Quantcast

நண்பர்களே, இன்றைக்கு நமக்கு ஒரு சிற்ப விருந்து. புள்ளமங்கை ப்ரம்மபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வந்த இரு நண்பர்கள் - இல்லை இல்லை அவர்களை அங்கு சென்று படம் எடுத்து வாருங்கள் என்று தூண்டி இப்போது அதன் பலனை உங்களுடன் சேர்ந்து நானும் அனுபவிக்கிறேன். புள்ளமங்கை ஒரு கலைப் புதையல். ஆனால் புதையல் என்றாலே புதையுண்டு பல காலம் நினைவில் இருந்து விலகி பின்னர் கண்டுபிடிக்கப்படுவது போல, இன்னும் புதையுண்டு கிடக்கும் பொக்கிஷம் புள்ளமங்கை. அதன் அருமைகளை இந்த தொடரின் மூலம் வெளியிடுகிறோம்.

பொதுவாக இடுகைகளில் படங்களை தொலைவில் இருந்து இட்டு மெதுவாக அருகில் செல்வோம். ஆனால் இந்த பதிவுக்கு அதை சற்றி தலைகீழாக மாற்றி, முதலிலேயே அருகில் செல்வோம். படித்து முடித்தவுடன் ஏன் என்று உங்களுக்கு புரியும்.

இன்று நாம் பார்கவிருப்பது நான்கு சிற்பங்கள். கந்தன் பிறப்பை கல்லில் காட்சியை வடிக்கும் சிற்பங்கள், மற்றும் சில யாளிகள்.

எனக்கு பிடித்தமான யாளிகளுடன் துவங்குகிறேன்.

the amazing warriors
warrior emering with his mount
action pose
even ladies
not just a mount he is a yaali rider
sadly broken
see the detailing of the crown

அற்புத வடிவங்கள், இவ்வளவு திறமை கொண்டு இவற்றை வடித்தான் சிற்பி என்றால், இவை வெறும் அலங்கார மதிப்புக்காகவா என்ற ஐயம் வருகிறது?

இன்னொரு யாளி ( கொம்புடன் இருப்பதால் இதனை ஆங்கிலத்தில் வ்யாலா என்கிறார்கள் )

vyaala

என்னடா, முருகனின் பிறப்பு என்று சொல்லி மீண்டும் யாளிகளை வலம் வருகிறானே என்று எண்ண வேண்டாம். போகப் போக உங்களுக்கே புரியும் . சரி இதோ சிற்பங்கள்.

shiva n parvathi dance with rathi and manmadha watching

முதல் வடிவம். உமையும் ஈசனும் ஆடும் அற்புத நடனத்தைக் கண்டு ஸ்தம்பித்து நிற்கும் காமன் மற்றும் ரதி. இருவர் ஆட்டத்தில் தான் என்ன ஒரு உயிரோட்டம். ஆடல் வல்லானின் ஆட்டத்தின் ஆண்மை கலந்த தோரணை, உமையின் வடிவத்தில் பெண்ணிற்கே உரிய நளினம்.

wow, what a lively composition

அடுத்த வடிவம், உமையை தன்பால் ஈர்க்கும் ஈசன்.

shiva striking a pose for a shy parvathi

வெட்கப்படும் பாவையாய் உமை, கடைக்கண் பார்வையால் தலைவனை பார்க்கும் வண்ணம் - ஆஹா, ஈசன் அமர்ந்திருக்கும் அழகைப் பாருங்கள்.

the shy stance of Parvathi
the style of shiva - see the crossed legs

அடுத்து, இன்னும் நெருங்கி விட்டனர். தனது ஆசைக்குரிய பார்வதியை அன்புடன் சிவன் அணைக்கும் காட்சி.

shiva courting parvathi

இந்த சிற்பம் வடித்த சிற்பிக்கு உள்ள அறிவுக்கூர்மையை பாருங்கள். முதல் பார்வையில் ஈசனுக்கு இரண்டு வலது கரங்கள் இருப்பது போல வடித்தாலும் - ஒரு கை பின்னால் அமர்ந்திருக்கும் நந்தியின் மேல் , இன்னொரு கரம் உமையை அன்புடன் அணைப்பது போல இருந்தாலும், சிற்பத்தை இன்னும் ஒரு முறை பாருங்கள்.

the fluid motion of shiva

கல்லில் ஈசனின் கை உயிர் பெற்று, நகர்ந்து உமையைப் பற்றுவது போல காட்டவே சிற்பி அப்படி வடித்தான் போல !!

அது சரி, அந்த முதல் ஸ்பரிசத்திற்கு உமையின் பதில். அப்பப்பா, நாணம் என்றால் இது தானோ !!!

seated grace of parvathi

அதனுடன் நிறுத்தவில்லை சிற்பி, நந்தியை கொஞ்சம் பாருங்கள்.

the detailing of nandhi, the fold of skin on the net, the bent leg

மேலே இருபுறமும் கணங்கள், கிழே பணிப்பெண் என்று பின்னுகிறான் சிற்பி.

gana top left blowing a conch
lady assistant bottom left
the gana top right prasing shiva

நான்காவது சிற்பம். முருகன் பிறப்பு.

kumarasambava

புரியவில்லையா. ஈசனின் மடியில் ஒரு குழந்தை, அப்பாவை செல்லமாக கை நீட்டி ஆசையாய் கன்னத்தை தொடுகிறது. கார்த்திகை பெண்கள் ஆறு, ஐவர் கையில் மற்ற ஐந்து குழந்தைகள்.

ladies holding babies

சிற்பங்கள் மற்றும் படங்கள் தரம் குறித்து சிலர் அதற்குள் கூறும் மறுமொழிகள் கேட்கிறது ( நல்லவை கெட்டவை இரண்டும் !!)

ஒரு நிமிடம் பொறுங்கள். காரணத்தை படங்கள் மூலமே சொல்கிறேன்.

the bottom panels
the top panels

இன்னும் முடியவில்லை

so much to see
closer look

இன்னும் தொலைவில் இருந்து, இப்போது புரிகிறதா ? இந்த சிறிய சிற்ப புதையல்களை நாம் முதல் பார்வையில் விட்டு விடக் கூடும்.

what to see in pullamangai

நான் ” சிறு ” என்று பதிவில் சொன்னேனா ?

size comparison

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை செவ்வாய்க் கிழமை, ஆகஸ்ட் 25th, 2009 அன்று 17:17 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 26 மறுமொழிகள்

தமிழ்த்தேனீ
  1  

சிற்பங்களும் வர்ணனைகளும் மிக அருமை

அன்புடன்
தமிழ்த்தேனீ

ஆகஸ்ட் 25th, 2009 at 17:22
  2  

Thanks to Satheesh and Arvind Venkataraman…
they seems to have spotted such small sculpture outside the temple…
VJ ur lucky to have people who have passion for art and also help you with photos!

ஆகஸ்ட் 25th, 2009 at 18:03
  3  

Got it,unless we see the sequence in full, may mistake single panel with a different story! Many trips to Pullamangai and I am yet to complete a full insight!!!

ஆகஸ்ட் 25th, 2009 at 18:45
சச்சிதாநந்தன்
  4  

காட்டுவித்தால் யாரொருவர் காணாதாரோ? கூர்மை, நுணுக்கம் நிறையவே கொண்டு, பாவனைகளைச் சுவைக்குமாறு தூண்டி, கலைமரபுகளுக்குள் ஆட்கொள்ளும் தகவல், செய்தி, கருத்து, வழிகாட்டல் யாவுமாகி ஆட்கொண்டடீர்கள். தொடருங்கள்.
திருப்புள்ள மங்கை அருமையான வழிபாட்டிடம். நன்றி

ஆகஸ்ட் 25th, 2009 at 19:21
Kathie B.
  5  

Love that temple! It was one of 3 I most wanted to see when first travelled South by myself. Thanks for all the new explanations. I didn’t examine the small panels when I was there, ‘95. Want any more photos?

