சிங்கை அருங்காட்சியகத்தில் இருந்த சோழ வெண்கல சிலையை பற்றிய மடலுக்கு பலரும் மறுமொழி கூறுகையில், இந்த சிலை அங்கே எப்படி வந்தது என்ற கேட்டார்கள். பல அமெரிக்க, ஐரோப்பிய அருங்காட்சியகங்களில் சோழர் கால வெண்கல சிலைகள் உள்ளன.
திரு நாகசுவாமி ஐயா அவர்கள், அருமையாக வாதிட்டு சோழர் கால நடராஜர் சிலையை இங்கிலாந்திலிருந்து மீட்டு வந்தார்.
Bio Data of Dr. Nagaswamy with the London Nataraja case:
அதெல்லாம் இருக்கட்டும், நம் ஊரில் இருக்கும் சிலைகளின் நிலைமை என்ன? இதோ XXXXXXXX கோயில் , சோழர் கால வெண்கல சிலைகள். திரு சந்திரா அவர்களின் படங்கள்.
நல்லதோர் வீணை செய்து – அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி என்னை சுடர்
மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
பாரதியின் புகழ் பெற்ற இந்தப் பாடலை அறியாத தமிழ் உள்ளம் இருக்க முடியாது.
அந்த சிவனே இப்படி புழுதியில் இருக்கும் பொது ? 13th C சோழர் கால பொக்கிஷங்கள் , புழுதி மட்டும் அல்ல, ஒரு சிறு அறையில் ,கூத்தபிரான் – அவன் இடு காட்டில் ஆடினான் என்பதற்காக இப்படியா? அடுத்து அமைதியே உருவான சிவன் .. கரையான்கள் துணைக்கு தரையில் கேட்பார் அற்று கிடக்கும் இந்தக்கலைச் செல்வங்களை பார்க்கும் பொது நெஞ்சு வெடிக்கிறது.
(கோவிலின் பெயர் பாதுகாப்பு கருதி இங்கே xxxxxxxxxxஇடவில்லை )