ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் தூண்களில் உள்ள உன்னத வேலைப்பாடு- பாகம் 3

மீண்டும் அதே ஸ்ரீரங்கம் தூண்கள்…. கல்லில் இவை அனைத்தையும் செதுக்கிய அந்த அழகை – அந்த திறமையை நாம் சரியாக உணர, ரசிக்க இன்னும் இரண்டு இழைகள் இடுகிறேன்….

முதலில் அந்த குதிரை வீரன் மற்றும் குதிரையின் அழகு …அடுத்து வரும் மடலில் தூணின் அடியில் மற்றும் பக்கத்தில் இருக்கும் சிற்பங்கள்…

குதிரை மற்றும் அதன் மேல் இருக்கும் வீரனைப்பற்றி விரிவான உரை எழுதலாம் என்று இருந்தேன்….ஆனால் படங்களையே பேச விடுகிறேன்

குதிரையின் வால் ரோமங்கள், அதன் குழம்பு, கடிவாளம், அதன் பற்கள்,
வெளி தொங்கும் நாக்கு ……

அந்த வீரனின் வாள், அதன் கைப்பிடி – அது வளைந்து இருக்கும் பாணி – அது கல் என்பதால் அதற்க்கு பலம் ஊட்ட அதை பின்னாலிருக்கும் தூணுடன் முட்டுக் கொடுத்து …. அடுத்த தூணில் இருக்கும் வீரனின் கையில் ஒரு சிறு குத்தீட்டி …. ( அடுத்த தூணில் அது சிதைந்து உள்ளது )ஐரோப்பிய நண்பர் ஒருவர் ஒருமுறை சொன்னார் – அங்கே உள்ள குதிரை வீரர்களின் சிற்பத்தை வடிக்கும் பொது – குதிரை முன் இரு கால்களையும் தூக்கிய வாறு வடித்தால் அவர் போரில் வீர மரணம் எய்தார் என்றும், ஒரு கால் மட்டும் தூக்கி இருந்தால் அவர் போரில் பெற்ற காயத்தில் பிறகு உயிர் துறந்தார் என்றும் ….நான்கு கால்களும் தரையில் இருந்தால் அவர் இயற்கையாக இறந்தார் என்றும் ஒரு விதிமுறை உண்டு என்று …. இது உண்மையா ??

……தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *