Quantcast



கடந்த மூன்று ஆண்டுகளாக் நான் பல சிறந்த நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பினை இணையம் வழிவகுத்தது . அவர்களுள் அன்பர்கள் பலரும் தந்த ஊக்குவிப்பாலும், உதவிகளாலும் மட்டுமே என்னால் இந்த தளத்தை நிறுவலாம் என்ற எண்ணம் எழுந்தது.

அவர்களுள் நான் சந்தித்த ஆர்வலர் - திரு சந்திரா அவர்கள். எப்போதும் காலில் சக்கரம் இயற்கையாகவே இருப்பது போல சுறுசுறுப்பாகச் சுற்றி தென்னகம் முழுவதும் உள்ள சிதைந்த கோவில்களை பட்டியல் இட்டு அவற்றை எவ்வாறு செவ்வனே சீரமைக்கலாம் என்ற சிந்தனையில் இருப்பவர்- அதனுடன் மட்டும் நில்லாமல் - அந்த பணிகளில் தன்னை ஆழ்த்திக்கொண்டிருக்கும் இவர், இன்று நமக்கு ஒரு அற்புத சிற்பத்தைத் தந்துள்ளார்.

முன்பு நாம் தஞ்சை பெரிய கோவில் தூணில் இருக்கும் புலிக்கால் முனிவர் சிற்பம் மற்றும் அவரது கதையை பார்த்தோம். இன்று மீண்டும் அவர் தான் - எனினும் இந்த சிற்பத்தை பாருங்கள் - வயலூரை அடுத்த ஒரு சிறிய ஊரில் உள்ள மதவிளாகம் கோவில் சிற்பம்.

Pulikaalmuni madavilaagam.JPG

சிற்பியின் அற்புத சிந்தனை வியக்கவைக்கிறது- புலிக்காலை வைத்துக்கொண்டு யோக நித்திரையில் இருக்கும் ஒரு முனிவரை அற்புதமாக சித்தரித்துள்ளான் சிற்பி - முனிவர் என்பதால் ஜடா முடி, கொண்டை, ருத்ராக்ஷம் , கைகளின் யோக முத்திரைகள் - ஆனால், சிற்பத்தின் சிறப்பு - வெறும் புலி காலை மட்டும் காட்டாமல் அமர்ந்திருக்கும் ஒரு புலியின் பாவனையை கல்லில் செதுக்கிஇருக்கும் அவன் திறமை - அருமை.

Pulikaalmuni madavilaagam.JPG
Sitting tiger.jpg

மதவிளாகம் கோவில் மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது. மேல் சுவர் சரியாக செப்பனிடாததால் மழை நீர் உள்ளே வருகிறது. கொடிமரத்தின் தகடுகள் அனைத்தும் இழந்து மொட்டையாக அதி மரம் மட்டும் தான் உள்ளது.

ஒரு அற்புத சிற்பத்தை நம்முடன் பகிர்ந்தமைக்கு நன்றி சந்திரா !!

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , ,

தொடர்புடைய இடுகைகள்:

இன்று நமது நண்பர் பிரசாத் மீண்டும் ஒரு அற்புத ஓவியத்தை தந்துள்ளார் . பேலூர் யானை , அதன் அருமையான சிற்பத்தை அப்படியே ஒரு புகை படத்தை வைத்துக்க் கொண்டு மட்டும் ஓவியத்தை தீட்டி இருக்கும் திறமை அபாரம் - பிரசாத் ( அவர் அமெரிக்காவில் படித்துக்கொண்டிருக்கிறார் ). அவரது மற்ற படைப்புகளை பார்க்க இங்கே சொடுக்கவும்.

பிரசாதின் ஓவியங்கள்

அருமையான ஓவியம் - அவர் பார்த்து வரைந்த புகைப்படத்தையும் பாருங்கள். அருமை

The model.jpg
The replica ( prasad's sketch).jpg

இன்னொரு புகைப்படம் இந்த இடுகையின் காரணம். எனக்கு பத்திரிகைகளில் சிறு வயதில் பிடித்து ஆறு வித்தியாசங்கள் ( அதை மட்டுமே வாசிக்க தெரியும் அப்போது / இப்போது !!)

இந்த சிற்பத்தை பார்த்தவுடன் பிரசாத் தீட்டி உள்ள ஓவியமும் இதுவும் ஒரே சிற்பங்களா என்ற ஐயம் வந்தது. பிறகு அவர் தனது படத்தை அனுப்பி வைத்தார். ஐயம் தீர்ந்தது.

சரி நீங்கள் கொஞ்சம் முயற்சி செய்து சொல்லுங்கள் - இரண்டும் ஒரே சிற்பமா ? இல்லையேல் ஆறு வித்யாசங்கள் உள்ளனவா ?

The model.jpg
The replica ( prasad's sketch).jpg
six differences.jpg

அருமையான யானை சிற்பம், சிற்பி உங்கள் படைப்பை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார் பிரசாத். தொடருங்கள் உங்கள் அருமையான பணியை.

another view.jpg

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

 Page 92 of 135  « First  ... « 90  91  92  93  94 » ...  Last »