சிலைத் திருட்டு – பாகம் பத்து :. நாகப்பட்டினம் புத்தர்

இந்த சிலை திருட்டு வழக்கில் இன்று இன்னும் ஒரு பயணம் – பௌத்த மதம், கற்சிலை – புத்தர். சாதாரண புத்தர் சிலை இல்லை – நாகப்பட்டினம் 11 ஆம் நூற்றாண்டு சோழர் சிலை – ஆம் மாமன்னர் ஸ்ரீ ராஜா ராஜ சோழர் காலத்து சிலை. அவர் நாகப்பட்டினம் சூடாமணி விஹாரத்துக்குக் கொடுத்த சிலையோ ?? இந்த சிலை, தற்போது கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருக்கும் சுபாஷ் கபூர் நிறுவனம் ஆர்ட் ஆஃப் தி பாஸ்ட் செப்டம்பர் 2010 பட்டியலில் இருக்கிறது. அதன் மேல் இன்று ஒரு சிறப்பு பார்வை.


நாம் இங்கே கவனிக்க வேண்டிய தகவல் ஹிந்து நாளேட்டில் நவம்பர் 11 ஆம் தேதி 2012 இல் வெளியான செய்தி மற்றும் படம். இவை இண்டும் ஒரே சிலை மாதிரி இருக்கிறதே என்று உங்களுக்கு தோன்றவில்லையா?

நாளேட்டு குறிப்பில் இந்த சிலையைத் சிலைத்திருடர்கள் திருட எண்ணி குறி வைத்ததாகவும் காவல் துறையின் துரித நடவடிக்கைகளால் முறியடிக்கப் பட்டதாகவும் உள்ளது – ” The Buddhist statue marked for theft by alleged Kapoor associate, Sanjivi Asokan, but not stolen owing to police action.”

மேலும் இவ்வாறு ” One Buddhist idol was said to have been marked for theft by Kapoor’s alleged head of operations in Tamil Nadu, the now-imprisoned Sanjivi Asokan. However, that idol was ultimately not stolen, quite likely due to timely action by authorities. “

ஹிந்து நாளிதழ் படத்தில் உள்ள சிலையில் வலது கை கட்டை விரலை பாருங்கள்.

மீண்டும் ஆர்ட் ஆஃப் தி ஃபாஸ்ட் பட்டியலில் உள்ள படத்தை பாருங்கள் – முக்கிய துப்பு – இங்கும் புத்தர் சிலையின் வலது கை கட்டை விரல் உடைந்து இருப்பதை காணலாம்.

அப்படி என்றால் இது ஒரே சிலை – அது எப்படி. மேலும் பட்டியலில் இந்த சிலை சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் ” On the Nalanda Trial “ என்ற சிறப்புக் கண்காட்சியில் 1st Nov 2007 முதல் 23rd March 2008 வரை இருந்தது என்று உள்ளது. இது ஒரு மிகவும் பிரசித்தி பெற்ற கண்காட்சி – பாரதப் பிரதமர் திரு மன்மோகன் சிங்க் அவர்கள் வந்து துவக்கி வைத்தார் !!!

அருங்காட்சியகம் இந்த கண்காட்சி குறித்து வெளியிட்ட இந்த குறிப்பில் அதே சிலை இருக்கிறது



“…viewed stunning Buddhist art, including this 11th Century stone sculpture from South India, weighing over 700 kg.”

அது எப்படி – நமது அதிகாரிகள் எடுத்த துரித முயற்சி எங்கே போனது ?? ஹிந்து நாளிதழ் வெளியிட்ட படம் எங்கோ கட்டாந்தரையில் கோயில் மதில் சுவர் அருகில் இருப்பது போல தானே உள்ளது !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *