பாம்பு காதணியை தேடி

வாழ்க்கையே ஒரு தேடல் – அப்படி ஒரு தேடலில் நாம் தேடியது கையில் கிடைத்தவுடன் வரும் மகிழ்ச்சி !! அதுவே பல நாள் தேடலாக இருந்த பின்னர் கிடைத்த பொருளாக இருந்தால் – மிகுந்த மகிழ்ச்சி தான். முன்னர் ஒரு முறைஒரு மோதிரத்தை தேடி சென்றோம். அதே போல இன்று ஒரு காதணியை தேடி பயணிக்கிறோம் ! வெறும் காதணியா அது ? பாம்பு காதணி !!

கையில் எடுத்து ராமன் ஐயா தந்த போது அது என்ன என்று புரியவில்லை. “என்ன சார் இது தாயத்தா?” என்று தான் கேட்க தோணியது. ” இல்லை இது ஒரு வித காதணி “என்று அவர் சொன்னபோதும் நம்பிக்கை வர வில்லை. “இதை எப்படி சார் அணிவார்கள் ! போட்டு காட்டுங்க?” என்று சொன்ன பொது -” நம்மால் முடியாது – இதுக்கு ஆச்சி காத்து வேணும் ” என்றார் ! பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலும் இந்த வகை காதணிகள் தமிழ் நாட்டில் பரவலாக இருந்தது என்று சொல்லி வெள்ளி மற்றும் தமிரத்திலும் எடுத்துக் காட்டினார் !!நமக்கு ஆச்சி காதணி என்றாலே இன்று பாம்படம் என்று கிராமங்களில் பார்த்த நினைவு தான் ! இது போல. ஒரு வேளை ’இப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் கதையோ ??’

இன்னும் தேடியதில் இந்த பதிவு கிடைத்தது “Snake earrings of India” அதில் குறிப்பாக இதனை நாகவடூர (ம்) என்று சொல்கிறார்.

இதைக் கொண்டு மேலும் தேடியதில் இணையத்தில் இன்னும் சில குறிப்புகள் கிடைத்தன. – இவை பத்தொன்பதாம் நூற்றாண்டு படங்கள் -19thC


Images:
http://collections.vam.ac.uk/item/O79092/earrings-unknown/
http://shanalramlall.blogspot.sg/2010/03/earrings-from-old-days.html
http://www.asianart.com/articles/ganguly/22.html

அப்படி இருந்தும் – இதை போன்ற காதணியை இப்படி தான் அணியவேண்டும் என்று காட்ட ஒரு படமும் கிடைக்க வில்லை. மனிதர்களை விட்டுவிட்டு சிலைகளில் தேடலாம் என்றபோது மீண்டும் ராமன் சார் – ‘ஒ, இருக்கே ……………. கோயில் பாவை விளக்கு சிற்பத்தின் காதில் இருக்கு’ என்றார். உடனே அங்கு சென்றோம் – ஆஹா , அதே நாகவடூரம் ! அப்போது படம் எடுக்க முடியவில்லை.

அதிருஷ்டவசமாக நண்பர் வீரென் மூலமாக புதவை திரு வசந்த் கதிர்வேல் படங்களை தந்து உதவினார். என்ன அழகு – நீங்களே பாருங்கள்!!

இந்த செப்புச் சிலை சுமார் 17th – 18th C. சார்ந்தது. காதில் நாகவடூரம் என்ன அழகாக இருக்கிறது பாருங்கள் .

தற்போதைய நவீனவகை நகைக் கடைகள் இவை போன்ற பாரம்பரிய டிசைன்களுக்கு உயிர் கொடுக்க வேண்டும் – எப்படியெனில் சாதாரண காதுகளிலேயே அணியும் வண்ணம் இதை சற்று மாற்றி அமைக்க வேண்டும் – அல்லது இவ்வளவு பெரிய காது துளை மீண்டும் ஃபாஷனாவதற்கு எத்தனை ஆண்டுகள் பிடிக்குமோ !! !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *