வாலி வலிமை சாலி

திருவியலூர் கோவிலிலும் நுண்ணியமான, நுணுக்கமான சிற்ப வேலைப்பாடு – ( நரசிம்ம வடிவம் முன் இருக்கும் பேனாவை வைத்து ஒப்பிடுங்கள் )
914
படத்தை பாருங்கள்- ஒரு அறிய சிற்பம் – இதில் இருப்பது ஒரு சிவ
லிங்கம், கரம் கூப்பி நிற்கும் குரங்கு, அடுத்து வரும் உருவம் யார் ? பல
தலைகள் – இரு பக்கத்திலும் பத்து கைகள் ….ஆஹா இலங்கை அரசன். ஆனால் அவன்
கட்டுண்டு கிடப்பது போல அல்லவா உள்ளது.
917
அதே கதை தான் – பாத்திரங்கள் இப்போது புரிகின்றன – சிவ லிங்கம், வணங்கும்
வாலி – வாலியின் வாலில் கட்டுண்டு கிடக்கும் இராவணன். … விளங்க
வில்லையா ?

வாலி உலகிலேயே மிகவும் உடல் வலிமை பெற்றவன். அதனுடன் அவனுக்கு ஒரு வரம் உண்டு – அவனை எதிர்த்து போர்செயவோரின் பாதி பலம் அவனுக்கு கூடும்.. வாலி மகா சிவ பக்தன். தினமும் நான்கு திக்குகளுக்கும் சென்று ஈசனை வழிபடுவான். அவ்வாறு அவனை ஒருநாள் இராவணன் தனது புஷ்பக விமானத்தில் இருந்து பார்க்கிறான் , என்னடா ஒரு குரங்கு ஈசனை வணங்குகிறதே என்று அதை சீண்ட – ஓசை இடாமல் கீழ் இறங்கி அதன் வாலை பிடிக்க எத்தனிக்கிறான். அப்போது வால் அவனை கட்டுகிறது – இது வாலிக்கு தெரியகூட இல்லை – அவனுக்கு அவ்வளவு வலிமை – அவன் வாலில் சிக்கி இருக்கும் இலங்கை அரசனை உணராமல்
நான்கு திக்குகள் தாவி பூஜையை முடிக்கிறான். அப்புறம் தான் பின்னால் ஏதோ
முனகல் கேட்க …… இராவணன் வாலியிடம் மன்னிப்பு கேட்டு நண்பனாக விடை
பெறுகிறான்.

சிற்பியின் திறன் பாருங்கள் – வாலி இராவணனை இதிற் கொல்லவில்லை – அதனால் அவன் தனது வரத்தின் வலிமை பெறாமலேயே லன்கேஷ்வரனை விட வலிமை பெற்றவன் என்பதை உணர்த்துகிறான்.

எனினும் இருவரும் ஒரே வில்லுக்கு இறை ஆனார்கள்…

thanks ( check out many more such images)
http://www.kumbakonam.info/kumbakonam/tiviyalur/info/phogal.htm

கல்லை மட்டும் கண்டால் ..கண்முன்னே சிலை திருட்டு

நாளிதழ்களில் அவ்வப்போது சிலை திருட்டு பற்றி படித்துள்ளேன். ஆனால் இந்த படங்களை பார்த்த பின்னர் நானே சிதைந்து போனேன்.
938

புகழ் பெற்ற இந்த இடம் கம்போடியாவில் உள்ள கபால் சிபியான் என்ற இடம். இங்கே ஆயிரம் லிங்கம் உள்ள அருவி உண்டு… ஜல சயன பெருமாள் சிற்பம். என்ன அருமையான வேலைப்பாடு – ஒரு காட்டின் நடுவில் ரம்மியமான சௌந்தர்யத்தில் இயற்கை எழில் கொஞ்ச கொட்டும் அருவியின் தாளத்தில் பல நூற்றாண்டுகள் நித்திரையில் இருந்த கோலம்…நாபியில் இருந்து பிரம்மன், காலருகில் லெட்சுமி ….மூன்று மண்டபங்கள் – தனி தாமரைஆசனத்தில் மீண்டும் பிரம்மன் …அனைத்தும் கலைக்க பட்டு…சிலை திருட்டு>>>>>>
944946949

முதலில் லக்ஷ்மி முகம் …அப்படியே பெயர்த்து எடுக்க எப்படி தான் மனம் வந்ததோ ? ஐயோ ..நெஞ்சம் வெடிக்கிறது…இதை படம் எடுத்து அதிகாரிகளுக்கெல்லாம் அனுப்பி உள்ளனர்…அப்போதும் எதுவும் நடக்கவில்லை…அதாவது நல்லது நடக்க வில்லை…அத்துடன் நின்றார்களா மாபாதகர்கள் …அடுத்து பெருமாளையும் பெயர்த்து எடுத்து விட்டனர்…
942
இப்போது எதோ ஒரு நல்ல உள்ளம் அதை செப்பனிட்டு உள்ளது…எனினும் அந்த புராதானமான சிலை …..951

மல்லை பூனை, சைவ பூனையோ

மல்லை பகிரத பிரயத்தனம் காட்சியில் அடி புறத்தில் வரும் ஒரு சுவாரசியமான காட்சி
921934
– ஒரு கால் தூக்கி தபஸ் செய்யும் பகிரதன் ( அல்லது அர்ஜுனணன்) – அவனை பின் தொடரும் ஒரு பூனையும் அவனை போல் தபஸில் உள்ளது –
926929
அந்த பூனை செய்யும் பொய் தபஸில் ஏமார்ந்து தனது ஜென்ம எதிரியை துதிக்கும் எலி….. பூனையின் தவம் கலைந்தந்தும் என்ன ஆகும்…. அது சைவ #######பிள்ளை##### மன்னிக்கவும்
பூனையோ.
924932

இராவணனை சீண்டும் குட்டி பூதகணம், யானைக்கும் அடி சறுக்கும் அல்லவா

இராவணன் கைலாயத்தை அசைக்கும் காட்சி – முதலில் நாம் கம்போடியா சிற்பம் பார்த்தோம் …இப்போது எல்லோரா .
888891897
இதில் நாம் கவனிக்க வேண்டியது என்ன வென்றால் – தனது ஆணவத்தாலும் தலைகனத்தாலும் அரக்கன் அவன் செய்த காரியத்தை தண்டிக்கும் சிவன் – ( சிதைந்தாலும் … அம்மை அப்பன் முகத்தில் என்ன ஒரு கலை) அவ்வாறு கைலாயத்தின் அடியில் சிக்கி இருக்கும் அவனை கண்டு சிவ கணங்கள் அனைத்தும் பரிகாசம் செய்கின்றன. யானைக்கும் அடி சறுக்கும் அல்லவா… வலிமை மிக்க ஒருவன் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது அவனை கண்டு சிறுவரும் நகைபதுண்டு. அதனை எல்லோரா சிற்பி கல்லில் வடித்திருபதை பாருங்கள்.
895903899901906
ஒரு பக்கம் ஒரு குள்ள கணம் கை நீட்டி ஏளனமாக சிரிக்கிறது – மற்றொரு
பக்கம் ஒரு கணம் பின்னால் திரும்பி குனிந்து சொல்லமுடியாத இடத்தை
காட்டி… அதை அடுத்து ஒரு கணம் சிக்கி இருக்கும் அவன் விரல்களை
கணக்கு வாத்தியார் போல் தடி கொண்டு அடிக்கிறது
893901

இந்த சிலை மிக பெரியது என்று சொல்லி விடலாம்…எப்படி உணர்த்த முடியும்..சரி, இதோ படம்.
910

quoting appar’s verses as below:

அப்பர் பாடியது 3-11.

கடுகிய தெர்செலாது கயிலாயமீது
கருதேல் உன் வீரமொழி நீ
முடுகுவது அன்று தன்மம்மென நின்று பாகன்
மொழிவானை நன்று முனியா
விடுவிடு வென்று சென்று விரைவுற்று அரக்கன்
வரையுற்று எடுக்க முடிதோள்
நெடுநெடு வீற்றுவிழ விரலுற்ற பாத (ம் )
நினைவுற்றது என் தன் மனனே

உரை :

தனக்கு சமனாக யாருமே இருக்கக் கூடாது அந்தப் பரம்பொருளே யாயினும் என்று அகங்காரம் பட்டு, அந்தப் பரம்பொருளை கயிலையில் இருக்கும் சிவபெருமானாகக் கருதி அந்தக் கையிலயையே அசைத்து தனது அதிகாரத்தை அங்கு நிறுவ முயன்று ஓர் தேரில் மிக விரைவாக சென்றான் இராவணன். அப்போது அந்த தேர்பாகன் அத்தை கண்டு போருக்காதும் இயலாமையும் உணர்ந்து , அந்தக் கைலாயம் மீது இந்த தேர் செல்லாது என்பதோடு அவ்வாறு செலுத்துவது தருமமும் அன்று என்று மொழிவான். அதனை கேட்டும் மனம் திருந்தாது, அந்தப் பாகனை சினந்து இன்னும் விரைவாக செலுத்துக என்றான். இவ்வாறு மிக விரைவாக சென்று கைலையை அடைந்து சிவபெருமான் பார்வதியோடு இருக்கும் கயிலாய மலையை அசைக்க கருதி எடுக்க, அது கண்டு சிவபெருமான் சிறிதே தன் விரலால் நசுக்க, நசிபுண்டு தலையில் இருந்த கிரீடம் உடம்பு எல்லாம் நெடு நெடுவென தளர்ந்து விழ , அவனும் அலறி தன் தவற்றினை உணரத்தான். இப்படிப்பட்ட வல்லமை மிக்க இறைவனை இன்றைய நிலையில் நினைவு கூர்ந்து மகிழ்ந்து என் மனனே

முதலில் பூத கணங்களின் வேடிக்கை விளையாட்டு சிற்பியின் சிந்தனை என்று நினைத்தேன்… அதையும் அப்பர் தனது பாடலில் பாடியுள்ளார் (நன்றி திரு திவாகர் மற்றும் திரு சுப்ரமணியம் )…ஆஹா …இதோ வரிகள்

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=4&Song_idField=4034&padhi=&startLimit=8&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

அப்பர் தேவாரம் – திருமுறை 4.34.8

பக்கமே விட்ட கையான் பாங்கிலா மதியன் ஆகிப்
புக்கனன் மாமலைக் கீழ்ப் போதுமா(று) அறிய மாட்டான்
மிக்கமா மதிகள் கெட்டு வீரமும் இழந்த வாறே
நக்கன பூதம் எல்லா[ம்] நான்மறைக் காட னாரே.

ஒவ்வொரு பக்கமும் பத்துக் கைகளை உடைய இராவணன் தன் தீச்செயல் விளைவுகளைப் பற்றி அறியும் அறிவு இல்லாதவனாய் மலையின் அடியில் புகுந்து வெளியே வரும் வழியை அறிய இயலாதவனாய் மேம்பட்ட அறிவும் கெட்டு வீரத்தையும் இழந்த நிலையைக் கண்டு மறைக்காட்டுப் பெருமானுடைய பூத கணங்கள் சிரித்தன.

மல்லை தவம் – யானைகள் ஒரு பார்வை

863841
ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னும் தங்கள் எழில் குறையாமல் இருக்கும் இவை அருமை. இவை அப்போது ( வடிவமைக்க பட்டவுடன் ) என்ன அழகுடன் இருந்திருக்கும் – இல்லையேல் ஆயிரம் ஆண்டுகள் ஆனதால் இவற்றுக்கு அழகு கூடுகிறதா??
855857859861
839
யானைகளின் மடிந்த காது, பின்னால் செல்லும் ( பெரிய) யானையின் வளைந்த துதிக்கை, ஒரு படத்தில் ( யானைகளின் முன்னால் இருந்து ) பாருங்கள் – யானை தலை மண்டை அமைப்பு ( குறிப்பாக இரண்டாம் யானையின் மண்டை – அழகாக இரு பிளவுகளுடன் ) – என்ன கம்பீரம் , இரு பெரிய யானைகளின் கால்களுக்குள், மற்றும் பின்னால் விளையாடும் குட்டி யானைகளின் அங்க அசைவுகள்…படத்தில் சூரிய வெளிச்சம் மற்றும் சிலையின் நிழல் செய்யும் விளையாட்டு – உயிரோட்டம்.
859865

இருக்கும் சிலை மிருகங்கள் போதாதென்று உயிர் ஆடுகள் வேறு. ( சிலையின் அளவை குறிக்க உதவுகிறது )
846849
( this picture is from a friend)
மல்லை சிற்பிகள் எந்த அளவிற்கு கலை வல்லுனர்களாய் இருந்தார்கள் என்பதற்கு இணைத்துள்ள யானை படத்துடன் சிர்ர்பங்களை ஒப்பிடுங்கள்
836859
கல்லிலே கலைவண்ணம் கண்டான்
இரு கண்பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான்

என்னும் சீர்காழியின் வெங்கலக் குரலில் பாட்டு காதிலே ஒலிக்கிறது ( நன்றி திரு தமிழ்த்தேனீ ஐயா )

மல்லை தவம், எது அசல் எது நகல்

மல்லை பகிரத ப்ரயதினத்தை வடிப்பதற்கு முன் அருகில் இருக்கும் மலையில் பல்லவ சிற்பிகள்  ஒரு முறை கதையை சோதித்து பார்த்து உள்ளனர்.
779787
இதோ படங்கள். ( புதிய கலங்கரைவிளக்கம் அதன் இருப்பிடத்தை காட்டுகிறது.)

இங்கும் பிளந்த பாறையை தேர்ந்து எடுத்து உள்ளனர் – ஆனால் இங்கு பாறை இரண்டாகவே பிளந்து இருக்கிறது.
785791
வரம் கேட்பவனும் வரம் அளிப்பவரும் இடம் மாறி உள்ளனர். ( இடமிருந்து வலம் ). சோதனை என்பதால் சற்று சிறிய அளவில் செதுக்கி உள்ளனர் (in low relief)
774795
கம்பீர யானைகள் இல்லை ( ஒன்று இரண்டு யானை தலை தெரிகிறது ), பறக்கும் கந்தர்வர்கள், சிவ பூதகணங்கள் உள்ளனர்.

771782789793
சிவனின் கையில் அஸ்தரம் இல்லை.
777806
வரம் அளிக்கும் செதுக்கல் இங்கே இறங்கும் கங்கையின் இடத்தை விட கொஞ்சம் நகர்ந்து இருப்பதால் – விண்ணவரும் மன்னவரும், அனைத்து ஜீவராசிகளும் கங்கை இறங்கும் காட்சியை காணவே விரைகின்றனர்….. எனவே இங்கு அவர்கள் முதலில் விண்ணகர கங்கை புவி இறங்கும் காட்சியை மாட்டும் செதுக்க எத்தனித்து ..பின்னர் மறுமுறை அசலில் செதுக்கும் பொது இதில் அர்ஜுனன் பசுபத அஸ்திரம் பெரும் காட்சியை பிணைத்து செதுக்கி உள்ளனர்….

மல்லை தவம் ..முதல் பார்வை

எங்களை பற்றி என்ற மடலில் நாங்கள் இட்ட படத்தை பற்றி விமர்சனங்கள் பல வந்துள்ளன…இங்கே இதை விட சிற்ப கலையை போற்றும் படம் இட்டு இருக்கலாம் என்று, எனினும் அந்த படம் இட்டதின் நோக்கம் அறிய பொக்கிஷங்களை அவற்றின் மதிப்பை அறியாமல் உள்ளோம் என்பதை உணர்த்தவே.

பின்னால் இருக்கும் மல்லை தவம் ….சரி அதற்கு ஈடு கட்ட ஒரு முழு தொடரையும் அற்பனிக்கிறோம்

இதோ மல்லை தவம் – ஒரு முதல் பார்வை.

பல்லவ சிற்பிகளின் சிந்தனை சிறகடித்து பறக்க, அவர்கள் கண்ட இந்த மலை அவர்களின் கைவண்ணத்தின் கீழ், நூறு அடி நீளம் நாற்பது அடி உயரமும் உள்ள கற்பாறை கலை பாறையாக மாறி , தமிழக சிற்பக்கலையின் விஸ்வரூபமாக உருபெற்று அதன் மனிமகுடாமாக திகழ்வதை பாருங்கள். இதை போல, இந்த அளவில், அதுவரை எவரும் சிந்தித்ததில்லை, அதன் பின்னரும் எத்தநித்ததில்லை. ஆயிரத்தி முன்னூறு ஆண்டுகள் கழிந்தும் நம்மை அசரவைக்கும் படைப்பு

முனிவரின் சாபத்தினால் சாம்பலான தனது முன்னோர்கள் உயிர் பிக்க கடுந்தவம் புரிந்து, விண்ணகர கங்கையை பூமிக்கு கொண்டு வந்த பகிரதனின் உன்னத முயற்சி. இதை சித்தரிக்க இயற்கையாகவே பிளந்த பாறையை தேர்தெடுத்த சிற்பி, அதில் விண்ணவர், நாகர், பூலோகவாசிகள் , மிருகங்கள் என்று ஒரு உலகத்தையே செதுக்கி (அனைத்தையும் விளக்க இதை ஒரு தொடராக இட வேண்டும் ) …அதில் பல புதிர்களை வைத்து …முதல் புதிர் அர்ஜுனன் ஈசனின் பசுபத அஸ்திரத்தை தவம் செய்து பெரும் காட்சியை பிணைத்து ( இதை விளக்க அடுத்து வரும் சோதனை தவம் மடல் படியுங்கள் ) அதில் பூனை, எலி , யானை, வேடன் , சிவா பூதகனத்தின் வயிற்றில் புலி முகம் என்று பல சுவாரசியமான சிற்பங்களையும் உலவ விட்ட கற்பனை அருமை.

முதல் காணல் என்பதால் – நிறைய விளக்கம் இல்லை – நீங்கள் பார்க்கும் பிளவு முன்காலங்களில் மழை பெய்யும் பொது அருவி போல மழை நீர் கங்கை இறங்கும் கோலத்தை நடித்து காட்டும் வண்ணம் செதுக்க பட்டுள்ளது. கங்கையின் வலது புறம் ஒரு காடு .. இடது புறம் விண்ணவர்கள் இந்த அறிய காட்சியை காண விரைகின்றனர். வரம் அளிக்கும் ஈசனின் அதிகார தோரணை, மற்றும் வரம் பெறுபவரின் கடுந்தவத்தினால் எலும்பும் தோலுமாய் காட்சி ( அணு ஆயுதம் பெற தவம் …இப்போது இந்தியாவின் நிலை ??)

தொடரும்

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் தூண்களில் உள்ள உன்னத வேலைப்பாடு

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் தூண்களில் உள்ள உன்னத வேலைப்பாடு
….மண்டபத்தில் இருக்கும் ஒவ்வொரு தூணும் ஒரு வினோதம்…

இதில் இரண்டு தூண்களை மட்டும் இப்போது பார்போம்…

125 134 136

அடுத்தடுத்து இருக்கும் இரு தூண்களில்தான் எவ்வளவு வேறுபாடு…உன்னிப்பாக
பாருங்கள்…

முதல் தூணில் குதிரை ( என்ன கம்பீரமாக மேல் எழும்பி தன் குளம்புகளை வீசி
பிளிரும் குதிரை ) – எதிரில் பாயும் புலி…. குதிரையின் மேல் ஒரு வீரன் தனது ஈட்டியால் புலியின் வாயில் குத்துகிறான்…ஈட்டி பாய்ந்து புலியின் தாடையில் வெளி வருகிறது…

128 130

அது போதாதென்று சிற்பி ….குதிரையின் அடியில் ஒரு வீரன் ( அவனுக்கு பின்னால் அவனது உதவி ஆளோ…) அந்த வீரன் வாள் மற்றும் கேடயம் கொண்டு புலியை தாக்குகிறான் ( கேடயத்தை பார்க்க தூணின் மறு பக்கம் போக வேண்டும் … அங்கோ இன்னொரு வீரன் இரு குறு வாள்கள் கொண்டு புலியை தாக்குகிறான் )….. என்ன நுண்ணிய வேலைப்பாடு… பாவம் புலி குதிரை குழம்படி, வாயில் வேல் பாய்ச்சல், ஒரு புறம் கத்தி குத்து, மறு புறம் இரு குறு வாள் குத்து….ஒவ்வொரு ஆயுதமும் குத்திட்டு வெளி வரும் விதம் செதுக்கப்பட்டுள்ளது

சரி அடுத்த தூணுக்கு செல்வோம்….இது மிகவும் வினோதமான சிலை… ஒரு குடுமி வைத்த வீரன்…கையில் தாழ்த்திய கத்தியுடன், கழுத்தில் அழகாக அமர்ந்திருக்கும் ஒரு இளம் பெண்.. அவள் தலையில் காவடி போல் எதையோ சுமக்கிறாள் …. அதன் மேல் குதிரையின் கால்….சரி சற்று பின்னால் இருப்பவரை பார்த்தால்..

ஐய்யய்யோ !! முன்னால் இருப்பவரின் துடையில் இவன் ஒரு குறுவாளை பாய்ச்சுகிறான்…
அவனுக்கு பின்னாலும் ஒரு உதவி ஆள் …..இது என்ன கதை… திரு

என்ன தத்ரூபமான சித்தரிப்பு…!!!!

தாராசுரம் – படி அடி சண்டை

தாராசுரம் கோவிலில் இருக்கும் இந்த இரு சிற்பங்களையும் கொஞ்சம் பாருங்கள்.. இவை வாயிற் கை படி சிற்பங்கள் –

 

அழகிய யானை யாழி , படியில் அடியிலும் ஒரு மகர யாழி .. அதன் மேல் ஒரு வீரன்… .. யானை யாழியின் மேல் வாள் கேடயம் கொண்ட போர் வீரன்…..

இரண்டாவது சிற்பம் அடுத்த வாயிலின் படி – இதில் யாழியின் அடியில் உள்ள கல் சிதைந்து விட்டமையால் வேறொரு கல் கொண்டு நிரப்பி உள்ளனர்.

 

அங்கும் ஒரு சிறு போர்…இல்லை போர் பயிற்சி…ஒரு பக்கம் மிக நேர்த்தியாக மல்யுத்தம் நடை பெறுகின்றது — இன்னொரு பக்கம் வாள் பயிற்சி… இடையில் இவர்களை மேல் பார்வை இடும் ஆசிரியை ….ஆம் அனைவரும் வீர தமிழ் பெண்டிர்….எனினும் இதை இங்கே கொண்டு வந்து வைத்திருக்க வேண்டாம் நமது நிபுணர்கள்…..

நண்பர் ஸ்ரீராம் உபயம்…நல்ல படங்கள்
1115
1119

கலை சங்கிலி, கல் சங்கிலி

சென்னைக்கு மிக அருகாமையில் உள்ள காஞ்சிபுரத்தின் புராதன கோயில்களில் ஒன்றான தேவரஜச்வாமி அலையத்தின் கல்யாண மண்டப சிற்ப வேலைபாடு இது. ஆனால் பராமரிப்பு இல்லாமையால் இந்த அறிய பொக்கிஷம் கேட்பார் அற்று கிடக்கிறது. விலை மதிப்பில்லா சிற்பங்களுக்கு தற்போது காவல் காய்ந்த கருவேல முர்க்களே.

நீங்கள் பார்க்கும் சங்கிலி முற்றிலும் ஒரே கல்லில் செதுக்கப் பட்டது

அதுவும் மேல் இருக்கும் தளத்தில் இருந்து தொங்குமாறு செதுக்கிய அந்த மகாசிற்பியின் ஆவி தற்போது நிலையை கண்டால் என்ன பாடு படுமோ. அய்யோ , அக்கற் சிலையை செதுக்க அச்சிற்பி எப்பாடு பட்டுஇருப்பனோ, தனது கை நரம்புகளின் வலியையும் மீறி தலைமுறை தலைமுறையாக தான் கற்ற கலையை ..ஒரு ஆயிரம் ஆண்டு அறிவை…தன் குருதியை ……கல்லினுள் ஊற்றி அதற்க்கு உயிர் கொடுத்த அவன் கரங்கள்…… அக்கல்லும் அந்த படைப்பாலியின் உழைப்பிற்கு ஆதாரமாக புவி இருக்கும் வரை நிற்க ஆவல் பூண்டு பல நூற்றாண்டுகள் நின்றும் பார்போரை நேகிழ்விதும் வந்திருக்கும் …நடுவில் வந்தவர்கள் தெரிந்து சிதைதர்கள் – அவர்கள் விரோதிகள் – பகைவர்கள்… மன்னிக்கலாம் , இம் மூடர்களோ …இவர்களை என்ன வென்று சொல்வது – சபிப்பது . இதை பார்த்தால் சில முறை இவை இருக்கும் இடத்தில் இருந்து சிதைவதை விட எங்கோ ஐரோபிய கண்காட்சியில் இருந்து வாழ்வதே மேல்