300ஆவது பதிவு – கிழக்கையும் மேற்கையும் கலைவண்ணத்தால் இணைப்போம்- “ஒரு கலைவண்ணத்தின் கடந்தகால கதை” – நரசய்யா

300 … இன்று மூன்று சதங்கள் தாண்டி இந்தக் கலைப் பயணம் தொடர்கின்றது. நடு நடுவே எத்தனை எத்தனை புதிய தொடர்புகள், நட்புகள் – களைப்பே தெரியாத வண்ணம் படு ஜாலியான பயணமாக உள்ளது. சாமானியர்கள் முதல் வல்லுனர்கள் வரை பலரின் ஆசியுடன் – நண்பர்கள், உறவினர்கள் என்று பலர் தோள்கொடுக்க, பலம் சேர்க்க இன்னும் பல லட்சியங்களை நோக்கி கால் எடுக்க தோள்தட்டி தைரியத்தை ஊட்டும் அன்பு உள்ளங்களுக்கு மீண்டும் ஒரு பெரிய நன்றி.

இன்று அப்படி ஒரு வல்லுநர் – ஆர்வலர் – குழந்தை போல தட்டித் தடவி இந்த துறையில் நடக்கப் பயிலும் பொது

ஊக்கம் அளித்து நல்லாசிகள் தந்த வழிகாட்டி – திரு கடலோடி நரசையா அவர்கள் இந்த தளத்தை கௌரவிக்கும் வகையில் ஒரு பதிவை தருகிறார்.

இந்த படங்களை பார்த்ததும் முதலில் உங்கள் மனதில் தோன்றும் எண்ணம் என்ன?


படங்கள் நன்றி : Flickr: Pigalle

” பரவாயில்லையே – நன்றாக நிர்மாணிக்கப்படும் எதோ ஒரு கோயிலில் உள்ள நாயகார் கால தூண் மண்டபம் ?” என்றுதானே நினைக்கிறீர்கள். மேலே படியுங்கள்.

ஐயாவிடம் இந்த பதிவை குறிப்பாக கேட்டதற்கும் ஒரு காரணம் உண்டு. ஒரு முறை அவர் ஒரு இனைய குழுமத்தில் இந்த பதிவை ittaar..

” மதுரையில் உள்ள மதனகோபால சுவாமி ஆலயம் உள்ளது. அது பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. தற்போது ஆலயத்தின் வாசலில் உள்ள ரோட்டில் இருபுறமும் கடைகள் நிறைந்து காணப்படுகிறது. ஒரு காலத்தில் இந்த இடத்தில சிற்ப்பங்கள் நிறைந்த ஒரு முழு மண்டபம் இருந்தது. இந்த முழு மண்டபமும்… …………………………….. இதன் இடையில் அந்த பினம்னி தவறி விட அவர்களது குடபதினர் Susan Pepper Gibson, Mary Gibson Henry, மற்றும் Henry C. Gibson , இந்த பொருட்களை மீட்டு Adeline Pepper Gibson அவர்களது நினைவில் அதை அப்படியே பிலடெலபியா கலை அருங்காட்சியகத்திற்கு கொடுத்துவிட்டனர். தற்போது இவை அந்த அருங்காட்சியகத்தின் இரண்டாவது மாடியில் Gallery No. 224, உள்ளன ”

ஐயா அவர்களை பற்றி படிக்கவே தலை சுற்றும். அப்படி இருக்க அவர்

Profession: Retired Chief Mechanical Engineer of Vizag Port.
Former Consultant to the World Bank for the Emergency rehabilitation Programme of Kingdom of Cambodia.
Former ADB consultant, Visiting Faculty AMET University for MBA Programme. (Terminal Management and IMO related subjects)
Education: Marine engineering. I. N. S. Shivaji Naval Engineering College Lonavla
Writing: over 100 short stories in Tamil (9 as Muthirai kathai in Vikatan.)
3 collections of short stories published, first one for 6 years as non-detailed study for UGs in Madura College. Second won 2 awards. Third won TN State award.
Non fiction. Kadal Vazhi Vanikam a treatise on sea trade from 3rd century BC –won TN State award.
Madrasapattinam the story of Chennai from 1630 to 1947. Won TN State award and Chidambaram Meyyapan award
Sadharana Manithan Biography of Chitti Sundararajan.
Madras (Tracing the history of Madras from 1369) in ENGLISH
Overcoming Challenges the story of 125 years of the Port of Chennai with S Muthiah (English)
Author of the book on the history of Madurai (Aalavai)

…………நமக்கு பதில் சொல்வாரா என்று நினைத்த போது உடன் பதில் கொடுத்து பல அரிய தகவல்களைப் பகிர்ந்துக்கொண்டார். அதனால் தான் இன்று கேட்டதும் உடனே எழுதி அனுப்பிவிட்டார். மேலே படியுங்கள் . ..

படங்கள் நன்றி : Flickr: Pigalle

சரி, இவர் விஷயங்களுக்குப் போவதற்கு முன், நாம் ஸ்டெல்லா கிராம்ரிஸ்ச் எனும் அம்மையாரைப் பற்றி அறிந்துகொள்ளத்தான் வேண்டும். நான் கிருத்திகாவின் (மதுரம் பூதலிங்கம்) ‘லெட்டெர்ட் டயலாக்’ எனும் புத்தகத்தை எழுதும்போதும் அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபடும்போதுதான் ஸ்டெல்லா, கிருத்திகாவை அமெரிக்காவுக்கு அழைத்த விவரம் கண்டு வியந்தேன். ஸ்டெல்லா (1896-1993) ஒரு கலைப்பிரியர். ஆஸ்திரியாவில் பிறந்தாலும் பாரதத்தின் பண்பாடு இவரை ஈர்த்தது. இளம்பருவத்திலே மேற்கத்திய நடனத்தில் தேர்ந்தவர்தான் எனினும், வியன்னாவில் வசிக்கும்போது இவருக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பகவத் கீதை இவர் மனதை கொள்ளை கொண்டது. இது இவரை வடமொழியில் ஈடுபாடு கொள்ளச் செய்ததோடு மட்டுமல்லாமல் வடமொழியில் டாக்டர் பட்டமும் பெறும் அளவுக்கு கொண்டு சென்றது. இந்திய சமயத் தத்துவங்களில் இவர் ஈடுபாடும் இவர் ஆக்ஸ்போர்ட் பல்கலையில் பேசிய சொற்பொழிவும் கல்கத்தாவில் உள்ள தேசிய கவிஞர் ரவீந்திரநாத தாகூர் கேள்விப்பட்டு இவரை சாந்திநிகேதனில் பணியாற்றுமாறு அழைத்தார். 1924 முதல் 1950 வரை சாந்திநிகேதனில் இந்தியக் கலைகளுக்கான பேராசிரியராகப் பணியாற்றியபோதுதான் ஃபிஸ்கே கிம்பெல் (இவர் அப்போது பிலெடெல்பியாவில் அருங்காட்சியக இயக்குநராக இருந்தவர்) பேராசிரியை ஸ்டெல்லாவை அமெரிக்காவில் அந்த அருங்காட்சியகப் பொறுப்பாளராக அழைப்பு விடுத்தார். ஏற்கனவே இந்தியக் கலைப் பண்பாடுகளில் ஆர்வம் மிகுந்த ஸ்டெல்லா இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு பிலடெல்பியா சென்றதும் செய்த முதல் வேலை இந்தியக் கலைப்பொருள்களுக்கான பகுதியை அந்த அருங்காட்யகத்தில் விரிவாக்கியதுதான். அத்துடன் இல்லாமல் பொறுப்பாளருக்கான நிதி உதவி (நன்கொடை) இருக்கை (Curatorial Chair Endowment) ஒன்றையும் உருவாக்கி ஊக்கமளித்தார். இப்படி இந்த இருக்கைக்கான முதல் நிதியுதவி நியமனத்தைப் பெற்றவர் டெரீல்லெ மேஸன் எனும் பெண்மணியார். மதுரை (ஆலவாய்) பற்றி எழுதும்போது மேஸன் அவர்களிடமிருந்து பல செய்திகள் பெற்றுக் கொண்டதையும் என்னால் மறக்கமுடியாது.

மறுபடியும் நார்மன் பிரவுன் அவர்களிடத்தே வருவோம். 1931 இல் அருங்காட்சியகத்தில் இந்தியக் கலைச் சொத்துக்கான முதல் பொறுப்பாளராக பதவியேற்றவர் பிற்காலத்தில் பலமுறை இந்தியா வந்து சென்றார். அவருக்கு கல்கத்தா, சென்னை பல்கலைக்கழகங்கள் கௌரவ டாக்டர் கொடுத்துப் பெருமை பெற்றன. அவருடைய கலையறிவும் ஞானமும் அவர் எழுதிய எழுத்துக்கள் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். அதில் ஒன்றுதான் ஒரு சிறிய புத்தகம், ஆனால் ஞானம் தோய்ந்தது. அதன் பெயர் ‘எ பில்லர்ட் ஹால் ஃபிரம் டெம்பிள் அட் மதுரா’ என்பது. இப் புத்தகத்தை பென்சில்வேனியா பல்கலைக்கழகமே 1940 இல் பிரசுரித்தது. இந்தப் புத்தகத்தில்தான் அந்த அருங்காட்யகத்தில் உள்ள அரிய சிலைகளின் பிறப்பிடத்தை தான் எப்படி கண்டுகொண்டு அதன் நேர்த்தியையும் அழகையும் எப்படியெல்லாம் வியந்தோம் என்பதையும் எழுதி இருக்கிறார். மதுரை மதனகோபால் சுவாமி சிற்பங்கள் பிலடெல்பியா அருங்காட்யகத்தில் பார்க்கப்படும்போதும் அவைகளின் பிறப்பிடம் நம்முடைய ஊர்தான் என்று தெரியவரும்போதும், நம்மை விட மிக எச்சரிக்கையாகவும், அழகாகவும் பராமரிக்கப்படும் நேர்த்தியைப் பார்ர்க்கும்போதும் நமக்குள் ஒருவித பெருமை நம்மையறியாமல் தோன்றும்தான்

11285

இதோ நார்மன் அவர்களின் முன்னுரை அவர் எழுதியதை அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது.

II
PILLARED HALL FROM A TEMPLE AT MADURA IN THE PHILADELPHIS MUSEUM OF ART
BY NORMAN BROWN
Printed at the University of Philadelphia Press 1940
PREFACE
The only Indian stone temple ensemble in America is the pillared Hall (mandapam) from Madura belonging to the Philadelphia Museum of Art and now installed in a gallery on the top floor of the south wing of eh main building at Fairmont. It consists of a number of monolithic pillars with corbels, Lion capitals and some ornamental frieze slabs, all apparently carved in the sixteenth century. These originally constituted part of the temple until at some unknown date they were defaced and the temple badly damaged or razed, possibly by a Mohammedan conqueror in the eighteenth century. No other museum anywhere can show such a large grouping of integrated architectural unit from a single building of India. The nearest approach in America is the small carved wooden room from a sixteenth century Jain sheine of Putan, Gujarat, in western India which is now set up in the Metropolitan Museum of Art New York. The unit in the Philadelphia Museum so rare outside of India illustrates so many aspects of India Architecture, sculpture and iconography that it has seemed worthy of description in a small monograph, especially since the dimension produces explanation of numerous points not heretofore treated in any publication.

The pieces constituting the pillared hall were originally acquired in Madura in 1912, by Adeline Pepper Gibson who died in France January 10, 1919, in the military service of the United States Base Hospital 38, American Expeditionary force at Nantes. They were presented to the Philadelphia Museum of Art in August 1919 in her memory by Mrs. J. Howard Gibson, Mrs. Norman Henry and Mr. Henry C. Gibson.

Shortly after the pieces were presented to the Museum, they were installed in Memorial Hall Fairmount Park, and the installation with a pageant called “The Building of The Temple” which was given daily on April 19, 20, 21 and 23, 1920. They remained in Memorial Hall until 1938 when it was possible to remove them to the India Gallery in the Fairmount building and commence to install them there with the aid of Federal Works Progress Administrative grant.

In 1934-35, aided by the late Mrs. Robert G. Logan, the Museum made it possible for me to examine the site from which the pieces had come. The mani purpose of my visit to Madura was to secure information that might assist in the future installation of the pieces at Fairmount. I went to Madura at the end of November and spent five days in intensive investigation, taking with me as interpreter and consultant Mr T. G. A. of the Government Museum Madras.who is mentioned frequently in the book. In the hope that additional pieces could be securd, Mr. J. Noraman Henry and Mr. Henry C. Gibson then generously gave a fund which they also graciously permitted to be drawn against the preparation of this book and for assistance in the final installation of the temple.

The main purpose of this work is to determine the site, date, and the significance of the elements comprising mandapams. To do so it has been necessary to develop some points in the history of Madura architecture showing that features described by Jowean Dubreil to the Madura period appear actually to have been known inn the latter part of the preceding period, that is the known one as Vijayanagara. In the iconography many types have received description which are without printed explanation anywhere.

A mirror point elsewhere has been to discuss the mandapam with enough attention to the back ground for a non-Indian visitor to the Museum to understand the meaning of the Indian terms employed and the cultural significance of the ensemble. To this end I have included the two very summary introductory chapters, which contain almost no new material and have throughout tried to treat the mythology with enough fullness to be intelligible.

The book has VI chapters.
I. The age of importance of Madura
II. South India temple architecture
III. The architectural units in the Mandapam. 16 simple columns 8’ 2” average height. 5 of one variety and others different; 14 compound columns 8’ 4” to 8’ 8” in height, 12 of one variety and one of different variety. 12 corbels; 12 lion capitals; 8 frieze slabs.When purchased in 1912, they were all lying in the compound of Madana Gopalswamy temple. When presented to the museum someone felt that the pieces do not belong to this temple but are from Perumal temple (Kudal Alagar Madura.)
Norman feels that the items might have come from other temples also. They may have been kept here.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சோழர்கள் பற்றி பல தகவல்கள் புதைந்து இருந்த கோவில் – எசாலம்-இரண்டாம் பாகம்

பல நேரங்களில் நம் கண் முன்னே, நாம் பலமுறை பார்த்த, பொருள்களில் உள்ள நுணுக்கங்களை ஏனோ கேள்வில்களை எழுப்புவதில்லை. ஆனால் அதை யாரவது கை காட்டியதும் ” அடடே – ஆமாம் இதுவா ” என்று நம்மை சிந்திக்க வைக்கும். அது போலவே இன்று நண்பர் சாஸ்வத் வீணையின் நுனியில் இருக்கும் யாளியை நமக்கு காட்டுகிறார்.

இந்து நாளிதழில் இவ்வாறு சிங்க தலை என்று உள்ளது ! இது சிங்க தலையா ??

கண்டிப்பாக இல்லை. யாளி தான். …மேலும் விவரிக்கிறார் சாஸ்வத் – எசாலம், இரண்டாம் பாகம்

முதல் பகுதியில் இந்த அற்புத டக்ஷினமுர்த்தி வடிவம் என்ற குறிப்பை மட்டுமே சொல்லி அது இருக்கும் இடத்தை மட்டும் சொலிவிட்டு அடுத்த சிற்பங்களுக்கு சென்றுவிட்டேன் . இன்று இந்த அற்புத வீணாதார வடிவத்தை அருகில் சென்று காண்போம்.

தக்ஷினமுர்த்தி வடிவம் எனபது சிவன் குருவாக இருப்பது. சாதாரண குரு அல்ல குருவுக்கு எல்லன் குரு. திரு கோபிநாத் ராவ் ( பல சிற்பக்கலை மாணவர்களுக்கு முதல் குரு இவர்) இவ்வாறு தனது நூலில் இந்த வடிவத்தை பற்றி சொல்கிறார்.

“சிவன் – யோக கலை, சங்கீதம், நாட்டியம் என்று பலவற்றில் வல்லுநர். இவ்வாறு அவற்றை நமக்கு கற்றுக்கொடுக்கும் வடிவமே தக்ஷினமுர்த்தி வடிவம் . இந்த வடிவத்தையே இக்கலைகளை பயில துவங்கும் மாணவர்கள் முதலில் வழிபட வேண்டும்.”

மேலும் – இந்த வடிவம் நான்கு அம்சங்களை கொண்டது – யோக குரு, வினை மீட்டும் கலை, ஞானத்தை – சாஸ்திரங்களை விளக்கும் – வியாக்யானமூர்த்தி. இந்த வடிவத்தை தான் பெரும்பாலும் ஆலயங்களில் தெற்கு திசையில் காண முடியும்.”

இங்கேயும் அதே திசையில் தான் அவர் இருக்கிறார்.

துரதிருஷ்ட வசமாக சிலை சேதம் அடைந்துவிட்டதால் யாரோ அதற்கு முன்னர் புதிதாக ஒரு சிலையை நிறுவி உள்ளனர். நமது பார்வைக்கு சோழர் கால சிலையை அது மறைத்து விடுகிறது.

வீணாதார தக்ஷிணாமூர்த்தி – சங்கீத குரு – இது இன்னும் சற்று அரிய வடிவம். எனினும் பல ஆலயங்களில் இவரையும் நாம் காணலாம். கங்கைகொண்ட​சோழபுரத்தில் இதோ ..

இன்னும் சற்று பழமையான சிலை – கீழையூர்

நிற்கும் பாணியில் உள்ள வடிவங்கள் – கொடும்பாளூர் மற்றும் லால்குடி

இதோ எசாலத்தில்

சிற்ப ஆகமங்களின்படி பார்த்தால் வியாக்யான வடிவத்திற்கும் வீணாதார வடிவத்திற்கும் வீணை தான் வித்தியாசம்! அதுவும் அந்த குடம் வலது ​தொடைமேலே இருப்பது. ஜடா முடி, தலையில் ஊமத்தம்பூ, கபாலம், பிறை, கையில் அக்ஷரமாலை, பாம்பு, தீ, மான் என்று எல்லாம் இருக்கும் – ஆனால் குரு என்பதால் ஆயுதம் தரிப்பது இல்லை போல!

முதல் பாகத்தில் பார்த்த மாதிரி – வியாக்யான வடிவத்திற்கு மேலே விமானத்தில் வீணாதார வடிவம் உள்ளது. அந்த உயரத்தில் பலவற்றை காண முடியவில்லை. இருந்தாலும் அந்த முகமும் வீணையும் என்னை ஈர்த்தது.

பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல. அதன் அழகை பற்றி என்ன எழுதுவது !!

தலைப்பட்டி அழகாக சிரத்தில் – காற்றில் சடா முடி பறந்து முகத்தில் விழாமல் இருக்கவோ ? காதில் அணிகலன், தலையில் வலது புறம் பிறை சூடி …

கழுத்தில் பல்வேறு அணிகலன்கள் – யக்​​ஞோபவீதம் என்று அந்த உயரத்திலும் சிற்பி ஒன்றை கூட விடாமல் செதுக்கிய அழகு அபாரம். ஒருநாள் சாரம் கட்டி மேலே ஏறி இடுப்பில் சிங்கமுகப் பட்டி இருக்கிறதா என்று பார்த்துவிட வேண்டும். அவ்வளவு உயரத்தில் சென்று யாரடா பார்க்கப் போகிறார்கள் என்று விட்டு விடாமல் ​செதுக்கிய அந்தக் காலத்து கலைஞனின் கடமை உணர்ச்சியை எப்படி பாராட்டுவது ?

சரி, வீணைக்கு வருவோம். வலது புறம் குடம் ​தொ​டையில் நிற்கிறது. சற்றே வெளியில் வந்த வண்ணம் – ஆகமங்கள் அப்படித் தான் இருக்க வேண்டும் என்று சொல்கின்றன – வலது கரம் மீட்டும் வண்ணம் அருமை.

இடது புறம் வீணையின் முகத்தில் – இன்று உள்ள வடிவம் போல வளைத்து இல்லாவிட்டாலும் – அங்கே யாளி முகம் தெளிவாக தெரிகிறது.

இந்த வடிவத்தின் காலம் – ராஜேந்திர சோழர் காலம் – அதற்கு அவர் பல சான்றுகளை விட்டுச்சென்றுள்ளார். இதுவும் கங்கைகொண்ட சோழபுரமும் சம காலமாக இருக்க வேண்டும்.

இரண்டையும் சிற்ப வடிவங்களை கொண்டு தெளிவாக குறிக்க இயலும்.

ஒரே போல இருக்கின்றன அல்லவா? இப்போது முதலில் பார்த்த வடிவங்களை கொண்டு ஒப்பிடுங்கள்.

இவை காலத்தால் சற்றே முந்தைய வடிவங்கள் – ஆதித்ய சோழர் காலம் – சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர் வடித்த வடிவங்கள். இன்னும் காலத்தில் பின்னால் சென்றாலும் இந்த வடிவத்தை நாம் காணாலாம் – ராஜசிம்ஹா பல்லவர் காலம் – காஞ்சி கைலாசநாதர் ஆலயத்து வடிவம் இதோ.

கர்நாடகத்தில் உள்ள நரசமன்கலம் சிற்பம்.

இந்த வடிவங்களில் குடம் இடம் மாறி உள்ளது – நாம் முன்னர் கண்ட பதிவில் இது போன்ற பல வடிவங்களில் குடம் மேல் பக்கம் இருக்கும் வண்ணம் உள்ளன.
அப்படியானால் வீணைகள் முதலில் குடம் மேலே இருக்கும் படி வடிக்கப்பட்டு – பின்னர் அந்த பழக்கம் மாறியதா? இல்லை இரண்டு வடிவங்களுமே அந்நாளில் இருந்தனவா? அப்படி என்றால் எதற்காக ராஜேந்திர சோழர் காலத்தில் எல்லா சிற்பங்களிலும் ஒரு சேர குடத்தை கீழ்ப்பக்கம் வைக்கத் துவங்கினார்?

