
பெரிய, முக்கியமான பார்வதி செப்புச் சிலை, தென்னிந்திய சோழர் காலம், பதினோராம் நூற்றாண்டு
இப்படித்தான் அந்த பிரபலாமான ஏல நிறுவனம் ஏலம் விடும் சிலைக்கு தலைப்பு கொடுக்கிறது. விலை பட்டியல் இந்த சிலைக்கு ஐந்து கோடி முதல் ஏழு கோடி என்று விலை நிர்ணயம் செய்து ஏலத்தில் ஆறு கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.
விற்பதற்கு ஏதுவாக ஒரு காணொளியும் உள்ளது.
பொதுவாக இது போன்ற பெரிய அளவில் இருக்கும் சோழர் சிலைகளின் காலம் பதினோராம் நூற்றாண்டு – அதாவது செம்பியன் மாதேவி காலத்திற்கு பின் ராஜராஜர் மற்றும் ராஜேந்திர சோழர் காலம்.
இந்த சிலை எப்படி ஏலத்திற்கு வந்தது என்று சரியான விரிவான தகவல்கள் இல்லை.
Provenance
Collection of Ariane Dandois, London, acquired in Geneva, 16 March 1977
Literature
C. Vogel, “Global Treasure Trove,” New York Times Magazine, 1 March 1987, pp. 62-66
இந்த குறிப்பைத் தேடி பார்த்தால் இந்த சிலை பற்றி ஒன்றுமே இல்லை.
இதன் படி இந்த சிலையை முன்னர் வைத்திருந்த பெண்மணி ஒரு பெரிய அமெரிக்க லக்ஷாதிபதியின் ” ” என்று தெரிகிறது.
அப்படி இருக்க இந்த சிலை பற்றி தேடியபோது 1944 ஆண்டு வெளிவந்த இந்த குறிப்பு கிடைத்தது.
Gauri
A Southern Bronze
By K. B. IYER

One of such pieces is Gauri from the Kailasanath temple, Conjeeveram, now in the collection of Ramgopal, the well-known dancer.
Both tradition and stylistic features distinguish it as an early Chola work of probably the 10th century
Gauri is the Gracious Mother of the Universe, the Better-half of Siva, half-female half-male (Ardha-nariswara). In love and in devotion unexcelled even among the gods, She is the supreme arche-type of conjugal felicity. When love’s darts bruise young maidens’ hearts, their secret prayers are turned to her. It is she who protects them from every shoal and storm on the unchartered sea of married life. Just as Siva as Nata-raja symbolises the cosmic law of rhythm, Parvati in her aspect as Gauri symbolises the universal and eternal female instinct of yearning devotion, aspiration and concern for the male. Isn’t this figure instinct with that poignant feeling which makes the contemplation of beauty a haunting delight?
மேலோட்டமாகவே இரு சிலைகளும் ஒன்று போல இருக்கின்றன. இன்னும் கூர்ந்து பார்ப்போம்.
குறிப்பில் இருக்கும் அளவுகள் ஒத்து போகவில்லை என்றாலும்…
1944 குறிப்பு கொடுக்கும் அளவு ”Exclusive of the pedestal which is 9 inches, the figure is 26 inches in height” ஆனால் ஏல கடையில் இவ்வாறு உள்ளது ”33 1/8 in. (84.2 cm.) high ” – ஆனால் சிலையை ஒப்பிட்டு பார்க்கும் பொது இரண்டும் ஒன்றே என்று தெளிவாக தெரிகிறது.
இங்கே நாம் மனதில் கொள்ள வேண்டியது – காஞ்சி கைலாசநாதர் கோவிலுக்கு உடையார் ராஜ ராஜ சோழர் வந்து “பெரிய திருக்கற்றளியாகிய” என்று பிரமிக்கும் குறிப்பு கல்வெட்டுகளில் இருக்கிறது, மேலும் அவர் இதனை கொண்டே தானும் ஒரு பெரிய கற்றளியை நிறுவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டார் என்று பலரும் கருதுகின்றனர். ஒரு வேளை இந்தத் திருமேனி உடையவர் கொடுத்த கொடையோ? கல்வெட்டு அறிஞர்கள் தேடிப் பார்த்தால் குறிப்பு கிடைக்கலாம் !!
இப்போது தெளிவாக இருப்பவை – இது காஞ்சி கைலாசநாதர் கோயில் சிலை – எப்படியோ புகழ் பெற்ற நடன கலைஞர் ராம் கோபால் இடத்தில 1944 வரை இருந்தது.
இவர் 2003 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் UKவில் காலம் ஆனார்.
இந்த சிலை எப்படி இந்தியாவில் இருந்து சென்றது – எப்போது சென்றது. 1977 ஆம் ஆண்டு இதனை ஜெனீவாவில் யாரிடம் இருந்து வாங்கப்பட்டது ? இந்த 1944 குறிப்பு .இணையத்தில் சிறு தேடலில் கிடைக்கிறது. பொதுவாக இவ்வளவு விலைக்கு விற்கப்படும் பொருட்கள் பற்றி தீவிர விசாரணை எடுக்கவேண்டும். அப்படி எடுத்தால் இந்த குறிப்பு கண்டிப்பாக கிடைத்திருக்கும். அதை மறைத்து விட்டு எதற்காக ” A large and important bronze figure of Parvati” என்று சொல்லி விற்கவேண்டும்?