ஆகஸ்ட் 25th, 2009 at 23:17
gnanambikai
  6  

amazing sculptures!!!and the way u chose to exhibit them was striking….my jaw struck the ground when i went scrolling the page to see actual size of the panel…!!!i haven’t been there,but i’m happy that i went through ur post b4 actually going there…else i would have surely missed to see n cherish these miniatures….thanks to vj n team…

ஆகஸ்ட் 26th, 2009 at 0:29
DHIVAKAR V
  7  

விஜய்!
மனதுக்கு இதமான சுற்றுலா போல அமைந்தது. வெறும் விருந்து அல்ல்.. ஆன்மாவுக்கு விருந்து..

திவாகர்

ஆகஸ்ட் 26th, 2009 at 11:44
shanthi palaninathan
  8  

Vijay,
Thank you for the beautiful visual treat.Thanks to Arvind and Sateesh too.

ஆகஸ்ட் 28th, 2009 at 18:19
anandhinatarajan
  9  

thanks to Aravid and sateesh for beauiful panel.I saw action person in yalli mouth in many temple but man on yalli ina yalli mouth is super.
anandhi

ஆகஸ்ட் 29th, 2009 at 5:15
prasanna
  10  

Wow.. Couldnt even imagine the hardwork the sculptor should have made!! That too in those early days!!!

செப்டம்பர் 17th, 2009 at 16:19
  11  

Thanks all. prasi, welcome to the site

செப்டம்பர் 18th, 2009 at 14:18
annapoorna
  12  

they are so tiny…….. but splendid detailing… beautifully portrayed by you VJ.. it was a feast…. Thank you……..

ஏப்ரல் 1st, 2010 at 16:43
  13  

Excellent post; you have a great eye to watch the minute hidden beauties in the sculpture. Btw, it would be nice if you also mention where the place is exactly located, distance, and all.

Thanks,
KK

http://indiancolumbus.blogspot.com
A unique travel blog

ஏப்ரல் 2nd, 2010 at 11:46
  14  

hi. pullamangai is a real hidden treasure. 11km fm tanjore on the road to kumbakonam. the village is called pasupathy koil. if you find the temple locked, look for the old women who lives in the hut just in front, she is the care taker !!

rgds
vj

ஏப்ரல் 2nd, 2010 at 15:33
  15  

[...] 5. புள்ளமங்கை ப்ரம்மபுரீஸ்வரர் – ஒரு

ஜூன் 27th, 2017 at 21:17
  16  

[...] 5. புள்ளமங்கை ப்ரம்மபுரீஸ்வரர் – ஒரு

ஜூன் 27th, 2017 at 21:18
  17  

[...] 5. புள்ளமங்கை ப்ரம்மபுரீஸ்வரர் – ஒரு

ஜூன் 27th, 2017 at 21:22
  18  

[...] 5. புள்ளமங்கை ப்ரம்மபுரீஸ்வரர் – ஒரு

ஜூன் 29th, 2017 at 9:35
  19  

[...] 5. புள்ளமங்கை ப்ரம்மபுரீஸ்வரர் – ஒரு

ஜூன் 30th, 2017 at 21:44
  20  

[...] 5. புள்ளமங்கை ப்ரம்மபுரீஸ்வரர் – ஒரு

ஜூன் 30th, 2017 at 22:29
  21  

[...] 5. புள்ளமங்கை ப்ரம்மபுரீஸ்வரர் – ஒரு

ஜூன் 30th, 2017 at 22:30
  22  

[...] 5. புள்ளமங்கை ப்ரம்மபுரீஸ்வரர் – ஒரு

ஜூலை 1st, 2017 at 9:55
  23  

[...] 5. புள்ளமங்கை ப்ரம்மபுரீஸ்வரர் – ஒரு

ஜூலை 1st, 2017 at 11:53
  24  

[...] 5. புள்ளமங்கை ப்ரம்மபுரீஸ்வரர் – ஒரு

ஜூலை 1st, 2017 at 17:41
  25  

[...] 5. புள்ளமங்கை ப்ரம்மபுரீஸ்வரர் – ஒரு

ஜூலை 1st, 2017 at 17:53
  26  

[...] 5. புள்ளமங்கை ப்ரம்மபுரீஸ்வரர் – ஒரு

ஜூலை 2nd, 2017 at 20:19

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி