பல காலமாக தமிழ் படங்களில் தொப்பையை இறுக கட்டி, அதன் மேல் சட்டை அதற்க்கு மேல் கோட் அணிந்து , சொட்டை தலையை மறைக்க விக் அணிந்து, முகத்திற்கு வெள்ளை அடித்து …அப்ப்பா, பேரப்பிள்ளைகளுடன் விளையாடும் வயதில் தனது பெண் வயது நடிகைகளுடன் மரங்களை சுற்றியும் வயிற்றில் பம்பரம் விட்டும் நம்மை அருவருப்பில் ஆழ்த்தி வந்த கோடம்பாக்கம் , மும்பை மற்றும் அமெரிக்க படங்களை பார்த்து கடைசியில் கொஞ்சம் திருந்தி தங்கள் இடையை கட்டுப்பாட்டில் ( சில நடிகைகளும் கூட ) கொண்டு வந்துள்ளனர். மிக நல்ல விஷயம் .
ஆனால் இவர்களுக்கு சென்னைக்கு மிக அருகில் இருக்கும் மல்லை மகிஷா சுரமர்தினி மண்டபத்தில் ஆயிரத்தி முன்னுறு ஆண்டுகளுக்கு முன்னர் வடித்த சிற்பத்தில் வரும் ஒரு வீரப்பெண் காட்டும் உதாரணம் ஏனோ முன்னரே எடுபடவில்லை.
புரியவில்லையா,படங்களை பாருங்கள். பல கோணங்களில் இடுகிறேன். தேவியை பார்காதீர்கள்.
2729270527082714271627312720
சரி சற்று அருகில் செல்வோம். இப்போது தெரிகிறதே. இடுகையின் அர்த்தம் புரிகிறதா ??
அப்பப்பா – என்ன ஒரு கட்டுடல், கையில் பெரிய கத்தி, மகிஷன் காலை வெட்டும் அந்த அற்புத சுந்தரியின் கட்டுடல் கண்ணை பறிக்கிறது. கச்சை கட்டி அவளது முறுக்கேறிய உடலை அழகே வடித்த சிற்பி வாழ்க.
இன்னும் உடற் பயிற்சி செய்யாமல் கணினி முன்னரும் தொலைக்காட்சி பெட்டி முன்னரும் அமைந்திருக்கும் என்னை போல் குண்டர்கள் முதலில் எழுந்து ஓடுங்கள். இடையை குறையுங்கள். சுவரை வைத்து தானே சித்திரம் ( சிற்பம்) எழுத ( செதுக்க ) முடியும்