சிலைத் திருட்டு – பாகம் பதின்மூன்று – அமெரிக்காவில் ஒரு அநாதை விநாயகர்

நெஞ்சு பொறுக்குதில்லையே. கடவுள் என்று போற்றி வழிபடப்பட்ட எங்கள் விநாயகரை களவாடி அயல் நாட்டினருக்கு கலைப் பொருள் என்று பொய் சொல்லி விலைக்கு விற்றுவிட்டானே என்று கதறிக் கொண்டிருக்கும்போது இப்படி ஒரு பெரும் அவமானம். நமது நாட்டின் பண்பாடு கலை கலாசாரம் அனைத்துமே சூறையாடப்படும்போது பெரிய பொறுப்பான பதவியில் இருக்கும் இவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பி இருக்கும்போது இப்படி ஒரு அடி.

டோலேடோ அருங்காட்சியகத்தில் இருக்கும் இந்த விநாயகர் சிலை திருட்டுப் பொருள் என்று தக்க ஆதரங்களுடன் பதிவு ஏற்கனவே செய்துவிட்டோம்.

மேலும் அதே போல அவர்கள் இடத்தில இன்னும் ஒரு பொருள் – பாலர் காலத்து வராஹ முர்த்தி சிலை இருப்பதையும் சென்ற பதிவில் பார்த்தோம்.
அப்படி இருக்க இன்று அந்த அருங்காட்சியகத்தில் இருந்து இப்படி ஒரு திடுக்கிடும் அறிக்கை


Subhash Kapoor Acquisitions Under Review

Subhash Kapoor, a second generation antiquities dealer and owner of Art of the Past Gallery on Madison Avenue in New York City, was arrested in Germany on Oct. 30, 2011 and extradited to India on July 14, 2012 to face charges of illegal exportation, criminal conspiracy and forgery. Art of the Past was in business for 35 years, selling Asian antiquities to a large roster of Museum clients, including the Toledo Museum of Art.

The Toledo Museum of Art, like many museums across the country, acquired objects from Mr. Kapoor in the period from 2001-2010. The most significant of the eight acquired by the Toledo Museum of Art from Mr. Kapoor is a Ganesha figure. After the 2006 Ganesha purchase, Mr. Kapoor gifted 56 small terracotta idols to the Museum. The purchased items have been on public display. The gifted items have never been on public display.

On July 18, 2013 the Museum received a copy of an Indian police report that includes photographs of 18 metal idols stolen from Sripuranthan Village in Tamil Nadu. One of the images of a Ganesha figure closely resembles the Ganesha purchased by the Museum in 2006 from Art of the Past. At the time of purchase consideration, the Museum received a provenance affidavit and the curator personally spoke to the listed previous owner. The object was also run through the Art Loss Registry with no issues detected.

On July 24, 2013 TMA Director Brian Kennedy sent a letter to the Consulate General of India in New York, Mr. Sugandh Rajaram, requesting his assistance in researching the Ganesha’s provenance with Indian officials. To date, the Museum has received no response. On February 17, 2014 a letter was sent to Dr. S. Jaishanka, Ambassador of India to the United States, soliciting his assistance. The Museum has not been contacted by Immigration and Customs Enforcement or any other U.S. or foreign government agency in regards to this object and others the Museum purchased from Art of the Past or gifted by Mr. Kapoor.”

அதாவது அவர்கள் சென்ற வருடம் ஜூலை மாதம் 24 ஆம் தேதி இந்த சிலை பற்றி அமெரிக்கில் உள்ள இந்தியாவின் கோன்சுலட் அலுவலகத்துக்கு கடிதம் எழுதி ஒரு பதிலும் கிடைக்க வில்லையாம்

மீண்டும் இந்திய தூதருக்கு சென்ற வாரம் கடிதம் எழுதி உள்ளனர். அதற்கும் பதில் வந்த அறிகுறியே இல்லை !!!

சந்தேகம் இல்லாமல் ஏற்கனவே தக்க ஆதாரங்கள் கொண்டு இது அதே சிலை தான் என்று நிருபித்து விட்டோம்.

விநாயகர் சிலை ஆலயத்தில் இருந்தபோது ( புதுவை பிரெஞ்சு இன்ஸ்டிட்யூட் உபயம் 1994 ஆம் ஆண்டு) எடுத்த படங்கள் நமது காவல் துறையிடம் 2009 முதல் உள்ளன !!! இன்னும் எத்தனை காலம் தாழ்த்துவார்கள் இவர்கள் ? இல்லை இந்த விநாயகரையும்சிவபுரம் சோமஸ்கந்தர் மாதிரி அனாதையாக அமெரிக்காவில் விட்டு விட எண்ணமோ ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *