உலகெங்கிலும் இந்த சிலைத் திருட்டு வழக்கை பலரும் ஆவலுடன் தொடரும் இந்தத் தருவாயில் இந்த “வினோதமான ” கேள்வியை முன்வைக்கிறோம்.
நாம் முன்னரே பார்த்த ஸ்ரீபுரந்தன் நடராஜர் மற்றும் உமை .
இங்கே நாம் கவனிக்க வேண்டியது இரண்டு கோயில்களின் சிலைகள் களவு போயின – ஆனால் ஒரே கோயிலில் தான் திருட்டு நடந்தது. சுத்தமல்லி கோயில் பாழடைந்து இருந்தமையால் ஸ்ரீபுரந்தன் கோயிலுக்கு சிலைகள் ” பாதுகாப்பு ” கருதி எடுத்து வரப்பட்டன.
நண்பர் சேசிங் அப்ரோடைடி வலை தளம் உதவியுடன் இன்று நமக்கு சிலை திருடர்கள் சிலையை திருடியவுடன் எடுத்த படங்கள் – தமிழகத்தில் ஒரு வீட்டில் எடுத்த படங்கள் கிடைத்துள்ளன.
தற்போது ஆஸ்திரேலியாவில் இருக்கும் நடராஜர் சிலை படைகளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்
சாமானியருக்கே இது புரிந்து விடும். சிலை நிறம் மாறியுள்ளது. இந்த பச்சை நிறம் படினா என்று அழைக்கப்படுகிறது. இது வெண்கல சிலை பல நூற்றாண்டுகள் பூமிக்கு அடியில் இருக்கும்போது தானாக வரும். இரும்பு துரு பிடிப்பது போல – ஆனால் இந்த “துரு ” சிலைக்கு நல்லது. மேலும் எந்த வித மாற்றமும் ஏற்படாமல் இந்த படினா சிலையை கவசம் போல காக்கும். பொதுவாக தினமும் பூஜை – அபிஷேகம் என்று கோயிலில் இருக்கும்போது இந்த மாதிரி வராது. நீங்கள் ஒரு கேள்வி கேட்கலாம் – இந்த கோயில்கள் பல காலம் பூட்டி இருந்தனவே ? பூஜை நடந்திருக்காதே என்று. நல்ல கேள்வி – ஆனால் இதற்க்கு உமை பதில் அளிக்கிறாள்.
இந்த படங்கள் ஆர்ட் ஒப் தி பாஸ்ட் 2008 பட்டியலில் உள்ள படங்கள். அதே ஆண்டு தான் ஆஸ்திரேலியா இந்த நடராஜர் சிலையை ஐந்து மில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது. இதில் இருந்து நடராஜர் சிலை வண்ணம் மாற்றப்பட்டது என்று தெளிவாக தெரிகிறது.
ஆம் – இன்றைய காலத்தில் இந்த பச்சை நிறத்தை அமிலங்கள் கொண்டு ஒரே நாளில் ஏற்படுத்த முடியும். நீங்கள் புதிய சிலை வாங்கப் போகையில் எந்த வண்ணத்தில் வேண்டும் என்று ஸ்தபதியிடம் சொன்னால் -அவர் கருப்பு பச்சை தங்க நிறம் என்று எந்த நிறத்தில் வேண்டும் என்றாலும் மாற்றி கொடுக்க முடியும்.
ஆனால் இயற்கையாக பல நூற்றாண்டு எடுக்கும் படினாவுக்கும் இன்ஸ்டன்ட் படினாவுக்கும் வித்தியாசம் உண்டு. மேலோட்ட பார்வைக்கு இந்து தெரியாது – ஆனால் மைக்ரோஸ்கோப் கொண்டு பார்த்தால் எளிதில் கண்டுபிடித்து விடலாம். மேலும் ஐந்து மில்லியன் கொடுத்த சோழர் கால சிலையை வாங்கும் முன்னர் அது உண்மையிலேயே ஆயிரம் ஆண்டு சிலையா அல்லது நேற்று செய்து வண்ணம் ஏற்றப்பட்ட சிலையா என்று சோதித்துப் பார்த்து தானே வாங்க வேண்டும் ??
அடுத்தது – இப்படி ஐந்து மில்லியன் சிலைக்கு வண்ணம் ஏற்றுவது மிகவும் நுண்ணிய வேலை – சரியாக செய்யவில்லை என்றால் சாயம் வெளுத்து விடும். இதற்கு தேர்ச்சி பெற்ற நிபுணர்கள் இருக்கிறார்கள். மேலும் லண்டன் நகரம் தான் இதற்கு பெயர் போன இடம். நமது பத்தூர் மற்றும் சிவபுரம் நடராஜர் சிலைகள் மீட்டது அவை பராமரிப்புக்கு கனடா மற்றும் அமெரிக்காவில் இருந்து லண்டன் வந்தபோது இன்டர்போல் உதவியுடன் செயல் பட்ட இந்திய அரசின் நடவடிக்கை தான்.
அடுத்து நாம் பார்க்க வேண்டிய ஒன்று – இந்த சிலை திருட்டு பற்றியகுற்றப் பத்திர்க்கை . Subhash Chandra Kapoor vs Inspector Of Police on 3 April, 2012
”
The said idols were presented before the Sea Customs Authority, Chennai so as to export it to xxxxxxxx Gallery and was cleared by customs on 6.3.2008 and were exported by ship to Hong Kong. They were further redirected to one xxxxxxxxxxxxxxxx Company at U.K. by direction from the petitioner. “
இந்த டைம்ஸ் ஒப் இந்திய பதிவிலும் இந்த நிறுவனம் பெயர் உள்ளது
அப்படி என்றால் இந்த நடராஜர் நிறம் மாறியது லண்டனிலா ??
ஏன் நடராஜருக்கு மட்டும் பச்சை நிறம் …அந்த நிறத்தில் வேண்டும் என்று யாரவது கேட்டார்களா ?