சிவபுரம் ​சோமாஸ்கந்தர் – ​சொல்லப்படாத கதை, பாகம் 2

மனித வாழ்வில் ஒரு விஷயம் 70 ஆண்டுகள் கால தாமதம் ஆவது என்பது பெரிய குற்றம், அதுதே சமயத்தில் ஆயிரம் ஆண்டுகள் புகழ்பெற்று நின்ற ஒரு சிலை களவு போனதை பற்றிய தகவல் என்றால் இந்த 70 ஆண்டுகள் சொற்ப காலம் தான். முன்னர் நாம் பார்த்த சிவபுரம் சிலை திருட்டின் தொடர்ச்சி இந்தப் பதிவு. – ஒரு திடுக்கிடும் தகவல் – சிவபுரம் நடராஜர் சிலை திருடு போய்விட்டது – அதற்கு பதில் ஆலயத்தில் இருப்பது ஒரு நகல் என்று நமக்கு சொன்னது ஒரு பிரிட்டிஷ் காரர் – கலை உலகையே அவரது இந்த செயல் உலுக்கியது.

அவர் கொடுத்த குறிப்பு தான் சிவபுரம் நடராஜர் சிலை தாயகம் திரும்ப காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் 1965 ஆம் ஆண்டு Early Cola Bronzes என்ற நூலில் சிவபுரம் நடராஜர் சிலை திருட்டை பற்றிய தகவலை வெளியிட்டார்.

ஆனால் இப்போது முதல் முறையாக – அவரே எழுதிய இன்னும் ஒரு குறிப்பு – இந்த சிலை திருட்டு நடராஜர் சிலையுடன் முடியவில்லை – அதன் கூடவே களவு போன சோமஸ்கந்தர் சிலையும் அதே அருங்காட்சியகத்தில் இருக்கின்றது என்று அவரே ஒப்புக்கொள்ளும் சாசனம் இதோ !!

Marg Vol 48. No.4 June 1997 – EARLY CHOLA BRONZES IN THE NORTON SIMON MUSEUM – Douglas Barrett.

It is interesting to read the General Editor’s Note: “ The late Douglas Barrett wrote this article for the late Norton Simon soon after his visit to the museum in Pasadena, California, in 1978. However, the article was never published. Marg is pleased to publish it now through the generosity of the Norton Simon Museum and Mrs. Mary Barrett. Mr. Barrett was an authority on Cola Bronzes and we feel that his comments on the selected masterpieces will be much appreciated by Indian Art historians. One of the Bronzes ( figure 9) is no longer in the collection and now belongs to a European Collector. Some faithful readers of Marg may recognize a few of the others as they were published in the fifties in the magazines. “

1978 நோர்டன் சைமன் சென்று சிலைகளை பார்த்து அவர் எழுதிய குறிப்பு – யார் கண்ணிலும் இருபது ஆண்டுகள் படாமல் – பின்னர் மார்க் பத்திரிகையில் வெளியாகிறது

முழு குறிப்பைக் கீழே காணலாம் – நமக்கு வேண்டியது 85 ஆம் பக்கம் – அவர் கூறுவது “ Hence, the importance of the remarkable Somaskanda in the Museum ( figures 3 and 4). The Somaskanda, together with a standing Ganesa and the famous Nataraja , formed part of a hoard discovered at Sivapuram ( Tanjavur district). It was published in its uncleaned state by P. R. Srinivasan and with the Ganesa and Nataraja, dated to the middle of tenth century AD.”

மேலும் இந்த திருட்டில் இதுவரை வெளிவராத ஒரு கோணம். பாண்டி பிரெஞ்சு இன்ஸ்டிடுட் சிவபுரம் ஆலயத்தில் உள்ள சிலைகளை 15th June 1956 மற்றும் 16th Nov 1957 படம் பிடித்துள்ளனர். அவர்களுக்கு அப்போது சிலைகள் களவு போய்விட்டன என்பதும் அவர்கள் படம் பிடிப்பது ஸ்தபதி செய்த நகல் என்று தெரியாது. இது வரை யாருமே பார்க்காத அந்த படங்கள் இதோ – இந்த படங்கள் இந்த சிலை கடத்தல் வழக்கில் முக்கிய சாட்சியங்கள் ஆகப்போகின்றன.

டௌக்லஸ் பர்ரெட் 1965 இல் சிவபுரம் சென்றபோது இவற்றை தான் பார்த்திருக்க வேண்டும்.


ஸ்தபதி 1954 ஜூன் மாதத்திலேயே தன கைவரிசையை காட்டிவிட்டார் !! எனவே ஒரு பார்வையிலேயே டௌக்லஸ் பர்ரெட் தன் இடத்தில இருந்த திரு . P.R. ஸ்ரீனிவாசன் அவர்களது நூலில் உள்ள படங்களுடன் ஒப்பிட்டு இவை நகல் என்று சொல்லிவிட்டார்.


திருட்டு ஸ்தபதி நடராஜர் சிலையை ஒரிஜினல் சிலை போல வடிக்க மிகவும் முயற்சி செய்துள்ளான். எனினும் சோமஸ்கந்தர் மிகவும் மோசமான நகல். நடராஜர் மேல் தான் அனைவர் கவனமும் இருக்கும் என்ற நம்பிக்கையோ என்னமா.

சோமஸ்கந்தர் சிலைகளை பார்த்தவுடனே வித்தியாசம் தெரிகிறது.


எனினும் நகல் பார்ப்பதற்க்கு ஒரிஜினல் போல இருக்க அவன் எடுத்த முயற்சி தான் நமக்கு மேலும் இந்த வழக்கில் உதவி செய்ய போகிறது……. அதை அடுத்த பதிவில் தொடருவோம்…

இதுவரை நாம் பார்த்தவற்றை கொண்டு ஒன்று தெளிவாக தெரிகிறது – இந்திய அரசு நோர்டன் சைமன் அருங்காட்சியகத்துடன் 1976 இல் நடராஜர் சிலை பற்றி ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன் படி பத்து ஆண்டுகள் அமெரிக்காவில் அந்த சிலை இருந்து விட்டு மீண்டும் இந்தியாவுக்கும் திரும்பி விட்டது. ஆனால் கூடவே களவு போன இந்த சிலை இன்னமும் அங்கேயே சிக்கி உள்ளது. நமது காவல் துறை இந்த வழக்கை இவ்வாறு முற்றுப்புள்ளி வைத்து முடித்துள்ளது “All accused arrested and convicted. There is no information about the remaining idols “. இப்போது இந்த தகவல் கண்டிப்பாக அந்த அருங்காட்சியகத்தில் 1978 முதல் இருந்திருக்க வேண்டும். தெரிந்தே திருட்டு பொருளை ….

முழு மார்க் குறிப்பு :









Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *