நமது கலைச்செல்வங்கள் திருடு போவதை தடுப்பதிலும் திருடு போனவற்றை மீட்டு வருவதிலும் நாம் எவ்வளவு அக்கறை காட்டுகின்றோம் என்பதை பல மாதங்களுக்கு முன்னர் இந்த பதிவில் பார்த்தோம்.
இந்த அவல நிலை தான் தற்போது கபூர் சிலை திருட்டு வழக்கிலும் நீடிக்கும் போல உள்ளது. முதலில் இந்த திருட்டை பற்றிய குறிப்புகள் முன்னுக்கு பின் முரணாக இருப்பதை காவல் துறையின் இணைய பக்கத்தில்காண மனம் வருத்தப்படுகிறது.
”
Present Stage of the Case :
There were two temple burglaries in Sripuranthan Village and Suthamally Village during 2006 and 2008 which 28 antique idols of Hindu Deities of immeasurable value were stolen and subsequently smuggled out of India and illegally exported to USA”
குற்றப் பத்திரிகையில் உள்ள குறிப்புகள்
“It was during interrogation of those persons, it transpired that 18 Antique Metallic idols were stolen from Sri Varadaraja Perumal Temple at Suthamalli village by the three of them”…..” theft of eight idols in an another Sivan Temple at Sri Puranthan Village in Ariyalur District”
“…….18 Antique metallic idols from Sri Varadaraja Perumal Temple at Suthamalli village. A Non Bailable Warrant was issued to the petitioner and for recovery of stolen idols. Blue notices were sent for extradition of the petitioner to CBI, Interpol, New Delhi. It was further found that the same gang was also involved in the theft of eight Antique metallic idols stolen from Sri Pragdeeswarar Temple at Sri Purandan village in Ariyalur District. They were also exported to the U.S.”
அப்போது 18+8 = 26 சிலைகள் பற்றிய தரவே உள்ளது.
மேலும் இந்த வழக்கில் 18 மட்டுமே உள்ளது.
“On 13.04.2008, in a famous temple viz., M/s.Arulmigu Sundareswarar and Varadharaja Perumal Thirukovil, Suthamalli Village, Udayarpalayam Taluk, Ariyalur District, as many as 18 idols, made of panchalohas were stolen away.”
இப்படி இருக்க சிலைகள் எந்த வருடம் திருடு போயின என்று கூட தெளிவான குறிப்புகள் இல்லை. மேலும் திருடு போன சிலைகளின் புகைப்படங்கள் வெளியிட்ட காவல் துறை சற்று கவனம் எடுத்துக்கொண்டு சரியான பெயர்கள் கூட போட முயற்சி எடுக்கவில்லை இனைய தலத்தில் :நீங்களே பெயர்களை பாருங்கள் தீப லக்ஷ்மி என்று அம்மன் சிலைக்கும், சம்பந்தர் என்று மாணிக்கவாசகர் சிலைக்கும், கிருஷ்ணன் என்று சம்பந்தர் சிலைக்கும் பெயர் இட்டு பட்டியலை வெளியிட்டால் எப்படி? மேலும் அடுத்த பட்டியலில்தீபலட்சுமி என்று அஸ்திர தேவர் சிலை, முருகன் என்று சண்டிகேஸ்வரர் சிலையை தப்புத் தப்பாக பெயர் இட்டு உள்ளனர்.
தரவிறக்கம் செய்ய அவர்கள் தலத்தில் உள்ள Pdf ஏதோ கொஞ்சம் பரவாயில்லை. எனினும் இணைய தளத்தில் இருந்த சண்டிகேஸ்வரர் சிலை இங்கே காணவில்லை. அதற்கு பதில் சுப்பிரமணியர் சிலை வந்துள்ளது. எல்லாவற்றையும் சேர்த்து எண்ணிப் பார்த்தால்…
சுத்தமல்லி – 8 சிலைகள். , ஸ்ரிபுரந்தன் 8 சிலைகள் (நடராஜர் மற்றும் சிவகாமி இரண்டாக எண்ணிக்கை)
மேலும் சண்டிகேஸ்வரர் சிலை சுத்தமல்லி படங்களை ஒற்றி இருப்பதால் அதுவும் அந்த சிலைகளுடன் சேர்த்துக்கொண்டால் கூட 17 சிலைகளின் படங்கள் தான் உள்ளன.
முந்தைய பதிவுகளில் பல சிலைகளை பற்றிய குறிப்புகள் தந்துவிட்டோம். இன்று மேலும் இரண்டு சிலைகள் பச்சை நிறத்தில் கோடிட்டு இருப்பதை பாருங்கள். இவற்றை நாங்கள் முன்னரே அடையாளம் கண்டு இவை தற்போது இருக்கும் அயல் நாட்டு அருங்காட்சியகங்கள் குறிப்புகளுடன் அதிகாரிகளுக்கு அனுப்பி விட்டோம் இவற்றை அவர்கள் 2006 ஆண்டு வாங்கி உள்ளதாக தெரிய வருகிறது. இவற்றை கொண்டு அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
இவை எவ்வளவு முக்கியம் என்பதை மேலும் வலியுறுத்த சென்ற வாரம்தி ஆஸ்திரேலியன் நாளிதழ் மேலும் 21 சிலைகள் கபூர் இடம் இருந்து வாங்கியவை என்று ஒரு பட்டியலை வெயிட்டு உள்ளது. அவற்றில் மிகவும் முக்கியாமான சோழர் காலத்து சிலை நர்த்தன சம்பந்தர்
இந்த சிலை பற்றி மேலும் குறிப்புகள் இல்லை. காவல் துறை வெளியிட்ட படங்களுடன் ஒப்பிட முடியவில்லை. (அவர்கள் தான் வேறொரு சம்பந்தர் சிலையை நர்த்தன கண்ணன் என்றும் மாணிக்கவாசகரை சம்பந்தர் என்றும் பெயர் மாற்றிவிட்டனரே!!)
இவ்வளவு பெரிய சிலை திருட்டு வழக்கில் இன்று வரை சரியான புகைப்படங்கள் கூட வெளி வரவில்லை என்பது கண்டிக்கத்தக்கது. பாண்டிச்சேரி IFP இடத்தில மேலும் படங்கள் உள்ளனவா? முழுவதுமாக முயற்சி செய்தால் ஒழிய இந்த சிலைகளை மீட்டு வர இயலாது.
கபூர் நடத்திய ஆர்ட் ஒப் தி பாஸ்ட் பட்டியல்களில் மேலும் பல செப்புத் திருமேனிகள் உள்ளன. படங்கள் இல்லாமல் இவற்றை மீட்க முடியாது.
நர்த்தன கிருஷ்ணன் / நவநீத கண்ணன் – பட்டியல் செப்டம்பர் 2008
இந்த கண்ணன் சிற்பம் ஆஸ்திரேலியா சம்பந்தர் சிலையுடன் ஒத்த காலம் என்று சொல்ல முடியும்.
முருகன் – சோழ சிலை – செப்டம்பர் 2008 பட்டியல்
மிகவும் முக்கியமான முருகன் சிலை இது (நாம் முன்னர் பார்த்த முரகன் சிலை பிற்கால சோழ காலம் – அதனை விட இது பழையது)
விநாயகர் – சோழர் சிலை – September 2009 பட்டியல்
சிலையில் பீடம் இல்லை. சுத்தமல்லி நடராஜர் மற்றும் உமை சிலைகளின் பீடங்களில் “சுத்தவல்லி” என்று செதுக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை எல்லா சுத்தமல்லி சிலைகளிலும் இதே போல எழுத்து இருந்தமையால் பீடத்தை விலக்கி உள்ளார்களோ என்ற ஐயம் எழுகிறது. அப்படி என்றால் இந்த சிலை சுத்தமல்லி கோவிலில் இருந்த திருடப்ப்பட்டதா? இங்கே நாம் ஒரு விஷயம் தெரிந்துக்கொள்ள வேண்டும் – பாண்டி IFP நிறுவனத்தின் பட்டியலில் சுத்தமல்லி கோயிலின் ஒரு விநாயகர் சிலை இந்தக் குறிப்பில் உள்ளது 02235. அவர்கள் இந்தப் படத்தைக் கொடுத்தால் மேலும் ஒரு திருட்டை நிரூபனம் செய்யலாம்.
உமை – சோழ சிலை – செப்டம்பர் 2011 பட்டியல்
அருமையான சிலை. இந்த சிலை இன்னும் அமெரிக்காவில் தான் உள்ளது என்று நினைக்கிறோம் சமீபத்திய செய்திகளில் வந்த சிலை இதுவோ?
நடராஜர் – சோழ சிலை – மார்ச் 2011 பட்டியல்
மேலும் ஒரு அருமையான நடராஜர் சிலை. இது வரை காவல் துறை வெளியிட்ட படங்களில் இது இல்லை
இங்கே மீண்டும் பாண்டி IFP குறிப்பில் பதிவு எண் 11207 ஸ்ரிபுரந்தன் கோவிலில் இரண்டு நடராஜர் உள்ளன. படங்கள்?
மேலும் நமது குழுமத்தின் தோழி ஒருவர் ஆர்ட் ஒப் தி பாஸ்ட் ஆர்ட் ஒப் ஆசியா என்ற ஒரு பத்திரிகையில் வெவ்வேறு தருணங்களில் வெளியிட்ட விளம்பரங்களை வெட்டி அனுப்பி உள்ளார். இதை கொண்டு தான் ஒரு மிக முக்கிய குறிப்பு கிடைத்துள்ளது. அதனை ஏற்கனவே காவல் துறைக்கு அனுப்பிவிட்டோம். எனினும் மேலும் சில திருமேனிகள் அடையாளம் காண முடியவில்லை. அவற்றை இங்கே பதிவேற்றி மேலும் பலரின் உதவியை நாடுகின்றோம். இவற்றை பற்றி ஏதாவது தகவல் தெரிந்தால் கண்டிப்பாக எங்களுக்கு அனுப்புங்கள்.
சோமஸ்கந்தர்.
இது காவல் துறை பதிவில் உள்ள சுத்தமல்லி சோமஸ்கந்தர் இல்லை.
ஜைன மஹா யக்ஷர் – சோழர் சிலை
மிக முக்கிய சிலை
பார்வதி – சோழர் காலம்?
DSC_6720
மேலே உள்ள குறிப்புகளை கொண்டு நமது காவல் துறை தங்கள் பணியை முடுக்கி விடும் என்ற நம்பிக்கையுடன்…