ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் தூண்களில் உள்ள உன்னத வேலைப்பாடு
….மண்டபத்தில் இருக்கும் ஒவ்வொரு தூணும் ஒரு வினோதம்…
இதில் இரண்டு தூண்களை மட்டும் இப்போது பார்போம்…
அடுத்தடுத்து இருக்கும் இரு தூண்களில்தான் எவ்வளவு வேறுபாடு…உன்னிப்பாக
பாருங்கள்…
முதல் தூணில் குதிரை ( என்ன கம்பீரமாக மேல் எழும்பி தன் குளம்புகளை வீசி
பிளிரும் குதிரை ) – எதிரில் பாயும் புலி…. குதிரையின் மேல் ஒரு வீரன் தனது ஈட்டியால் புலியின் வாயில் குத்துகிறான்…ஈட்டி பாய்ந்து புலியின் தாடையில் வெளி வருகிறது…
அது போதாதென்று சிற்பி ….குதிரையின் அடியில் ஒரு வீரன் ( அவனுக்கு பின்னால் அவனது உதவி ஆளோ…) அந்த வீரன் வாள் மற்றும் கேடயம் கொண்டு புலியை தாக்குகிறான் ( கேடயத்தை பார்க்க தூணின் மறு பக்கம் போக வேண்டும் … அங்கோ இன்னொரு வீரன் இரு குறு வாள்கள் கொண்டு புலியை தாக்குகிறான் )….. என்ன நுண்ணிய வேலைப்பாடு… பாவம் புலி குதிரை குழம்படி, வாயில் வேல் பாய்ச்சல், ஒரு புறம் கத்தி குத்து, மறு புறம் இரு குறு வாள் குத்து….ஒவ்வொரு ஆயுதமும் குத்திட்டு வெளி வரும் விதம் செதுக்கப்பட்டுள்ளது
சரி அடுத்த தூணுக்கு செல்வோம்….இது மிகவும் வினோதமான சிலை… ஒரு குடுமி வைத்த வீரன்…கையில் தாழ்த்திய கத்தியுடன், கழுத்தில் அழகாக அமர்ந்திருக்கும் ஒரு இளம் பெண்.. அவள் தலையில் காவடி போல் எதையோ சுமக்கிறாள் …. அதன் மேல் குதிரையின் கால்….சரி சற்று பின்னால் இருப்பவரை பார்த்தால்..
ஐய்யய்யோ !! முன்னால் இருப்பவரின் துடையில் இவன் ஒரு குறுவாளை பாய்ச்சுகிறான்…
அவனுக்கு பின்னாலும் ஒரு உதவி ஆள் …..இது என்ன கதை… திரு
என்ன தத்ரூபமான சித்தரிப்பு…!!!!