மல்லை ஓலக்கநெஸ்வர கோயில்
170116991757
நாம் இன்றைக்கு மல்லையில் ஒரு அபூர்வமான இடம் செல்கிறோம். பலரும் தொலைவில் இருந்து பார்த்து விட்டு சென்றுவிடும் இடம். அங்கு செல்லும் சிலரும் அங்கு இருந்து தெரியும் அற்புத இயற்கை எழிலை மட்டுமே காண்கின்றனர். சிலர் புதிய கலங்கரை விளக்கத்தை ( அதுவே 1887 வில் நிறுவியது ) படம் எடுக்க இங்கே வருவர்.
மல்லை ஓலக்கநெஸ்வர கோயில் – இதை ஏன் அபூர்வம் என்று சொல்கிறோம். இது குடவரை கோயில் அல்ல, கல் கொண்டு கட்டப்பட்ட கோயில் , அதுவும் ஒரு சிறு மலையின் மேல். பல காலம் இதை ஆங்கிலேயர் கலங்கரை விளக்கமாக உபயோகித்தனர் !!( padangalukku nanri British Library)
16891686
168016831692
படங்களில் இருந்து இது இருக்கும் இடம் விளங்கும், மகிஷாசுரமர்தினி குகையை அடுத்து உள்ள குறுகிய படிகளில் ஏறி மேலே செல்ல வேண்டும்.
17241722
எனினும் இந்த கோயில் மிகவும் அருமையாக உள்ளது – காற்று மழை, கரி , மனிதன் என்று அனைத்தையும் தாண்டி தன் அருமையான சிற்பங்களுடன் உள்ளது – ராஜ சிம்ஹன் அவனது அழகிய சிங்க தூண்கள், நமக்கு மிகவும் பிடித்த குள்ள பூத கணங்கள், அருமை.
16971703170717511754
நான், திரு சுவாமிநாதன் ஐயா அவர்களின் மல்லை ( விரைவில் புத்தகமாக வெளி வருகிறது ) படித்தபோது- மேலும் அறிந்தேன்.
17051709
பெயர் காரணம் – வீட்டுக்கு ஒரு உழக்கு எண்ணெய் சேகரித்து, இந்த கோவிலில் அணையா விளக்கு எரியுமாம். அதனால் அதற்கு உழக்கு எண்ணெய் ஈஸ்வரர் கோயில் என்ற பெயர் மழுவி ஓலக்கநெஸ்வர என்று வந்துள்ளது.
1709176517671762
இங்கே மூன்று அபாரமான சிற்பங்கள் உண்டு – ஒன்று தட்சிணாமூர்த்தி, ஆனந்த கூத்தாடும் கோலம் (இதே போல சிற்பம் காஞ்சி கைலாச நாதர் கோவிலும் உண்டு ) மற்றும் கைலாசத்தை அசைக்க முயலும் ராவணனை அடிபணிய வைக்கும் காட்சி. ( நாம் முன்னர் கம்போடியா , எல்லோரா இதே சிற்பம் பார்த்தோம் ) மிக அருமையான சிற்பம் – ஈசனின் தலையில் பிறை , ராவணன் வலியால் வாய் விட்டு இறைவது.
169517161718
பார்க்கும் போதே நெஞ்சம் வெடிக்கிறது
நவீன அரசர்கள் தங்கள் ஆசை நாயகிகளுடன் செய்யும் லீலைகளை ஆயிரம் ஆண்டு சிற்பம் என்றும் பாராமல் கல்வெட்டாக கிறுக்கிய கிறுக்கர்கள், இவர்களுக்கு தங்கள் காதலை வெளிப்படுத்த வேறு இடம் கிடைக்கவில்லையா.
171117131716
ராவணனின் தலைஎழுத்தை மாற்ற இவர்கள் கைங்கர்யம்.
1845
கலையின் உச்சிக்கு எடுத்து சென்ற பல்லவனின் கலை பெட்டகம் – தமிழன் தலை நிமிர செய்யும் சிற்பம், கலை திறனை கண்டு தலை வணங்கும் வேலைப்பாடு – இதை பார்க்கும் பொது வெட்கி தலை …..
( நன்றி திரு சுவாமிநாதன் – எங்கள் பொன்னியின் செல்வன் குழும நண்பர்களை மல்லை பயணத்தில் கூட்டி சென்றதற்கு, படங்கள் – திரு ஸ்ரீராம், திரு பிளாஸ்டிக் சந்திரா , திரு விஞ்சாமூர் வெங்கடேஷ் )