திருமுடியினையே விளக்காக மாட்டி எரித்த கணம்புல்லர்

நண்பர்களே , சென்ற பதிவில் வெறும் தண்ணீர் கொண்டு விளக்கு எரிந்ததை பார்த்தோம். அப்போது இவ்வாறு எழுதினேன் ” விளக்கு எரிய வேறு ஒரு வஸ்துவை உபயோகித்த இன்னொரு நாயனார் கதையும் உண்டு.” அவர் கதையை இன்று பார்க்க போகிறோம். இன்னொரு தாராசுரம் பெரியபுராணம் சிற்பம் : கணம்புல்ல நாயனார்

வடவெள்ளாற்றுத் தென்கரையிலே அமைந்த இருக்கு வேளூரிலே அவ்வூர்க் குடிமக்களின் தலைவராய்த் திகழ்ந்தவர் கணம்புல்லர். அவர் சிவபக்தியும் பெருஞ்செல்வமும் உடையவராய் விளங்கினார். “மெய்ப்பொருளாவது திருவடியே” எனும் கொள்கையினரான இவர் செல்வப் பயன் திருவிளக்கெரித்தலே என்று எண்ணி திருவிளக்குப் பணிசெய்து வாயாரப் பாடி வழிபட்டு வந்தார். நெடுநாட்களாக இப்பணி செய்துவந்த நாயனார்க்குத் திருவருளாலே வறுமை வந்தெய்தியது. அதனால் ஊரைவிட்டு நீங்கித் தில்லையை அடைந்து தம் வீடு முதலியவற்றை விற்று விளக்கேற்றி வந்தார். அவரிடமிருந்த பொருள் யாவும் ஒழிந்து போகும் நிலை நேர்ந்தது. அவர் பிறரிடம் இரத்தற்கு நாணினார். தமது உடல் முயற்சியினால் அரிந்து கொண்டு வந்த கணம்புல்லினை விலைப்படுத்தி அப்பொருளினால் நெய் பெற்று விளக்கெரித்து வந்தார். அதனால் அவருக்கு கணம்புல்லர் என்று பெயராயிற்று.
சிற்பத்தின் முதல் பகுதியை பார்ப்போம்


ஒருநாள் அவர் கொண்டு வந்த புல் எவ்விடத்தும் விலை போகாதாயிற்று. விளக்கேற்றும் பணி முட்டாதிருத்தற் பொருட்டு அப்புல்லையே மாட்டி விளக்கெரித்தார். அப்போது , சிற்பத்தை மீண்டும் பாருங்கள்.

விளங்க வில்லையா – இன்னும் அருகில் சென்று சிற்பத்தின் அடுத்த பக்துதியை பார்ப்போம்


இப்போது பாடலை பாருங்கள்

பன்னிரண்டாம் திருமுறை

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1248&padhi=72&startLimit=7&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

முன்புதிரு விளக்கெரிக்கும்
முறையாமங் குறையாமல்
மென்புல்லும் விளக்கெரிக்கப்
போதாமை மெய்யான
அன்புபுரி வார்அடுத்த
விளக்குத்தந் திருமுடியை
என்புருக மடுத்தெரித்தார்
இருவினையின் தொடக்கெரித்தார்.

இறைவரின் திருமுன்பு விளக்கு எரிக்கும் முறைப் படி தாம் கருதிய யாமங்களில் குறையாமல் விளக்கை எரிப்பதற்கு அப்புல் போதாமையால், மெய்ம்மை அன்பினால் திருத்தொண்டு செய்பவரான அந்நாயனார், அடுத்த விளக்காகத் தம் திருமுடியி னையே எலும்பும் கரைந்து உருகுமாறு தீயை மூட்டி எரித்தார். அதனால் இருவினைகளான தொடக்கை எரிப்பவர் ஆனார்.

பக்தி ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்ய தூண்டுகிறது பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *