w x 23.1 d cm
Purchased 2003
Accession No: NGA 2003.478

இந்த சிலை இரு பாகங்களை கொண்டது என்று தெளிவாக தெரிகிறது. தீர்த்தங்காரர் சிலை வேறு – சுற்றி இருக்கும் தோரணம் வேறு

இப்படி இருக்க நமக்கு இந்த ” Due diligence report” கிடைத்துள்ளது. இதில் இந்த சிலை இரு பாகங்களாக 2003 இல் USD 125,000 வாங்கப்பட்டது என்று தெரிகிறது.



மேலும் முந்தைய உரிமையாளர் என்று

” bought in Delhi by Sudanese diplomat Abdulla Mehgoub, between 1968 and 1971
with subhash Kapoor of Art of the Past, New York, from 2002 or before”

மேலும்

” Signed letter of provenance from Raj Mehgoub stating that the jina sculpture and arch were purchased in India between 1968 and 1971 by her husband Abdulla Mehgoub, dated 25th Match 2003.
– Expert opinion on the sculpture’s quality and authenticity written by Dr Vidya Dehejia
– Copy of a published article about the sculpture in Arts of Asia, vol 33, no. 6. 2003″

இந்த குறிப்பு பல கபூர் பொருட்களுக்கு அவரே பொய் பத்திரங்கள் தயாரிக்க உபயோகம் செய்த யுக்தி என்று இப்போது தெரிகிறது – இதை பற்றி மேலும் தெரிய விரும்புவோர் நண்பர் வலைப்பூவை பார்க்கவும்

மீண்டும் அவர்கள் சொல்லும் ஆர்ட் ஒப் ஆசியா குறிப்பு ஒரு விளம்பரமே.

மேலும்

“New provenance information found

A comparable jina was found in the sales catalogue for Christie’s sale number 9481 (18 October 2002), South Kensington, London. Close examination suggests that the NGA Jina is the same object sold at the christie’s sale. The Christie’s catalogue description corresponds to the NGA Jina in terms of size and Materials and its image matches the NGA sculpture exactly.
…..

The details surrounding this, such as the consignor and purchaser, are ye to be confirmed. This information suggests the the provenance letter supplies by Art of the Past was fraudulent, but supports the possibility that the sculpture was legitimately acquired.(sic) It is also possible that the sculpture was purchased at the Christie’s sale by Raj Mehgoub, but this seems unlikely given other information about kapoor.”

இது மிகவும் ஆச்சரியம் அளிப்பதாய் உள்ளது. சாதாரணமாக கூகிள் செய்தாலே இந்த தகவல் கிடைக்கிறது.

இதற்காக எந்த பட்டியலையும் வாங்க தேவையே இல்லை. இந்த மேலும் ஒரு முக்கியத் தகவல் கிடைக்கிறது இந்த சிலை சொற்ப்ப விலை $ 1543 – $2315 ஏலம் விடப்பட்டு வெறும் $ 6,889. க்கு மட்டுமே விலை போனது !!

12th October 2002 $ 6889 விலை போன சிலை – ஒரு இணைய தேடல் மூலம் எளிதாக கிடைக்கும் தகவல் ஏன் அப்போது ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்துக்கு கிடைக்கவில்லை. ஒரு தோரணம் சேர்த்து எப்படி விலை இப்படி மள மள வென ஏறியது ? பொதுவாக இரு பொருட்கள் என்று கணக்குக் காட்டும் அருங்காட்சியகம் விலையை மட்டும் ஏன் சேர்த்து காட்டுகிறது ?

ஒரு வேளை இது தான் சரியான விலை என்றால் ஏலம் விட்ட விலை அதற்கு சரியான பத்திரங்கள் இல்லாததால் குறைவாக இருந்ததோ? பொய்யாக கபூர் தயார் செய்து கொடுத்த பத்திரம் தான் விலை ஏறக் காரணமா?

மேலும் அந்த அறிக்கையை படிக்கும் போது இந்த சிலையை நமக்குத் திருப்பித் தரும் எண்ணம் இல்லை என்று தெளிவாக தெரிகிறது. எனவே நண்பர்கள் – இந்த பதிவை தங்களுக்கு தெரிந்த வட இந்திய மற்றும் சமணர்களுக்கு அனுப்பி, பத்திகைகளில் இதன் படம் வர உதவி செய்ய கோரிக்கை விடுகிறோம்.

இதே போன்ற பல சிலைகள் -ராஜஸ்தானிய கோயில்களில் புதிதாக செய்து வைத்திருப்பது தெரிய வருகிறது. அப்படி ஏன் செய்தார்கள் – சிலைகள் களவு போயினவா – எப்போது – பழைய படங்கள் குறிப்புகள் இருந்தால் சேகரிக்க வேண்டும்.



இப்படி நாம் ஏதாவது செய்து இந்த சிலை மற்றும் தோரணம் களவு போனதை நிரூபணம் செய்தால் ஒழிய சிலை திரும்பாது. !!


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment