திருவியலூர் கோவிலிலும் நுண்ணியமான, நுணுக்கமான சிற்ப வேலைப்பாடு – ( நரசிம்ம வடிவம் முன் இருக்கும் பேனாவை வைத்து ஒப்பிடுங்கள் )
914
படத்தை பாருங்கள்- ஒரு அறிய சிற்பம் – இதில் இருப்பது ஒரு சிவ
லிங்கம், கரம் கூப்பி நிற்கும் குரங்கு, அடுத்து வரும் உருவம் யார் ? பல
தலைகள் – இரு பக்கத்திலும் பத்து கைகள் ….ஆஹா இலங்கை அரசன். ஆனால் அவன்
கட்டுண்டு கிடப்பது போல அல்லவா உள்ளது.
917
அதே கதை தான் – பாத்திரங்கள் இப்போது புரிகின்றன – சிவ லிங்கம், வணங்கும்
வாலி – வாலியின் வாலில் கட்டுண்டு கிடக்கும் இராவணன். … விளங்க
வில்லையா ?
வாலி உலகிலேயே மிகவும் உடல் வலிமை பெற்றவன். அதனுடன் அவனுக்கு ஒரு வரம் உண்டு – அவனை எதிர்த்து போர்செயவோரின் பாதி பலம் அவனுக்கு கூடும்.. வாலி மகா சிவ பக்தன். தினமும் நான்கு திக்குகளுக்கும் சென்று ஈசனை வழிபடுவான். அவ்வாறு அவனை ஒருநாள் இராவணன் தனது புஷ்பக விமானத்தில் இருந்து பார்க்கிறான் , என்னடா ஒரு குரங்கு ஈசனை வணங்குகிறதே என்று அதை சீண்ட – ஓசை இடாமல் கீழ் இறங்கி அதன் வாலை பிடிக்க எத்தனிக்கிறான். அப்போது வால் அவனை கட்டுகிறது – இது வாலிக்கு தெரியகூட இல்லை – அவனுக்கு அவ்வளவு வலிமை – அவன் வாலில் சிக்கி இருக்கும் இலங்கை அரசனை உணராமல்
நான்கு திக்குகள் தாவி பூஜையை முடிக்கிறான். அப்புறம் தான் பின்னால் ஏதோ
முனகல் கேட்க …… இராவணன் வாலியிடம் மன்னிப்பு கேட்டு நண்பனாக விடை
பெறுகிறான்.
சிற்பியின் திறன் பாருங்கள் – வாலி இராவணனை இதிற் கொல்லவில்லை – அதனால் அவன் தனது வரத்தின் வலிமை பெறாமலேயே லன்கேஷ்வரனை விட வலிமை பெற்றவன் என்பதை உணர்த்துகிறான்.
எனினும் இருவரும் ஒரே வில்லுக்கு இறை ஆனார்கள்…
thanks ( check out many more such images)
http://www.kumbakonam.info/kumbakonam/tiviyalur/info/phogal.htm