கல்லை குடைய வேண்டுமே ?

இதுவரை பல குடைவரைகளை நாம் பார்த்தோம். இவற்றின் அழகை முழுவதுமாக ரசிக்க, அதில் உள்ள கலை நுட்பத்தை மட்டும் அல்லாமல் தொழில் நுட்பத்தையும் அறிய வேண்டும். ஒரு பொருளின் மதிப்பு அதனுள் செல்லும் உழைப்பு, கலை திறன் சேர்த்து வரும் கலவை – அவற்றை அறிந்தால் தானே அவற்றின் அருமை முழுவதுமாக வெளிப்படும்.

இதை அறிய மல்லைக்கு மீண்டும் பயணிப்போம். இங்கே இருக்கும் அற்புத குடவரைகளை வெறும் பாறைகளில் கற்பனை செய்தது மட்டும் அல்லாமல் கருங்கல்லில் எவ்வாறு செதுக்கினான் நம் சிற்பி . அப்போது அவர்களிடம் இருந்த கருவிகள் என்ன. நமக்கு இது புரிய வேண்டும் என்பதற்காகவே அங்கே சில தடயங்களை விட்டு சென்றுள்ளனர் பல்லவ சிற்பிகள்.

மல்லையில் இங்கும் அங்கும் வேலை பாதியிலேயே நின்றுள்ளது ( இது எதனால் என்ற கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் – மல்லையை நிறுவிய மன்னன் யார் என்ற கேள்விக்கும் விடை வெளி வரலாம் – வேலை நடுவில் நிற்க்க காரணம் என்ன, எதிரி நாட்டு படை எடுப்பா ?) – இதில் நமக்கு ஒரு நல்லது – பாதியில் வேலை நின்றதனால் ஆங்காங்கே நமக்கு பல தடயங்கள் தெரிகின்றன.

கல்லில் உளி கொண்டு நேர் கொடு போல சிறு துவாரங்களை செதுக்கி, அதனுள் மர கட்டை கொண்டு அழுத்தி ( ஆப்பு ) – அதில் நீர் விட்டனர். கட்டை நீரை உரிந்து உடல் பெருக்கும் – அனைத்து ஆப்புகளும் ஒரே சீராய் பெருக்க, பாறை விரிய முயலும், பிறகு பிளக்கும்.
14671483
148114611463
சரி, பாறையை பிளக்க இது உதவும். பாறையினுள் குடைந்து குடவரை எப்படி – அதற்கும் சான்றுகள் / தடயங்கள் உள்ளன.
1465147314751477
149114931495
பாறை முகத்தில் சதுரம் சதுரமாக பிரித்து, அதை இன்னும் சிறு சதுரங்களாக செதுக்கி – முடிவில் சிறு கற்கள் போல பாறை சிதறும். அப்பா, என்ன கடினமான வேலை – கை ஓடியும், வியர்வை , உதிரம் இரண்டும் சொட்ட செய்த கலை.
1458148514711479

இப்போது அதன் வெளிப்பாடு – கடின உழைப்பு, கல்லில் செய்ததனால் ஆயிரத்தி முன்னூறு ஆண்டுகள் ஆகியும் இன்னும் நம் கண்முன்னே நின்று பண்டைய கலை திறன் மற்றும் தொழில் நுட்பத்தின் அழியா சின்னங்களாய் திகழ்கின்றன.
1487

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *