Sundarar parts Kaveri at Tiruvaiyaaru

Today we are going to see a very very interesting panel from Darasuram. Thanks again to Satheesh for the excellent camera work. This panel was a total shocker at first glance and there was no way i could have proceeded to identify it.

Locating this panel itself is difficult – no one seems to even acknowledge their presence. We have already seen the other panel that is alongside – Sundarar resurrecting the boy from crocodile’s belly in a previous post.

At first sight, it looked like someone was felling a tree or a structure in front of a temple and and it was falling on the temple! The man was actually not felling but maybe yelling and pointing towards the falling structure. The structure itself was a bit unique, and could find no parallel?. The second person depicted seemed to look like a King who was sculpted in a very pious pose.

Thankfully, with the help of Mr. N. Ganesan, who was kind enough to share an interesting paper of Prof. Marr, JR, titled “The Periya Puranam frieze at Taracuram: Episodes in the Lives of the Tamil Saiva Saints’ – we see that its a sculptural depiction of a very famous event in the life of Saint Sundarar.

The famous duo have quite a number of interesting legends among them – While on a pilgrimage, they pass through the temple town of Thirukandiyur and seeing the temple of Thiruvaiyaaru across the river, Cherman Perumal wishes to visit that temple as well. However, the river Cauvery is in spate. The flood is so great that boatmen have stopped plying – seeing the desire of his friend to see the Lord, Sundarar sings a series of heart rendering songs on shiva – hearing which the great river parts – allowing them a passage over her sandy bottom.

Now, see the panel – to the left ( as you view) is the Thirukadaiyur temple, Cherman Perumal even in his regal attire ( he was a Chera King) is full of devotion, while Sundarar cups his left hand so that his voice carries over the din of the river waters( see the waves depicted showing the spate) – and across is the holy temple at Thiruvaiyaaru.

A scene that instantly took me to back to Cecil De Mille ‘s Ten Commandments – Charlton Heston and Yul Brynner…the famous parting of the Red Sea by Moses.

13 thoughts on “Sundarar parts Kaveri at Tiruvaiyaaru

  1. விஜய்!

    சுந்தரரைப் போல ஒரு அரிய சிவபக்தரை காண்பது கடினம். எல்லா உரிமையையும் கேட்டுப் பெற்றவர் அவர். பரவையாரை மனைவியாய் கொள்வதிலிருந்து, காவிரியைப் பிரித்தது, எப்போதோ எமனிடம் சென்றுவிட்ட ஒரு உயிரினைத் திரும்ப வரவழைத்தது, பொன் கேட்டு வேறு இடத்தில் பெற்றது எல்லாமே சுந்தரரின் உரிமைப் போராட்டம் போலவே தெரியும். இறைவனை ஒரு உயரிய தோழனாகப் பாவித்தவர். அவனை அடிபணிந்து வணங்குவார். எது வேண்டுமானாலும் இறைவனிடம் கேட்டு விடுவார். ஒருவேளை தாமதமானால் போதும் – கோபம் கூட வந்துவிடும்.

    இந்தக் கோபம் இங்கே காவிரி வெள்ளத்தைப் பிரிப்பதிலும் காண்பித்தவர். ஐயாறு செல்லவேண்டும் – வெள்ளம் வழிந்தோட காவிரி நடுவில் இருக்கிறது. அதற்கென்ன.. இந்த இறைவன் எதற்காக இருக்கிறான் – ஒரு அழுகை அழுது் விட்டால் அருள மாட்டானா, என நினைத்தவர் ஒரு பாடல் பாடுகிறார். பாடிவிட்டு ‘நான் வழி கேட்டு அழுகிறேனாக்கும்’ என்பது போல ஓலம் என்று கூட சொல்லுவார். ஆனால் இறைவனுக்கு சுந்தரர்க்கு பாதை விடுவதைக் காட்டிலும் அவர் பாடல்களைக் கேட்பதில்தான் விருப்பம் போலும்.. மேலும் பாடவிடுகிறார். இல்லை அழவிடுகிறார்..

    பத்துப் பாடல்கள் வரை பாடியவர் காவிரி வெள்ளம் வழி விடாமல் இருக்கக்கண்டு சுந்தரர்க்குக் கோபம் வந்துவிடுகிறது. இதோ பதினொன்றாம் பாடல்

    கூடி அடியார் இருந்தாலும்
    குணமொன் றில்லீர் குறிப்பில்லீர்
    ஊடி இருந்தும் உணர்கிலேன்
    உம்மைத் தொண்டன் ஊரனேன்
    தேடி எங்குங் காண்கிலேன்
    திருவா ரூரே சிந்திப்பன்
    ஆடுந் திரைக்கா விரிக்கோட்டத்
    தையா றுடைய அடிகேளோ !

    அசைகின்ற அலைகளையுடைய, காவிரியாற்றங் கரைக்கண் உள்ள திருவையாற்றை உமதாக உடைய அடிகேள், அடியார் உம்மைவிட்டு நீங்காது கூடியே இருந்தாலும் நீர், அவர்க்கு அருள்பண்ணும் குணம் சிறிதும் இல்லீர், ` அருள் பண்ணுதல் வேண்டும் ` என்னும் எண்ணமும் இல்லீர் ; அது நிற்க, நீர் என்பால் பிணக்குக் கொண்டிருந்தும், யான் அதனை உணர்ந்திலேன் ; உம் அடியேனும், ` நம்பியாரூரன் ` என்னும் பெயரினேனும் ஆகிய யான் உம்மை இங்குப் பலவிடத்துந் தேடியும் காண்கின்றிலேன் ; அதனால், உம்மை யான் நேர்படக்கண்ட திருவாரூரையே நினைப்பேனா யினேன் ; ஓலம் ! (நன்றி http://www.thevaaram.org )

    பாருங்களேன். எப்படிப்பட்ட கோபம்! சரி,, சரி.. திருவையாறுக்காரரே.. உமக்கு நானெல்லாம் ஒரு பொருட்டா.. உனக்கென்ன.. உன்னைச் சுற்றி எப்போதும் அடியார் கூட்டம் இருப்பதால் நானெல்லாம் சாதாரணம்தானே.. போகட்டும்.. நம்ம பேரே நம்பிஆரூரான்.. அந்த ஆரூருக்கே போய்க்கொள்கிறேன்.. நீரும் வேண்டாம்.. உம்ம சங்கதியும் வேண்டாம்.. – என்ற வார்த்தை சுந்தரரின் வாயில் வந்தத்தும்தான் அந்த அற்புதம் நிகழ்கிறது. காவிரி பிரிந்து அந்தக் கோபக்கார பக்தருக்கு வழிவிடுகிறது.

    மனோதத்துவ ரீதியில் பார்த்தோமானால் கூட ஒரு குழந்தை தனக்கு ‘அது’ வேண்டும் என்று கொஞ்சநேரம் அழும். எத்தனை நேரம்தான் அழுவது.. கோபம் வந்து கையில் கிடைத்ததைத் தூக்கிப் போட்டு தான் நினைத்ததைச் சாதிக்கத் தோன்றும். இங்கு சுந்தரர் குழந்தை. அம்மா அந்தக் குழந்தையின் அழுகையை சற்று வேடிக்கைப் பார்த்துவிட்டு பிறகு அதற்கு கோபம் வருகிறது என்பது தெரிந்தவுடன் அது கேட்டதைத் தந்துவிடுவாள்.

    ஆழமாக சிந்திக்கவைத்த சிற்பம்.

    திவாகர்

  2. ஆஹா! அற்புதம் திவாகர் சார்! என்ன ஒரு சிந்தனை ஓட்டம் தங்களுக்கு. எத்தனையோ முறை சுந்தரரைப் பற்றி படித்துள்ளேன், ஆனால் இதுபோன்றதொரு சிந்தனை தோன்றவேயில்லை. தனக்காக ஊடல் கொண்ட தன் மனைவியை சமாதானப் படுத்த இறைவனையே அனுப்பிவைத்தவர் ஆயிற்றே. பித்தன் தன்னுடைய திருமணத்தை நிறுத்திய நாளில் வந்த கோபம் ஒவ்வொரு முறையும் தான் விரும்பியதை அடைய கடைசி வரை சுந்தரருக்கு வந்துகொண்டே இருந்தது போலும்!

  3. உண்மை, திரு சதீஷ் சொல்லி இருப்பது போல் பல முறை சுந்தரரைப் படிச்சும், இப்படி ஒரு கோணம் புரியலை. அருமையான சிற்பம். தேடித் தேடிப் பொறுக்கி நல்முத்துகளாய்க் கோர்ப்பதற்கு வாழ்த்துகள்.

    மூன்று நாளாய் முயன்றும், இன்று தான் திறக்க முடிந்தது. நன்றி.

  4. நுண்ணிய சிற்பம் அழகு என்றால்
    திவாகரின் வர்ணனையோ அதைவிட அற்புதம்!

    தேவ்

  5. அன்புள்ள விஜய் அவர்களே தமிழ்மரபு அறக்கட்டளையின் மின்னாக்கப் பட்டறையில் கலந்து கொண்டு திரும்புகையில் திரு ஓகை நடராஜன் அவர்களும், திரு தேவு அவர்களும் பேசிக்கொண்டு வந்தனர்
    அவர்கள் கூறினார்கள் திரு விஜய் அவர்களின் பணி மிகவும் சிறந்த பணி
    அதற்கு நாம் எல்லோரும் உதவவேண்டும்
    என்று
    அடடா எத்தனை மனங்களை வசப்படுத்தி வைத்திருக்கிறீர் மகிழ்ச்சியாக இருந்தது
    தொடருங்கள் உங்கள் புனிதப் பணியை

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

  6. I dont know weather you have noticed this…even in Ragventhra movie…the river will part for Nilakal Ravi so that he could see Ragaventhra Rajni before he attains samdhi!

  7. hi vairam

    Dont remember seeing, but the correct version should be walking on the river and not the river aprting. as below

    Appanacharya, his favorite disciple, lived in a village across the river,
    very close to Mantralaya. When Appanacharya heard the news that his guru
    was about to enter the brindavana, he immediately
    rushed towards Mantralaya. He was so overcome by devotion and sorrow that
    he did not notice that the river was in spate. His heart full of devotion
    for his beloved guru, he composed a stotra in his
    honor. This is the famous stotra which starts “Sri Poornabodha..”. By
    guruji’s grace he was able to walk across the river in full spate, but
    could not make it in time. Just as he entered the location, the final
    stone was lowered over the Brindavana. He was overcome with emotion and
    broke down, unable to complete the stotra. Then, from the Brindavana,
    Raghavendra Swamy uttered the words “Sakshi
    Haya stotraHi” and completed the stotra composed by Appancharya.

    rgds
    vj

  8. very interesting….. good one vj.

    how come rivers are always depicted vertically in Indian sculpture.. does it change down the ages?

  9. thanks vj…i did see the depiction of the pond too…(and the crane and fish)…there too its vertical! I remember seeing a small panel from a stupa (not sure whether it was Sanchi) – it is vertical there also.!! Will find and send across.

    But as you have pointed out …amazing miniature sculpture. Kudos to Satheesh and you.

  10. அருமை! அற்புதமான நிகழ்வை சிற்பங்களாலும், எழுத்தாலும் பகிர்ந்து கொண்ட விஜய் அவர்களுக்கும் திவாகர் ஜி அவர்களுக்கும் நன்றிகள் பல!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *