2010 ஆம் ஆண்டு தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரம் ஆண்டு விழாவின் பொது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதுஉடையார் ராஜ ராஜ சோழர் சிலை என்று கருதப்பட்ட சிலை.


இதை ஒட்டி அப்போது நாம் இட்ட பதிவு சோழ மன்னர்களின் வெங்கலச் சிற்பங்கள் – ஆய்வுத் தகவல்களின் தொகுப்பு வாசகர்களுக்கு நினைவில் இருக்கலாம்.
அப்போது பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டு குறிப்பில் இருந்து அவரது சிலையின் அளவு பற்றிய தகவல் தெரிந்தது
14. இரண்டு திருக்கரங்கள் கொண்ட பெரியபெருமாளின் செப்புத் திருமேனி ஒன்று, உச்சி முதல் பாதம் வரை ஒரு முழம் நான்கரை விரல் அளவு உயரம் கொண்டது.
ஒரு முழம் என்பது தோராயமாக 15 அங்குலம், நான்கரை விரல் என்பது அரை முழம், அப்படியெனில் மொத்த அளவு 22.5 அங்குலங்கள் அதாவது 57 செ.மீ.
Bronzes of South India – P.R. Srinivasan (F.E. 1963, L.R. 1994) என்ற நூலில்
சோழ மன்னரின் உருவத்தைக் காட்டும் 74 செ.மீ. உயரம் கொண்ட இந்த வெங்கலச் சிலை பத்மாசனத்தின் மீது ஸமபங்க ஆஸநம் கொண்டு கூப்பிய கைகளுடன் உள்ளது

மீண்டும் ஒரு முறை அந்த சோழ அரசரின் சிலையை பார்ப்போம்.





இவர் அரசர் என்பதற்கு உள்ள முக்கிய ஆதாரம் அவரது இடது காலில் உள்ள வீரக்கழல்.

சென்ற ஆண்டு ஒரு ஏல நிறுவனம் a சோழர் காலத்து சிலை ஒன்றை ஏலம் விட்டது. பெரிய அளவு சண்டிகேஷ்வரர் சிலை – தென் இந்தியா, சோழர் காலம், 10 / 11 நூற்றாண்டு என்று தலைப்பு இட்டு அவர்கள் நிர்ணயம் செய்த விலை முப்பத்தி ஆறு லட்சம் முதல் நாற்பத்தி எட்டு லட்சம்.
A Large Bronze Figure of Chandikeshvara
SOUTH INDIA, CHOLA DYNASTY, 10TH/11TH CENTURY

ஒருமுறை சென்னை மற்றும் தஞ்சை அருங்காட்சியகங்களில் உள்ள சண்டிகேஷ்வரர் சிலைகளை பார்த்து விடுவோம்.
இவற்றில் எதிலுமே வீரக்கழல் இல்லை.
மீண்டும் ஒருமுறை ஏலம் விடப்பட்ட சிலையை பாருங்கள். இது சண்டிகேஷ்வரர் சிலையா அல்லது சோழ அரசர் சிலையா ?
கண்டிப்பாக சோழ அரசர் சிலை தான்.
அவர்கள் ஏலத்தின் போது கொடுத்த அளவுகள்
247/8 in. (63.1 cm.) high
நாம் முன்னர் அனுமானம் செய்த அளவிற்கு கிட்டத்தட்ட வந்துவிடுகிறது.
இந்த சிலை எப்படி விலைக்கு வந்தது என்று எந்த குறிப்புமே அங்கே இல்லை.
Pre-Lot Text
PROPERTY FROM A EUROPEAN COLLECTION
ஒரு வேளை இவர்தான் நாம் தேடிக்கொண்டிருக்கும் உடையார் ராஜ ராஜ சோழரோ? 35 லட்சத்துக்கு ஏலம் போய் விட்டாரே!!