இப்படி ஒரு ஆராய்ச்சி செய்தால் இசையும் சிற்பமும் மேலும் சங்கமிக்கும் என்பது உறுதி ! குரு இன்னும் நமக்கு ஏதோ சொல்லித்தருகிறார் போல!

இன்னும் இருக்கிறது. முன்னர் இந்த வடிவத்தை கீழிருந்து காண்பது கடினம் என்று சொன்னேன் அல்லவா – பின்னர் எப்படி படம் எடுத்தேன் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இந்த ஆலயம் மணற்மேட்டில் புதையுண்டு இருந்தது. அதாவது காலப்போக்கில் அருகில் உள்ள கிராமம் வளர வளர தரையின் சமன் மேலே ஏறி விட்டது. அதனால் அருகில் உள்ள மேட்டில் ஏறி இந்த சிற்பத்தைப் பார்த்து விடலாம்.

அப்படி நாங்கள் சென்ற ​போது இன்னும் ஓரிரண்டு ஆச்சரியங்கள் எங்களுக்கு தென்பட்டன. மிகவும் பழமை வாய்ந்த கிராம தெய்வ வடிவங்கள் அவை. அவற்றைப் பற்றி ……தொடரும்


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

யார் இந்த இரு பொடி கணங்கள் ?

என்னை போன்றவர்களுக்கு இணையம் ஒரு வரப்பிரசாதம் ! ஒரு பெரியவர் நாற்காலி ஆராய்ச்சியாளர் என்று பட்டம் கூட சூட்டினார் ! அப்படி ஒரு ஆராய்ச்சி தான் இது.

புகழ் பெற்ற ராஜ சிம்ஹ பல்லவரது கைலாசநாதர் சிதைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுக்க எடுத்த முயற்சியின் பொது பல கடினமான இடங்களை சந்தித்தோம்.

குறிப்பாக மிகவும் சிதைந்த அடி பாகத்தில் இருந்த இரு உருவங்களை அடையாளம் கண்டுகொள்ள பல படங்களை ஆராய்ந்தோம்.

முடிந்தவரை இவை அந்நாளில் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து அதன்படி படங்களை வடித்தோம். எனினும் இந்த இரு குள்ள கணங்கள் அங்கே இருப்பதே ஒரு ஆச்சரியமாக இருந்தது.

அந்த பெண் வடிவ குள்ள கணம் – உமையவளின் தோழியா ? இலக்கணத்தில் இவர்களை பற்றி ஏதாவது குறிப்பு உள்ளதா? இப்படி எல்லாம் அப்போது தோணவே இல்லை.

பல காலம் கழிந்து நண்பர் அரவிந்த் அவர்கள் தான் லால்குடி சென்ற பொது எடுத்த படங்களை சுட்டியை அனுப்பி வைத்தார்.

அங்கே உள்ள கதை சொல்லும் புடிப்புச் சிற்ப்பங்களை ஆராய்வதே எங்கள் நோக்கம் என்றாலும் அதில் இன்னொரு வடிவம் கவனத்தை ஈர்த்தது.
எதையோ நினைவூட்டியது.

இங்கேயும் அரியணையில் அம்மையப்பன் வடிவம் என்றாலும் முருகன் இல்லை. வலது புறம் அடியவர் ஒருவரும் – மேலே இருபுறமும் இரு முகங்கள் தெரிகின்றன. அவற்றில் நான்முகன், பெருமாள் வடிவங்கள் உள்ளனவா என்பது சரியாகத் தெரியவில்லை. நம் கவனத்தை ஈர்த்தப் பகுதி அரியணைக்கு அடியில் இருக்கும் இரு கணங்கள் தான்….

இந்த சிலையின் காலத்தை சரியாக கணிப்பது கடினம் என்றாலும் சுவாரசியம் என்னவெனில் பல்லவ ஓவியன் தீட்டிய அதே பாணியில் அந்த இரு குள்ள கணங்களும் இங்கே இருப்பது தான்!! இவர்கள் யாராக இருக்கக்கூடும் ?


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment