விழிஞ்சம் குடவரை கோவில் – ஒரு புதிர்

நண்பர்களுடன் நேற்று முழு தினத்தையும் கழித்தேன். அப்போது கேரளா நண்பர் ஒருவரிடத்தில் இந்த தளத்தை கட்டிக்கொண்டு இருக்கையில், அவர் பல்லவ குடைவரைகள் போலவே திருவனந்தபுரத்திற்கு அருகில் விழிஞ்சம் குடவரை பற்றி ஒரு தகவல் கொடுத்தார். அதன் பெயரில் சற்று தேடினேன். படங்கள் சிக்கின, எனினும் ஒரு புதிரும் வந்தது.

இந்த குடவரை பற்றி விளக்கும் ஒரு சில இணைய தளங்களும் இது ஒரு பதினெட்டாம் நூற்றாண்டு அமைப்பு என்று கூறுகின்றனர். எனினும் சிற்பங்களை பார்த்தல் பல்லவ பாணி மிகுதியாக உள்ளது. எனக்கு தெரிந்த மட்டில் பல்லவ அரசன் ராஜ சிம்மன் கட்டுமானக் கோவில்களை நிறுவ ஆரம்பித்தவுடன் தமிழகத்தில் குடைவரைகள் நின்று விட்டன என்று நினைத்தேன். வாசகர்களுக்கு மேலும் விவரம் தெரிந்தால் பகிருங்கள்.

இப்போதைக்கு படங்களை இணைக்கிறேன். அருமையான பாறை ( மல்லை புலி குகை நினைவுக்கு வருகிறது ) – உள் இருப்பவர் வினதாரி தக்ஷினாமுர்த்தி.


ஆனால் பல்லவ, பாண்டிய குடைவரைகள் போல வெளியே த்வாரபாலகர்கள் இல்லை – ஒரு பக்கம் வில்லுடன் ஈசன் – திரிபுராந்தகன் ? மறு பக்கம் உமையுடன் ஈசன் ( மிகவும் சிதைந்த நிலை )

குகையின் இந்த அருமையான படக்காட்சியையும் பாருங்கள்

குகையின் விளக்க படம்

படங்களுக்கு நன்றி : திரு . ஹரி
http://picasaweb.google.com/vihar7/TemplesOfVizhinjam#5225771479151879650

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *