சிலைத் திருட்டு – பாகம் பன்னிரெண்டு – இவை பற்றிய மேலும் விவரம் கிடைக்குமோ ?

2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்க தனது அருங்காட்சியகங்களுக்கு ஒரு வேண்டுகோள் அல்லது எச்சரிக்கை விடுத்தது.

“Federal authorities are asking American museums to scrutinize their collections for items that they have obtained from a veteran Manhattan art dealer now accused of possessing antiquities stolen from India and other countries. “

அமெரிக்க அதிகாரிகள் அமெரிக்க அருங்காட்சியகங்களை தங்கள் இடத்தில இருக்கும் கலைப் பொருட்களை குறிப்பாக இந்தியா மற்றும் பல நாடுகளில் இருந்த சிலைகளை திருடி விற்றதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஆர்ட் ஆஃப் பாஸ்ட் இடத்தில இருந்து வாங்கிய பொருட்களை ஆராய்ந்து / சோதித்து பார்க்கும் படி எச்சரிக்கை விட்ப்பட்டது.

இன்று வரை இந்த எச்சரிக்கை மூலம் எந்த அருங்காட்சியகமும் தானாக வெளி வந்து எந்த உண்மையையும் வெளியிட்டதாக தெரிய வில்லை. மடியில் கனம் இல்லை என்றால் ஏன் தயங்க வேண்டும் ? இவை தான் நாங்கள் வாங்கிய பொருட்கள், அதற்கு அவர் கொடுத்ததாக பத்திரங்கள் இதோ – என்று சொல்ல ஏன் இவை தயங்குகின்றன?. மில்லியன் கணக்கில் பணம் செலவிட்டு வாங்கி அவற்றை திரும்ப தர நேர்ந்தால் என்ன என்ற அச்சமோ ? அப்படியே திரும்பத் தர நேர்ந்தாலும் ஏற்கனவே தூங்கிக் கொண்டிருக்கும் இந்தியா அரசாங்கம் அப்படியே விட்டுவிடும் என்ற நம்பிக்கையோ?

உதாரணம் : டோலேடோ அருங்காட்சியகம். நாம் ஏற்கனவே பார்த்த ஸ்ரீபுரந்தன் விநாயகர் செப்பு சிலை. இன்று வரை இந்த சிலை இவர்களுக்கு எப்படி கிடைத்தது, யாரிடத்தில் இருந்த வாங்கினார்கள் என்ற தகவல் வெளி வரவில்லை. திரும்பத் தரும் முயற்சிகள் எதுவும் எடுத்ததாகவும் செய்திகள் இல்லை.

இப்போது அவர்கள் இடத்தில மேலும் ஒரு சிலை – அதே ஆர்ட் ஆஃப் பாஸ்ட் இடத்தில வாங்கிய பால வராஹ முர்த்தி சிலை இதோ.


பொருளின் எண்ணைக் கொண்டு இது 2001 ஆம் ஆண்டு வாங்கப் பட்டது என்று தெரிகிறது. இதை ஆர்ட் ஆஃப் தி பாஸ்ட் என்னன்ன பத்திரங்களைக் காட்டி விற்றனர் என்று அருங்காட்சியகம் சொல்லுமா ? ( வழக்கம் போல தூதரக அதிகாரி டெல்லி கடையில் 1970 இல் வாங்கினேன் என்ற ஒரு பொய் பத்திரமாக இருக்குமோ? )

அடுத்து பர்மிங்க்ஹம் அருங்காட்சியகம் ஆர்ட் ஆஃப் தி பாஸ்ட் இடத்தில வாங்கியுள்ள சிவ லிங்கோத்பவ சிலை. 2008 ஆம் ஆண்டு வாங்கியுள்ளனர்.

ஆர்ட் ஆஃப் தி பாஸ்ட் பட்டியலில் உள்ள படமும் இதுவும் ஒரே சிலை சென்று தெரிகிறது.

இவர்களெல்லாம் ஏதோ சாதாரண சிறு ஆர்வலர் அல்லர் – இவை மிகப் பெரிய அருங்காட்சியகங்கள். இவற்றின் நோக்கம் சம கால மனிதனுக்கு அந்நாளைய கலை மற்றும் நாகரீகங்களை விளக்கி ஒரு பள்ளி போல அறிவை வளர்க்கும் இடங்கள். இவை தங்கள் இந்த உயரிய நோக்கத்தை கொச்சைப் படுத்தும் விதத்தில் திருட்டுப் பொருட்களை காட்சியில் இன்னனும் வைத்திருப்பது சரியா?

தெரியாமல் திருட்டுப் பொருளை வாங்கி இருந்தாலும் உண்மை தெரிந்த பிறகும் மறைக்க முயற்சிப்பது தவறுக்கு மேல் தவறு செய்வது தானே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *