சென்ற வாரம் ஆஸ்திரேலியா நமது இரண்டு கலைப்பொக்கிஷங்களை திரும்பக் கொடுத்தது. எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி இது. எனினும் இன்னும் ஆயிரம் ஆயிரம் பொக்கிஷங்கள் திருடுபோய் உள்ளன – இவை அனைத்தையும் திரும்பப் பெற ஒரு மாபெரும் முயற்சி தேவை.
திரும்ப வந்த சிலைகள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதமே நம் நாட்டிற்கு வந்திருக்க வேண்டும். இன்னும் பல பொக்கிஷங்கள் அதே அருங்காட்சியகத்தில் சரியான ஆவணங்கள் இல்லாதாதால் மாட்டிக் கொண்டு இருக்கின்றன. இவை அனைத்தும் பொய்யான தஸ்தாவேஜுகள் கொண்டு விற்கப்பட்டுள்ளன.
அர்தனாரி சிலை – விருத்தாசலம் கோயிலில் இருத்தும் நடராஜர் திருமேனி முழு ஆதரங்களுடன் எங்களால் நிருபணன் செய்ய பட்டதனால் மட்டுமே திரும்ப வந்துள்ளன. அருங்காட்சியகங்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி – உலகம் சுருங்கி வருகிறது – பல ஆர்வலர்கள் இணையம் மூலம் இணைத்து செயல் பட்டு இந்த திருட்டுகளை வெளி கொண்டு வருகிறோம். இணயும் அவை உண்மையை மூடி மறைக்க முடியாது.
நண்பர்கள் பலரும் இந்த முயற்சியில் நாங்கள் எப்படி இணையலாம் – எப்படி உதவ முடியும் என்று கேட்ட வண்ணம் இருக்கிறார்கள். அவர்களுக்கு இன்று ஒரு எடுத்துக்காட்டு..
அர்தனாரி சிலை பற்றிய தகவல்களை முதல் முதலில் பகிரங்கமாக நாங்கள் வெளி இட்டவுடன் பல பத்திரிகைகள் பின்ன்தொடர்ந்தன – ஆஸ்திரேலியா வானொலி , தி ஆஸ்திரேலியன் , The தி ஹிந்து , தி ஹிந்து
இதனைக் கண்ட அமெரிக்க தோழி ஒருவர் – நம் நாட்டின் கலை பற்றி அலாதி பிரியமும் தேர்ச்சியும் பெற்ற ஆர்வலர் தானே உதவ முன்வந்தார் . ஜூன் 2013 மாதம் அவர்களிடத்தில் இருந்து ஒரு குரியர் வந்தது. சென்ற பத்து ஆண்டுகளில் சுபாஷ் கபூர் ஆர்ட் ஒப் பாஸ்ட் பத்திரிகைகளில் வெளியிட்ட விளம்பரங்களை எல்லாம் தேடி பிடித்து வெட்டி செய்த சேகரம் அது.
அதை பிரித்து பார்த்தவுடனே ஒரு அதிர்ச்சி…
மறக்க முடியாத சோழர் திருமேனி ஆயிற்றே. முதல் முறை பார்த்தவுடனே மயங்கியவன் ஆயிற்றே. அதுவும் ஓவியமாக தீட்டி எனது அறையில் தினமும் கண்விழிக்கும் பொது பார்க்கும் சிற்பம் ஆயிற்றே.
உடனே தமிழக காவல் துறை இணையதளத்தில் சென்று பார்த்தேன் . மூன்றாவது உள்ள சிலை நெருடியது.
கோப்பை இணையத்தில் ஏற்றும் பொது படந்தின் அளவில் யாரோ தவறு செய்து விட்டனர். சரி செய்து கிடைத்த படம் இதோ.
ஆம் அதே சிலை தான். ஸ்ரிபுராந்தன் உமை
அதே நிறத்தில் இன்னும் ஒரு தோழி 2006 ஆம் ஆண்டு ஆர்ட் ஒப் பாஸ்ட் விற்பனை பட்டியல் தேடி அனுப்பினார்கள்.
சிங்கை ACM அருங்காட்சியகம் இந்த திருமேனியை 2007 ஆம் ஆண்டு வாங்கியது தெரிய வெந்தது.
உடனே இந்திய காவல் துறை மற்றும் அருங்காட்சியகத்திற்கு தகவல் தெரிவித்தோம். அனைத்து ஆதாரங்களையும் உடன் அனுப்பினோம். பதில் வரும் என்று நம்பிய எங்களுக்கு ஏமாற்றம் தான்.
அதிஷ்டவசமாக அமெரிக்க நீதிமன்றத்தில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் கபூரின் மேனேஜர் கொடுத்த வாக்குமூலம் திருட்டை பகிரங்கமாக்கியது.
“During the period from on or about January 2005 to November 2006, one Uma Parameshvari (known at the “$650,000 Uma for Singapore”), owned by the Central Government of India, was stolen from the Sivan Temple in India’s Ariyalur District. During the period January 2006 to on or about January 2007, defendant and other co-conspirators shipped the $650,000 Uma for Singapore, from India to the United States. On or about February 2007, defendant and other co-conspirators arranged for the sale and transport of the $650,000 Uma to the Asian Civilisations Museum in Singapore.”
உடனே சிங்கை அருங்காட்சியகம் சிலையை காட்சியில் இருந்து நீக்கியது. மேலும் அது கபூரிடத்தில் இருந்த மேலும் பல கலைப்போருல்களை வாங்கிய தகவலும் வெளிவந்தது.
இந்த இழுவை தந்திரம் திருட்டு பொருளை வாங்கி விட்டு திணறும் உலகில் உள்ள பல பிரபலமான அருங்காட்சியகங்கள் பழக்கம் போல உள்ளது. இதில் இந்த கலை கோமான் சொல்வதை கேளுங்கள்
” Art consultant ————– suggests that there may also be alternatives to repatriation, even if an artefact is found to have been illegally removed.
She says: “Sometimes, the lawful owners of the artefacts do not have the resources to build climate-controlled environments, to conserve and restore old artefacts, to present exhibitions that attract large visitorships, or to fund scholarship on these artefacts.
“In this context, I would say that it should be an option for the museum to discuss having the artefacts stay on in a loan arrangement and perhaps to present these works jointly in public exhibitions or publications.”
– See more at: http://www.straitstimes.com/the-big-story/case-you-missed-it/story/sniffing-out-booty-20140214#2″
இந்தியா ஒரு வல்லரசு – அதற்கு தனது குல தனங்களை பாதுகாக்க வாக்கு இல்லாமல் இல்லை – இவை எங்கள் தெய்வங்கள் – ஆயிரம் ஆண்டுகள் தங்கள் ஆலயங்களில் அழகாக இருந்த இவர்களை – சரியான படி ஆய்வுகள் மேற்கொள்ளாமல் – பல கோடி ரூபாய் பணம் வாரிக் கொடுத்து – அப்புறப்படுத்தி – திருட்டை ஆதரித்து – இன்று அவற்றுக்கு குளிர் சாதனம் எங்களால் மட்டுமே கொடுக்க முடியும் என்று சொல்வது மிகவும் கேவலமாக உள்ளது. இவை திருமேனிகள் – கருவறைக்குள் இருந்த தெய்வங்கள் – இவற்றுக்கு உங்கள் குளிர் சாதன பெட்டி தேவை இல்லை. எங்கள் அன்பு இதயங்கள் போதும்
ஆஸ்திரேலியாவை போல சிங்கையும் கூடிய விரைவில் அணைத்து களவு பொருட்களையும் திரும்ப கொடுக்கும் என்று நம்புவோம். மேலும் முன்னர் நாம் பார்த்த சோமஸ்கந்தர் சிலையை பற்றிய விவரங்களையும் சிங்கை ACM வெளியிட வேண்டும். இதுவரை இந்த சிலை அவர்கள் கபூரிடத்தில் வாங்க வில்லை என்று மட்டுமே சொல்லி வருகின்றனர். சரியான விவரங்கள் தராமல் இருப்பது மேலும் ஒரு கொள்ளை கூட்டத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதை தடுக்கிறது.